5
Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வெப் ஸ்டோரீஸ்வணிகம்விளையாட்டுகல்விடெக்னாலஜி

Actress Kasthuri : நடிகை கஸ்தூரி கைது.. ஹைதராபாத்தில் சுற்றி வளைத்த போலீசார்!

Kasthuri Arrest : தெலுங்கு பெண்கள் குறித்து சர்ச்சைக்குரிய கருத்துகளை பேசிய வழக்கில் நடிகை கஸ்தூரி கைது செய்யப்பட்டுள்ளார். ஹைதராபாத்தில் வைத்து சென்னை போலீசார் கஸ்தூரியை கைது செய்துள்ளனர்.

Actress Kasthuri : நடிகை கஸ்தூரி கைது.. ஹைதராபாத்தில் சுற்றி வளைத்த போலீசார்!
கஸ்தூரி கைது
umabarkavi-k
Umabarkavi K | Updated On: 16 Nov 2024 21:18 PM

தெலுங்கு பெண்கள் குறித்து சர்ச்சைக்குரிய கருத்துகளை பேசிய வழக்கில் நடிகை கஸ்தூரி கைது செய்யப்பட்டுள்ளார். ஹைதராபாத்தில் வைத்து சென்னை போலீசார் கஸ்தூரியை கைது செய்துள்ளனர். தெலுங்கு பேசும் மக்கள் குறித்து அவதூறாக பேசிய வழக்கில் நடிகை கஸ்தூரி கைது செய்யப்பட்டுள்ளார். பிரமாணர்கள் சமூகத்தின் மீது தொடர்ந்து அவதூறு பேசுவதை கண்டித்தும், வன்கொடுமை தடுப்புச் சட்டம் போல் பிரமாணர்களை பாதுகாக்க ஒரு புதிய சட்டம் இயற்ற வேண்டும் என்று மத்திய, மாநில அரசுகளை வலியுறுத்தி இந்து மக்கள் கட்சி சார்பில் சென்னை எழும்பூர் ராஜரத்தினம் மைதானத்தில் கடந்த 3ஆம் தேதி ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

ஹைதராபாத்தில் நடிகை கஸ்தூரி கைது

இந்த ஆர்ப்பாட்டத்தில் பாஜக நிர்வாகிகள் கரு நாகராஜன், இந்து மக்கள் கட்சி தலைவர் அர்ஜுன் சம்பத், நடிகை கஸ்தூரி, மதுவந்தி உள்ளிட்டோர் கலந்து கொண்டார். இந்த ஆர்ப்பாட்டத்தில் தெலுங்கு பேசும் மக்கள் குறித்து சர்ச்சைக்குரிய வகையில் நடிகை கஸ்தூரி பேசினார்.

அதாவது, திராவிடம் குறித்தும், திமுக குறித்தும் பல்வேறு விமர்சனங்களை முன்வைத்த அவர், அப்போது தெலுங்கு பேசும் மக்கள் குறித்து அவர் சர்ச்சைக்குரிய வகையில் பேசினார். கஸ்தூரியின் பேச்சுககு கடும் கண்டனங்கள் எழுந்து நிலையில், தனது பேச்சுக்கு கஸ்தூரி வருத்தம் தெரிவித்து மன்னிப்பும் கோரினார்.

இருப்பினும், கஸ்தூரியின் பேச்சுக்கு அவர் மீது பல்வேறு காவல் நிலையங்களில் புகார்கள் அளிக்கப்பட்டது. இதையடுத்து, கடந்த 5ஆம் தேதி நடிகை கஸ்தூரி மீது எழும்பூர் போலீசார் 4 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்தனர்.

Also Read : சென்னையில் மின்சார ரயில்கள் ரத்து… சிறப்பு பேருந்துகள் இயக்கம்.. எந்த ரூட் தெரியுமா?

வழக்கின் பின்னணி:

இந்த வழக்கில் கஸ்தூரியிடம் விசாரணை நடத்துவதற்கு எழும்பூர் போலீசார் முடிவு செய்தனர். இந்த வழக்கு குறித்து விசாரணக்காக நடிகை கஸ்தூக்கு சம்மன் அளிக்க கடந்த 10ஆம் தேதி அவருடை போயஸ் தோட்ட இல்லத்திற்கு போலீசார் சென்றனர். ஆனால், அவருடைய வீடு பூட்டப்பட்டிருந்தது.

இதையடுத்து, அவருடைய செல்போனை தொடர்பு கொண்ட போது, அது ஸ்விட்ச் ஆப் செய்யப்பட்டிருந்தது. இதையடுத்து அவர் தலைமறைவாகி இருக்கலாம் என்று போலீசார் சந்தேகித்தனர். இதனால் கஸ்தூரியை பிடிக்க இரண்டு தனிப்படைகள் அமைத்து தேடி வந்தனர்.

இதற்கிடையில், மதுரை திருநகர் போலீசார் பதிவு செய்த வழக்கை தனக்கு முன்ஜாமீன் கேட்டு மதுரை உயர்நீதிமன்றத்தில் நடிகை கஸ்தூரி மனு தாக்கல் செய்திருந்தார். அந்த மனுவில், பிராமண சமுதாயத்தினர் சார்பில் நடந்த கூட்டத்தில் கலந்து கொண்டு தெலுங்கு பேசும் மக்கள் குறித்து பேசியதாக என்னை முக்கிய பிரமுகர்கள் உள்பட பலர் செல்போன் மூலம் தொடர்பு கொண்டு மிரட்டல் விடுகின்றனர்.

கஸ்தூரி சிக்கியது எப்படி?

இதனால் தெலுங்கு பேசும் மக்கள் குறித்து பேசியதற்கு வருத்தம் தெரிவித்தேன். இருப்பினும், அரசியல் உள்நோக்கத்துடன் அளித்த புகாரின்பேரில் என் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. எனவே, தனக்கு முன்ஜாமீன் அளிக்க வேண்டும் என்று கூறியிருந்தார்.

இந்த மனு கடந்த 12ஆம் தேதி விசாரணைக்கு வந்தபோது, நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் கடும் கண்டனங்களை தெரிவித்தார். மேலும், கஸ்தூரியின் முன்ஜாமீன் மனுவையும் ரத்து செய்தார். இதனால் கஸ்தூரியை தேடும் பணியில் போலீசார் தீவிரமாக இருந்தனர்.

Also Read : விஜய் டிக் செய்ய உள்ள 120 பேர் யார்? த.வெ.க கட்சியின் முக்கிய நிர்வாகிகள் விரைவில் நியமனம்!

மேலும், நடிகை கஸ்தூரி ஆந்திரா, ஹைதராபாத்தில் பதுங்கி இருக்கலாம் என்று போலீசார் சந்தேகத்தினர். ஆந்திராவில் உள்ள திரைப்பட தயாரிப்பாளர் ஒருவரின் உதவியோடு நடிகை கஸ்தூரி பதுங்கி இருப்பதாக தனிப்படை போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்தே போலீசார் அங்கு விரைந்து சென்றனர்.

இந்த நிலையில், அவர் இருக்கும் இடத்தை கண்டுபிடித்த எழும்பூர் தனிப்படை போலீசார், அவரை ஹைதராபாத்தில் கைது செய்தனர். ஹைதராபாத்தில்  திரைப்பட தயாரிப்பாளர் வீட்டில் நடிகை கஸ்தூரி பதுங்கி இருந்த நிலையில், கைதாகினார். இதனை அடுத்து, அவரை சென்னைக்கு அழைத்து வந்து விசாரணை நடத்துவதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

Latest News