அதிமுக நிர்வாகி சண்முகம் கொலை வழக்கு.. கொலையாளிகளை பிடிக்க 5 தனிப்படைகள் அமைப்பு..!
அதிமுக நிர்வாகி கொலை வழக்கில் 55 வது வார்டு கவுன்சிலர் தனலட்சுமியின் கணவர் சதீஷ் உள்ளிட்ட அனைவரையும் கைது செய்ய வேண்டும் என வலியுறுத்தி போராட்டத்தில் உறவினர்கள் ஈடுபட்டனர் . அவர்களை கைது செய்தால் மட்டுமே சடலத்தை வாங்குவோம் என தெரிவித்தனர். இந்த நிலையில் சேலம் மாநகர போலீசார் ஐந்து தனிப்படை அமைத்து கொலையாளிகளை தேடி வந்த நிலையில் , சதீஷ் அருண் உள்ளிட்ட 10 பேரை போலீசார் பிற்பகலில் அதிரடியாக கைது செய்தனர். மேலும் கொலை நடந்த இடத்தில் இருந்த சிசிடிவி கேமராக்களின் பதிவுகளை ஆய்வு செய்தும் விசாரணை நடத்தி வருகின்றனர்.
அதிமுக நிர்வாகி கொலை வழக்கு: சேலம் மாநகராட்சி முன்னாள் கொண்டலாம்பட்டி மண்டல தலைவர் ஆக இரண்டு முறையும் , கடந்த 20 ஆண்டுகளுக்கும் மேலாக கொண்டலாம்பட்டி அதிமுக பகுதி செயலாளராகவும் இருந்து வந்த அதிமுக நிர்வாகி சண்முகம் வீட்டிற்கு தனது இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்த போது , மர்ம நபர்களால் வழிமறித்து வெட்டி படுகொலை செய்யப்பட்டார். அவரது உடல் சேலம் அரசு மருத்துவமனையில் பிரேத பரிசோதனைக்காக கொண்டு வரப்பட்டு, நேற்று காலை 11 மணி அளவில் பிரேத பரிசோதனை செய்யப்பட்டது. பின்னர் உறவினர்களிடம் ஒப்படைக்க போலீசார் தயாராக இருந்தபோது , உடலை வாங்க மறுத்து உறவினர்களும் அதிமுகவினரும் போராட்டத்தில் ஈடுபட்டனர் . 55 வது வார்டு கவுன்சிலர் தனலட்சுமியின் கணவர் சதீஷ் உள்ளிட்ட அனைவரையும் கைது செய்ய வேண்டும் என வலியுறுத்தி போராட்டத்தில் ஈடுபட்டனர் . அவர்களை கைது செய்தால் மட்டுமே சரதத்தை வாங்குவோம் என மறுத்துவிட்டனர்.
இந்த நிலையில் சேலம் மாநகர போலீசார் ஐந்து தனிப்படை அமைத்து கொலையாளிகளை தேடி வந்த நிலையில் , சதீஷ் அருண் உள்ளிட்ட 10 பேரை போலீசார் பிற்பகலில் அதிரடியாக கைது செய்தனர். மேலும் கொலை நடந்த இடத்தில் இருந்த சிசிடிவி கேமராக்களின் பதிவுகளை ஆய்வு செய்தும் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த நிலையில் சதிஷை முதல் குற்றவாளியாக சேர்க்க வேண்டும் என சண்முகத்தின் உறவினர்கள் மற்றும் அதிமுகவினர் தொடர்ந்து வலியுறுத்தினர். இதை அடுத்து போலீசார் விசாரணை மேற்கொண்டு, சதீஷின் உத்தரவின் பேரில் இந்த கொலை நடைபெற்றதால் , சதீஷை முதல் குற்றவாளியாக சேர்த்து எஃப் ஐ ஆர் போடப்பட்டுள்ளது.
Also Read: விக்கிரவாண்டி இடைத்தேர்தல் – முதலமைச்சர் ஸ்டாலின் வெளியிட்ட வீடியோ..!
மேலும் 55 வது வார்டில் மாநகராட்சி தொடர்பாக சாலை வசதி மற்றும் சாக்கடை அமைக்கும் பணி நடைபெறும் போதெல்லாம் தொடர்ந்து சண்முகம் , வேண்டுமென்றே பணிகளை தடுத்து நிறுத்தி வந்ததாகவும் , சதீஷ் செய்யும் தொழிலுக்கு இடையூறாக இருந்து வந்ததாலும் இந்த படுகொலை நடந்திருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. இதனிடையே 55 வது வார்டு கவுன்சிலராக உள்ள தனலட்சுமியையும் இந்த வழக்கில் சேர்த்து அவரையும் தற்போது போலீசார் தேடி வருகின்றனர்.
கடந்த மாதம் 55 வது வார்டுக்கு உட்பட்ட அம்பாள் ஏரி பகுதியில் மாநகராட்சி ஒப்பந்தப்படி சாலை அமைத்தல் மற்றும் சாக்கடை கட்டுதல் தொடர்பாக கவுன்சிலர் தனலட்சுமி பணி மேற்கொண்டிருந்த போது , அதனை சண்முகம் தடுத்து நிறுத்தியதோடு சாலை அமைக்க கூடாது என தகராறில் ஈடுபட்டதாக கூறப்படுகிறது. சம்பந்தப்பட்ட இடத்தில் சண்முகத்தின் அலுவலகம் அமைந்துள்ளதால் அந்த பகுதியில் சாக்கடைக்காக வெட்டி தொல்லை ஏற்படுத்தக் கூடாது எனக் கூறி சண்முகம் தடுத்து நிறுத்தியதோடு , வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் சண்முகத்திற்கும் , கவுன்சிலர் தனலட்சுமியின் கணவர் சதீஷ்க்கும் இடையே தகராறு ஏற்பட்டுள்ளது.
இதனால் சண்முகத்திற்கும் சதீஷ்க்கும் இடையே முன்விரோதம் ஏற்பட்டுள்ளது. மேலும் சண்முகமும் சதீஷும் சோழிய வேளாளர் இனத்தை சேர்ந்தவர்கள். இந்த நிலையில் சோழிய வேளாளர் டிரஸ்டினை சண்முகம் தொடர்ந்து தன் வசமே வைத்துள்ளதால் , அது தொடர்பாகவும் சதீஷுக்கும் சண்முகத்திற்கும் இடையே தகராறு ஏற்பட்டதாக கூறப்படுகிறது. எனவே தொடர்ந்து பல்வேறு வகைகளிலும் சதிஷிற்கு சண்முகம் தொல்லை கொடுத்து வந்ததால் , சதீஷ் கூலிப்படையை வைத்து சண்முகத்தை படுகொலை செய்ததாக தகவல் வெளியாகி உள்ளது. தற்போது வரை சதீஷ் உள்ளிட்ட 10 பேரை போலீசார் கைது செய்துள்ள நிலையில், இந்த வழக்கில் தொடர்புடைய கவுன்சிலர் தனலட்சுமி உள்ளிட்ட 4 பேரை தொடர்ந்து தேடி வருகின்றனர். இதற்கிடையில் நேற்று அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி நேரில் சென்று அவரது உடலுக்கு அஞ்சலி செலுத்தினார்.
Also Read: பிரிட்டனில் ஆட்சியை பிடிக்கும் தொழிலாளட் கட்சி.. யார் இந்த கெய்ர் ஸ்டார்மர்?