5
Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வெப் ஸ்டோரீஸ்வணிகம்விளையாட்டுகல்விடெக்னாலஜி

ADMK Meeting: ”கண்ணியம் தவறி விமர்சனம் செய்யக்கூடாது” – அதிமுக ஆலோசனை கூட்டத்தில் எடப்பாடி பழனிசாமி அறிவுறுத்தல்..

ஜெயலலிதா அழித்தால் அதிமுக அழியும் என்பது திமுக கருணாநிதி எண்ணம். கருணாநிதி அப்பாவே வந்தாலும் அதிமுக வை அழிக்க முடியாது. ஜெயலலிதா சொத்துகுவிப்பு வழக்கில் மேல் முறையீடு செல்லும் முன் விடுதலை பெற்றார். அதன் தீர்ப்பு வரும் முன் மறைந்து விட்டார். எனவே அவர் விடுதலை பெற்றவர் என்பதை சீமான் சட்டம் தெரிந்தவர்களிடம் கேட்டு தெரிந்துக்கொள்ள வேண்டும் என ஜெயகுமார் தெரிவித்துள்ளார்.

ADMK Meeting: ”கண்ணியம் தவறி விமர்சனம் செய்யக்கூடாது” – அதிமுக ஆலோசனை கூட்டத்தில் எடப்பாடி பழனிசாமி அறிவுறுத்தல்..
கோப்பு புகைப்படம்
aarthi-govindaramantv9-com
Aarthi Govindaraman | Published: 06 Nov 2024 15:00 PM

சென்னை ராயப்பேட்டையில் உள்ள அதிமுக தலைமை அலுவலகத்தில், அக்கட்சியின் பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி தலைமையில், இன்று மாவட்டச் செயலாளர்கள் கூட்டம் நடைபெற்றது. அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி தலைமையில் நடைபெற்ற இந்த ஆசோசனை கூட்டத்தில் அதிமுக பொருளாளர் திண்டுக்கல் சீனிவாசன், துணை பொது செயலாளர்கள் நத்தம் விஸ்வநாதன், கே.பி முனுசாமி, அதிமுக தலைமை நிலைய செயலாளர் எஸ்.பி வேலுமணி ஆகியோர் முன்னிலை வகித்தனர். இந்த ஆலோசனைக் கூட்டத்தில், அதிமுக’வை சேர்ந்த தமிழ்நாடு முழுவதும் உள்ள 82 மாவட்டச் செயலாளர்கள், 6 மாநில செயலாளர்கள் ஆகியோர் பங்கேற்றனர்.

ஆலோசனை கூட்டத்தை தொடர்ந்து முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் செய்தியாளர்களை சந்தித்து பேசினார் அப்போது அவர் பேசியதாவது, ” வரவிருக்கும் தேர்தல்களில் களப்பணிகளை எப்படி எல்லாம் மேற்கொள்வது என்று இந்த ஆலோசனை கூட்டத்தில் விவாதிக்கப்பட்டது. தங்கம் விலை நாளுக்கு நாள் உயர்ந்து வருகிறது. விலைவாசி உயர்வு. நிறைவேற்றாத தேர்தல் வாக்குறுதிகள். ஆளும்கட்சியின் மக்கள் விரோத போக்கு, நீட் விவகாரத்தில் திமுக மக்களை ஏமாற்றியது போன்ற செயல்களால் திமுகவினர் மீது மக்களிடையே அதிருப்தி எழுந்துள்ளது இதன் தீவிரத்தை மக்களிடையே கொண்டு செல்ல வேண்டும் என்பது குறித்தும் இந்த கூட்டத்தில் ஆலோசிக்கப்பட்டது.

த.வெ.க கட்சி பற்றி பேச அவசியம் இல்லை:

கூட்டணி முடிவு செய்வதற்கான உரிய தருணம் இது இல்லை. ஆகையால் இது குறித்து ஆலோசிக்கப்படவில்லை. திமுக கூட்டணித்தேர்தல் எப்படி இருக்கும் என்பதை கடந்த கால தேர்தல்களை வைத்து புரிந்து கொள்ளலாம். ஒரு ஆட்சி சரியில்லை, என்றால்தான் விமர்சனம் வரும். அதிமுக சரியாக இருப்பதால் விஜய் விமர்சிக்கவில்லை.

தலித்துகளுக்கு பாதுகாப்பான சூழல் தமிழ்நாட்டில் இல்லை. ஸ்மார்ட் சிட்டி அதிமுக ஆட்சியில் துவங்கப்பட்டது. தந்தை புகழ் பாடும் ஆட்சியாகவே தமிழ்நாட்டில் நடைபெற்று வருகிறது. 2026 இல் திமுக ஒழிந்து விடும். விஜய் கட்சி துவங்கியது குறித்து நாங்கள் ஆலோசிப்பதற்க்கான அவசியம் இல்லை

மேலும் படிக்க:  “மாநாடு கூட்டிச் சென்றதற்கு பணம் தரவில்லை” – த.வெ.க. நிர்வாகி மீது வேன் ஓட்டுநர்கள் புகார்!

சீமானை சாடிய முன்னாள் அமைச்சர் ஜெயகுமார்:

தமிழ் தேசியம் தமிழ் மக்களின் அடையாளம் திராவிடம் எங்களின் ஐடியாலஜி. திராவிடம் ஒடுக்கப்பட்ட மக்களின் உரிமை குரல். தமிழையும் திராவிடத்தையும் பிரிக்க முடியாது. நாம் தமிழர் கட்சி சீமான் சட்ட வல்லுனர்களுடன் ஆலோசத்து புரிந்து கொண்டு பேச வேண்டும். நாம் தமிழர் கட்சி சீமான் சேற்றை வாரி இறைக்கும் செயலில் ஈடுபட வேண்டாம்

ஜெயலலிதா அழித்தால் அதிமுக அழியும் என்பது திமுக கருணாநிதி எண்ணம். கருணாநிதி அப்பாவே வந்தாலும் அதிமுக வை அழிக்க முடியாது. ஜெயலலிதா சொத்துகுவிப்பு வழக்கில் மேல் முறையீடு செல்லும் முன் விடுதலை பெற்றார். அதன் தீர்ப்பு வரும் முன் மறைந்து விட்டார். எனவே அவர் விடுதலை பெற்றவர் என்பதை சீமான் சட்டம் தெரிந்தவர்களிடம் கேட்டு தெரிந்துக்கொள்ள வேண்டும்.

மேலும் படிக்க:  சென்னையில் கொத்தடிமைகளாக இருந்த 4 பேர்.. கைது செய்யப்பட்ட பெண்.. விசாரணையில் வெளியான திடுக்கிடும் தகவல்..

செந்தில் பாலாஜி come back கொடுத்ததாக முதல்வர் சொல்வது கேவலமானது. தவறானவர் என சொன்ன செந்தில் பாலாஜியை இப்படி சொல்வது கேடுகெட்ட தனமானது. செந்தில் பாலாஜி உங்களை எப்படி கவனிக்கிறார் என எங்களுக்கு தெரியும்” என பேசியுள்ளார்.

எடப்பாடி பழனிசாமி அறிவுறுத்தல்:

மேலும் இந்த ஆலோசனைக் கூட்டத்தில், பாஜக மற்றும் திமுகவை தவிர்த்து மற்ற கட்சிகளை விமர்சனம் செய்யக்கூடாது மாவட்ட செயலாளர்கள் ஆலோசனை கூட்டத்தில் எடப்பாடி பழனிச்சாமி அறிவுறுத்தியுள்ளார். அதோடு, டிசம்பர் மாதம் பொதுக்குழு கூட்டத்தை நடத்த வேண்டும் அதற்கான முன்னேற்பாடுகளை மாவட்டச் செயலாளர்கள் செய்ய வேண்டும் என்றும், கூட்டணி மற்றும் தேர்தல் குறித்து நான் பார்த்துக் கொள்கிறேன் மக்களுக்கு ஆற்ற வேண்டிய பணிகளை உடனடியாக செய்ய வேண்டும் என்றும் யாரையும் கண்ணியம் தவறி விமர்சனம் செய்யக்கூடாது என்றும் குறிப்பிட்டுள்ளார்.

 

 

Latest News