5
Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வெப் ஸ்டோரீஸ்வணிகம்விளையாட்டுகல்விடெக்னாலஜி

ரீ என்ட்ரியா? சசிகலாவுக்கு Exit-யே கொடுத்தாச்சு” ஜெயக்குமார் விமர்சனம்!

சென்னை பட்னம்பாக்கத்தில் உள்ள இல்லத்தில் அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர், ”தேர்தலை கண்டு அதிமுகவுக்கு பயம் இல்லை. ஈரோடு கிழக்கு இடைத் தேர்தல் சரியாக நடந்திருந்தால் நாங்கள் இந்த தேர்தலில் களம் கண்டிருப்போம். சசிகலாவுக்கும் அதிமுகவுக்கும் என்ன சம்மதம். அவர் Entry என்று சொல்கிறார். ஆனால் அவருக்கு ஏற்கனவே Exit கொடுக்கப்பட்டுவிட்டது. ஜாதி மதம் வேறுபாடு இல்லாமல் இருக்கு கட்சி அதிமுக, இங்கு எல்லோரும் சமம் என்ற நிலை தான் இருக்கிறது" என்று பேசியுள்ளார்.

ரீ என்ட்ரியா? சசிகலாவுக்கு Exit-யே கொடுத்தாச்சு” ஜெயக்குமார் விமர்சனம்!
சசிகலா-ஜெயக்குமார்
Follow Us
umabarkavi-k
Umabarkavi K | Published: 17 Jun 2024 18:14 PM

”தேர்தலை கண்டு அதிமுகவுக்கு பயம் இல்லை” சென்னை பட்னம்பாக்கத்தில் உள்ள இல்லத்தில் அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர், “ஆர்.எஸ்.பாரதிக்கும் திமுகவுக்கு அதிமுகவை பற்றி பேச எந்த முகாந்திரமும் இல்லை, அருகதை இல்லை. 2015, ஆர்.கே.நகர் இடைத்தேர்தல், 2011ல் புதுக்கோட்டை இடைத்தேர்தலில் திமுக போட்டியிடாமல் இருத்து ஏன்? 2023ல் விக்ரபாண்டி இடைத்தேர்தலில் அதிகார துஷ்பிரயோகம் நடக்கிறது. அனைத்து அமைச்சர்களும் அங்கே முகாமிட்டுள்ளனர். காலம் காலமாக இரட்டை இலைக்கு ஓட்டு போட்ட கைகள் மாறவே மாறது. மக்களும் தேர்தலை புறக்கணிப்பார்கள். தங்களுக்கு வாக்கு வரும் என்று வானத்தை வேடிக்கை பார்க்க வேண்டியது தான். விக்கிரவாண்டி இடைத்தேர்தலை எதிர்கொள்ள 500 கோடி ரூபாய் செலவு செய்ய உள்ளனர். தேர்தலை கண்டு அதிமுகவுக்கு பயம் இல்லை.

Also Read: அடுத்த ஒரு வாரத்திற்கு கொட்டப்போகுது மழை.. எங்கெல்லாம் தெரியுமா?

“சசிகலாவுக்கு Exit-யே கொடுத்தாச்சு”

ஈரோடு கிழக்கு இடைத் தேர்தல் சரியாக நடந்திருந்தால் நாங்கள் இந்த தேர்தலில் களம் கண்டிருப்போம். விக்கிரவாண்டி தேர்தல் Watse of money, waste of time, waste of fuel. சசிகலாவுக்கும் அதிமுகவுக்கும் என்ன சம்மதம். அவர் Entry என்று சொல்கிறார். ஆனால் அவருக்கு ஏற்கனவே Exit கொடுக்கப்பட்டுவிட்டது. ஜாதி மதம் வேறுபாடு இல்லாமல் இருக்கு கட்சி அதிமுக, இங்கு எல்லோரும் சமம் என்ற நிலை தான் இருக்கிறது.

பாஜகவுடன் கூட்டணியே இல்லை. அண்ணாமலை மாற்றம் செய்தாலும் சரி, பின்லேடன் வந்தாலும் சரி கூட்டணி இல்லை. தமிழிசை சௌந்தரராஜன் பொது மேடையில் அமித்ஷா பேசியது கோபம் போல் தான் தெரிகிறது, அப்படி ஒரு பெண்ணை பொது மேடையில் நடத்தியிருக்க கூடாது, அது தவறு” என்றார்.

முன்னதாக, நேற்று பேசிய சசிகலா, “அதிமுகவுக்கு நல்ல நேரம் வந்துவிட்டது. நான் இத்தனை நாள் சொன்னது வேறு. நான் சொல்லி வந்த நேரம் இதுதான். தமிழக மக்கள் அதிமுக பக்கம் இருப்பார்கள். 2026ஆம் ஆண்டில் தனிப்பெரும்பான்மையுடன் அதிமுக ஆட்சி அமைக்கும். நான் எப்போதும் அதிகம் பேசமாட்டேன். முக்கியமான நேரத்தில் தான் குரல் கொடுப்பேன். விரைவில் தமிழகம் முழுவதும் சுற்றுபயணம் மேற்கொள்ள உள்ளேன் திமுகவின் பிடியில் இருந்து தமிழக மக்களை காக்க அதிமுக ஆட்சி வந்தே ஆக வேண்டும். அதிமுக இடைத்தேர்தலை புறக்கணித்து இருப்பது தவறானது. அதிமுக முடிந்துவிட்டது என யாரும் நினைக்க வேண்டாம். ஏனென்றால் என்னுடைய என்டிரி ஆரம்பம் ஆகிவிட்டது” என்றார்.

Also Read: நாடு முழுவதும் பக்ரீத் கொண்டாட்டம்.. இஸ்லாமியர்கள் சிறப்பு தொழுகை நடத்தி உற்சாகம்!

Latest News