விசாரணை வளையத்திற்குள் கஸ்தூரி.. 14 நாட்கள் காவல்.. நீதிமன்றம் அதிரடி உத்தரவு!

Actress Kasthuri : ஐதராபாத்தில் கைது செய்யப்பட்ட நடிகை கஸ்தூரிக்கு 14 நாட்கள் நீதிமன்ற காவல் விதித்து எழும்பூர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. ஐதராபாத்தில் கைது செய்யப்பட்ட கஸ்தூரியை இன்று சென்னைக்கு அழைத்து வரப்பட்டு எழும்பூர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர்.

விசாரணை வளையத்திற்குள் கஸ்தூரி.. 14 நாட்கள் காவல்.. நீதிமன்றம் அதிரடி உத்தரவு!

கஸ்தூரி

Updated On: 

17 Nov 2024 15:08 PM

ஐதராபாத்தில் கைது செய்யப்பட்ட நடிகை கஸ்தூரிக்கு 14 நாட்கள் நீதிமன்ற காவல் விதித்து எழும்பூர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. ஐதராபாத்தில் கைது செய்யப்பட்ட கஸ்தூரியை இன்று சென்னைக்கு அழைத்து வரப்பட்டு எழும்பூர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர். அப்போது, அவருக்கு நவம்பர் 29ஆம் தேதி வரை நீதிமன்றம் காவல் அளித்து உத்தரவிடப்பட்டுள்ளது. கடந்த 3ஆம் தேதி சென்னையில் இந்து மக்கள் கட்சியினர் சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது. பிரமாணர்கள் சமூகத்தின் மீது தொடர்ந்து அவதூறு பேசுவதை கண்டித்தும், வன்கொடுமை தடுப்புச் சட்டம் போல் பிரமாணர்களை பாதுகாக்க ஒரு புதிய சட்டம் இயற்ற வேண்டும் என்று மத்திய, மாநில அரசுகளை வலியுறுத்தி போராட்டம் நடைபெற்றது.

விசாரணை வளையத்திற்குள் கஸ்தூரி

இதில் பாஜக நிர்வாகிகள் கரு நாகராஜன், இந்து மக்கள் கட்சி தலைவர் அர்ஜுன் சம்பத், நடிகை கஸ்தூரி, மதுவந்தி உள்ளிட்டோர் கலந்து கொண்டார்.  ஆர்ப்பாட்டத்தில் பேசிய நடிகை கஸ்தூரி, தெலுங்கு பேசும் மக்கள் குறித்து அவதூறாக பேசியது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இதற்கு பலரும் கண்டனம் தெரிவித்தனர்.

பின்னர், அவர் தெலுங்கு மக்கள் குறித்து தவறான கருத்துகளை தெரிவிக்கவில்லை. தவறாக பேசியதாக கருதினால் வருத்தம் தெரிவிப்பதாக அறிவித்தார். ஆனால், அவரது கருத்துகளுக்கு பல்வேறு தரப்பினர் எதிர்ப்பு தெரிவித்தனர்.

இந்த நிலையில், நடிகை கஸ்தூரி மீது அவதூறு நடவடிக்கை எடுக்க வேண்டும் என மதுரை திருநகர் காவல்நிலையத்தில் நாயுடு மகாஜன சங்கத்தினர் புகார் அளித்தனர். அந்த புகாரின்பேரில் போலீசார் 4 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்தனர்.

இது தொடர்பான விசாரணைக்கு ஆஜராக கோரி கஸ்தூரிக்கு போலீசார் சம்மன் வழங்க சென்றபோது முன்னதாகவே அவர் தனது வீட்டை பூட்டி விட்டு தலைமறைவாகிவிட்டார். செல்போனும் ஸ்விட்ச் ஆப் செய்யப்பட்டுள்ளதால் நடிகை கஸ்தூரியை போலீசார் தீவிரமாக தேடி வந்தனர்.

Also Read : ரயிலில் வழங்கிய உணவில் வண்டுகள்.. ரூ.50,000 அபராதம்.. அதிரடி நடவடிக்கை எடுத்த தெற்கு ரயில்வே!

கஸ்தூரிக்கு 14 நாட்கள் காவல்

இதற்கிடையில், நடிகை கஸ்தூரி தனக்கு முன் ஜாமீன் வழங்க கோரி உயர் நீதிமன்ற மதுரைகிளையில் மனு தாக்கல் செய்தார். இந்த மனுவை விசாரித்த நீதிமன்றம், கடும் கண்டனங்கள் தெரிவித்து கஸ்தூரி தாக்கல் செய்த முன்ஜாமீன் மனுவை தள்ளுபடி செய்தது.

இதனை அடுத்து, தெலுங்கு மக்கள் குறித்து அவதூறாக பேசிய வழக்கில் தலைமறைவாக இருந்த நடிகை கஸ்தூரியை பிடிக்க 2 தனிப்படைகள் அமைக்கப்பட்டு தீவிரமாக தேடி வந்தனர். அப்போது, அவர் ஆந்திரா, ஐதராபாத்தில் இருப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது..

குறிப்பாக ஐதராபாத்தில் உள்ள பஞ்சகுட்டா என்ற இடத்தில் சினிமா தயாரிப்பாளர் பாலகிருஷ்ணன் வீட்டில் பதுங்கி இருப்பதாக சென்னை போலீசாருக்கு தகவல் கிடைத்தது. அதைத் தொடர்ந்து, தனிப்படை போலீசார் ஐதராபாத் விரைந்தனர்.

எழும்பூர் நீதிமன்றம் அதிரடி

நேற்று இரவு அவர் பதுங்கி இருந்த வீட்டை முற்றுகையிட்டு தேடினர். போலீசார் வந்திருப்பதை தெரிந்ததும், கட்டிலுக்கு அடியில் போய் படுத்துக் கொண்டதாக கூறப்படுகிறது. இதனால் வீட்டிற்குள் சென்ற பெண் போலீசார் அவரை கைது செய்தனர். பின்னர், அவரை சென்னை அழைத்து வருகின்றனர்.

Also Read : விஜய் டிக் செய்ய உள்ள 120 பேர் யார்? த.வெ.க கட்சியின் முக்கிய நிர்வாகிகள் விரைவில் நியமனம்!

இன்று காலையில் அவரிடம் விசாரணை நடத்திய பிறகு, எழும்பூர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர்.  அப்போது இந்த வழக்கு தொடர்பாக விசாரித்த நீதிபதி, நடிகை கஸ்தூரியை நவம்பர் 29ஆம் தேதி வரை நீதிமன்ற காவலில் சிறையில் அடைக்க உத்தரவிட்டுள்ளார்.

தலையணை உறையை மாற்றாமல் இருந்தால் என்னாகும்?
30 வயதுக்கு பிறகும் முகத்தில் முகப்பரு எதனால் ஏற்படுகிறது..?
பெற்றோரிடம் குழந்தைகள் ரகசியமாக தெரிந்து கொள்ளும் விஷயங்கள்!
நீங்கள் வேலை பார்க்கும் இடம் சரியானதா? - அறிய டிப்ஸ் இதோ!