5
Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வெப் ஸ்டோரீஸ்வணிகம்விளையாட்டுகல்விடெக்னாலஜி

Actress Kasthuri: தெலுங்கு மக்கள் குறித்து அவதூறு.. கஸ்தூரியின் முன்ஜாமீன் மனு தள்ளுபடி..

சமூக வலைதளங்களில் தொடர்ச்சியாக கஸ்தூரி பேசிய வீடியோக்களை பார்க்கும்போது தேவையற்ற விளைவுகள் தான் ஏற்படும். கஸ்தூரி கேட்ட மன்னிப்பு அதை உணர்ந்ததாக தெரியவில்லை. அவர் கூறியதை நியாயப்படுத்த விரும்புவதாக இருக்கிறது. தெலுங்கு மக்கள் என்பது எங்கிருந்தோ வந்தவர்கள் அல்ல, அவர்கள் தமிழகத்தைச் சேர்ந்தவர்கள். தமிழகத்தின் ஒரு பகுதியினர்” என நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் தெரிவித்தார்

Actress Kasthuri: தெலுங்கு மக்கள் குறித்து அவதூறு.. கஸ்தூரியின் முன்ஜாமீன் மனு தள்ளுபடி..
கோப்பு புகைப்படம்
petchi-avudaiappan
Petchi Avudaiappan | Updated On: 14 Nov 2024 11:23 AM

நடிகை கஸ்தூரி: தெலுங்கு மக்கள் குறித்து அவதூறாக பேசியதாக தொடரப்பட்ட வழக்கில் நடிகை கஸ்தூரி முன்ஜாமீன் கோரி சென்னை உயர்நீதிமன்ற மதுரைக்கிளையில் மனுத்தாக்கல் செய்திருந்தார். இந்த மனு மீது இன்று தீர்ப்பளிக்கப்படும் என தெரிவிக்கப்பட்ட நிலையில் அந்த மனுவை தள்ளுபடி செய்து நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் உத்தரவிட்டார். இதனால் கஸ்தூரிக்கு மேலும் சிக்கல் ஏற்பட்டுள்ளது. கடந்த நவம்பர் 3  ஆம் தேதி சென்னை எழும்பூரில் பிராமண சமூக மக்களுக்கு ஆதரவாக நடைபெற்ற போராட்டத்தில் சிறப்பு அழைப்பாளராக நடிகை கஸ்தூரி பங்கேற்றிருந்தார். அந்நிகழ்ச்சியில் தெலுங்கு மக்களை அந்தபுரத்திற்கு சேவை செய்ய வந்தவர்கள் என சர்ச்சையான கருத்துகளை தெரிவித்தார்.

அவர் பேசிய வீடியோக்கள் சமூக வலைத்தளங்களில் வைரலானது. இதனைத் தொடர்ந்து போயஸ் கார்டனில் கஸ்தூரி செய்தியாளர்களை சந்தித்து தனது பேச்சுக்கு விளக்கம் அளித்தார். இது மிகப்பெரிய அளவில் சர்ச்சையை கிளப்பிய நிலையில் எக்ஸ் வலைத்தளத்தில் அறிக்கை ஒன்றை வெளியிட்டு மன்னிப்பு கேட்டார். ஆனால் கஸ்தூரி மீது சென்னை எழும்பூர் மற்றும் மதுரை திருநகர் காவல் நிலையத்தில் வழக்குப்பதிவு செய்யப்பட்டிருந்தது. இதனைத் தொடர்ந்து தான் அவர் தலைமறைவானார். ஏற்கனவே அவரை கைது செய்ய 2 தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ள நிலையில்  முன்ஜாமீன் கோரி மனு அளித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

Also Read: Crime: பள்ளி விடுதியில் மாணவர்களுக்கு பாலியல் தொல்லை.. வார்டன், பள்ளி தாளாளர் கைது!

அரசு தரப்பு – கஸ்தூரி தரப்பு விவாதம்

இந்த வழக்கு விசாரணை நேற்று உயர்நீதிமன்றம் மதுரை கிளையில் வந்தது. அப்போது, “கஸ்தூரிக்கு முன் ஜாமின் வழங்கக் கூடாது” என அரசு தரப்பில் ஆஜரான கூடுதல் அட்வகேட் ஜெனரல் பாஸ்கரன் வாதிட்டார். “கஸ்தூரியின் பேச்சு சமூக நல்லிணக்கத்தை குறைக்கும் வகையில் இருப்பதாகவும், இரு சமூகங்களுடைய மோதலை உருவாக்கும் வகையில் உள்ளதாகவும் இருக்கிறது. இந்த பேச்சு முழுக்க உள்நோக்கம் கொண்டது” எனவும் அவர் தெரிவித்தார். மேலும், “மனுதாரர் கஸ்தூரி மீது  7 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ள நிலையில், அதில் 4 பிரிவுகள் ஜாமீனில் வெளிவர முடியாத பிரிவுகள் என சுட்டிக்காட்டிய வழக்கறிஞர் ஜெனரல் பாஸ்கரன், இதுவரை 6 வழக்குகள் கஸ்தூரி மீது பதிவு செய்யப்பட்டுள்ளதாக தெரிவித்தார். எனவே அவருக்கு முன் ஜாமீன் வழங்கக்கூடாது என வாதிட்டார்.

Also Read: மருத்துவருக்கு கத்திக்குத்து.. அரசு மருத்துவமனைகளில் வருகிறது புதிய கட்டுப்பாடு!

இதனிடையே இந்த வழக்கு விசாரணையின் போது நடிகை கஸ்தூரி காணொளி வாயிலாக ஆஜரானார். அவர் தலைமறைவாக உள்ள நிலையில் வீடியோவை ஆப் செய்து விட்டு மைக்கை மட்டும் ஆன் செய்து வழக்கு தொடர்பான பேசிக் கொண்டிருந்தார். இதனால் பரபரப்பு ஏற்பட்டது.  அதே சமயம் கஸ்தூரி தரப்பில் பேசிய மூத்த வழக்கறிஞரான ஏ.கே.ஸ்ரீராம்,  “சென்னை கூட்டத்தில் மனுதாரர் சிலரை என்று குறிப்பிட்டு பேசினார். மொத்த சமூகத்திற்கும் எதிராக அவர் பேசவில்லை. இருந்தாலும் தனது பேச்சு சர்ச்சையான நிலையில் வருத்தம் தெரிவித்தார்.அதன் பிறகும் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது இந்த வழக்கில் கஸ்தூரியை போலீஸ் காவலில் எடுத்து விசாரிக்க வேண்டியது இல்லை. எனவே அவருக்கு முன் ஜாமீன் வழங்க வேண்டும்” என தெரிவித்தார்

நீதிபதி கடும் கண்டனம்

இருதரப்பு வாதங்களையும் கேட்ட பின், “தெலுங்கு சமூக பெண்கள் குறித்து கஸ்தூரி அந்தப்புரத்திற்கு வந்தவர்கள் என எப்படி கூறலாம்? அதற்கான அவசியம் என்ன?” என்று நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் கடுமையான கேள்வியை எழுப்பினார். தொடர்ந்து, “கஸ்தூரி பேசியது தேவையற்ற ஒன்று என்றும், கல்வியறிவு பெற்றவர், சமூக ஆர்வலர் என தன்னை அடையாளப்படுத்தும் அவர் எப்படி இத்தகைய கருத்தை தெரிவிக்கலாம் எனவும் கேள்வி எழுப்பினார்.

மேலும் சமூக வலைதளங்களில் தொடர்ச்சியாக கஸ்தூரி பேசிய வீடியோக்களை பார்க்கும்போது தேவையற்ற விளைவுகள் தான் ஏற்படும். கஸ்தூரி கேட்ட மன்னிப்பு அதை உணர்ந்ததாக தெரியவில்லை. அவர் கூறியதை நியாயப்படுத்த விரும்புவதாக இருக்கிறது. தெலுங்கு மக்கள் என்பது எங்கிருந்தோ வந்தவர்கள் அல்ல, அவர்கள் தமிழகத்தைச் சேர்ந்தவர்கள். தமிழகத்தின் ஒரு பகுதியினர்” என நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் தெரிவித்தார்.

Latest News