5
Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வெப் ஸ்டோரீஸ்வணிகம்விளையாட்டுகல்விடெக்னாலஜி

விஜய்யுடன் கைகோர்க்கிறதா அதிமுக? எடப்பாடி பழனிசாமி கொடுத்த நச் பதில்

கடந்த அக்டோபர் 27ஆம்  தேதி விழுப்புரம் மாவட்ட விக்கிரவாண்டியில் உள்ள வி.சாலையில் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநாடு நடைபெற்றது. இந்த மாநாட்டில்  தமிழக வெற்றிக் கழகத்தின் கொள்கைகள், கோட்பாடுகள், குறிக்கோள்கள் போன்றவற்றை விஜய் அறிவித்தார். மேலும், திமுக, பாஜக கட்சிகளை வெளிப்படையாக கடுமையாக விமர்சித்தார்.

விஜய்யுடன் கைகோர்க்கிறதா அதிமுக? எடப்பாடி பழனிசாமி கொடுத்த நச் பதில்
எடப்பாடி பழனிசாமி – விஜய் (picture credit: PTI)
umabarkavi-k
Umabarkavi K | Updated On: 18 Nov 2024 18:58 PM

சிறப்பாக செயல்படுவதால் அதிமுக பற்றி மாநாட்டில் விஜய் பேசவில்லை எனறு அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி கூறியுள்ளார்.  கடந்த அக்டோபர் 27ஆம்  தேதி விழுப்புரம் மாவட்ட விக்கிரவாண்டியில் உள்ள வி.சாலையில் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநாடு நடைபெற்றது. இந்த மாநாட்டில்  தமிழக வெற்றிக் கழகத்தின் கொள்கைகள், கோட்பாடுகள், குறிக்கோள்கள் போன்றவற்றை கட்சி தலைவர் விஜய் அறிவித்தார். மேலும், திமுக, பாஜக கட்சிகளை வெளிப்படையாக கடுமையாக விமர்சித்தார்.  தமிழக அரசியலில் கொள்கை எதிரி பாஜக என்று குறிப்பிட்டார்.

விஜய்யுடன் கைகோர்க்கிறதா இபிஎஸ்?

ஆனால் அரசியல் எதிரி திமுக தான் எனக் குறிப்பிட்டார். திமுகவினர் திராவிட மாடல் என்று சொல்லிக் கொண்டு ஒரு குடும்பம் கொள்ளையடித்துக் கொண்டிருப்பதாக குறிப்பிட்டார். திமுகவினர், பாஜகவினர்  பார்த்து பாசிக சக்திகள் என்று கூறுவதாக குறிப்பிட்ட அவர்,  நீங்கள் செய்வது பாயாச அரசியலா என்று கேள்வி எழுப்பினார்.

மேலும், ”இந்த நாட்டை பாழ்படுத்தும் பிளவுவாத அரசியலை செய்பவர்கள் த.வெ.க முழு எதிரி. இன்னொன்று ஊழல் மலிந்து கலாசாரம். ஊழல் வைரஸ் மாதிரி பரவிக்கிடக்கும். அதை ஒழித்தாக  வேண்டும்.

பிளவுவாத சக்திகளை கூட நாம் எளிதில் கண்பிடித்து விடலாம்.  ஆனால் ஊழலை கண்டுபிடிக்க முடியாது” என திமுக மற்றும் பாஜகவை கடுமையாக விமர்சித்திருந்தார்.  இப்படி திமுக, பாஜகவை கடுமையாக விமர்சித்த விஜய், அதிமுகவை விஜய் விமர்ச்சிக்கவில்லை. இதனால் பலரும் பல கேள்விகள் எழுப்பினர்.

Also Read :  ”நீங்கள் எதிர்பார்க்கும் குரலில் பேச முடியாது” விமர்சனங்களுக்கு துர்காதேவி பதிலடி!

எடப்பாடி  பழனிசாமி பதில்:

அதிமுக வாக்குகளை குறிவைக்கும் நோக்கில் அதிமுகவை விஜய் விமர்சிக்காமல் தவிர்த்திருக்கலாம் என்று பேச்சுக்கள் அடிபட்டது. இந்த நிலையில், அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி இதற்கு பதிலளித்துள்ளார்.

இன்று செய்தியாளர்களை சந்தித்த அவர், தமிழக வெற்றிக் கழகத்தின் கொள்கை, திமுக மீது வைத்த விமர்சனம் குறித்து பதிலளித்தார். செய்தியாளர்கள் சந்திப்பில் கூட்டணி குறித்து அவரிடம் கேட்கப்பட்டது.

அதற்கு பதிலளித்த எடப்பாடி பழனிசாமி, “ஒவ்வொரு கட்சிக்கும் ஒவ்வொரு கொள்கை இருக்கிறது. அந்த கொள்கையின் அடிப்படையில் கூட்டணி ஆட்சி என்பதை நடிகர் விஜய் கூறினார். அதில் சரியா? தவறா? என கூற முடியாது. சட்டப்பேரவை தேர்தலுக்கு இன்னும் ஒன்றரை ஆண்டுகள் உள்ளது.

விஜய் இப்போது தான் கட்சி தொடங்கி இருக்கிறார். ஒவ்வொரு கட்சிக்கு ஒவ்வொரு நிலைப்பாடு உள்ளது. அதன் அடிப்படையில் ஆட்சியில் பங்கு பற்றி விஜய் தனது நிலைப்பாட்டை கூறினார். அதிமுகவை பொறுத்தவரை கூட்டணி என்பது வேறு, கொள்கை என்பது வேறு.

”கொள்கை வேறு.. கூட்டணி வேறு”

தேர்தல் சமயத்தில் தான் கூட்டணி குறித்து முடிவு எடுக்க முடியும். தேர்தல் கூட்டணி அந்தந்த சூழலுக்கு ஏற்ப அமைக்கப்படும். ஒத்த கருத்துள்ள கட்சிகளுடன் அதிமுக கூட்டணி அமைக்கும்” என்றார்.

மேலும், தமிழக வெற்றிக் கழக மாநாட்டில் அதிமுகவை விஜய் விமர்சிக்கவில்லை என்ற கேள்விக்கு பதிலளித்த எடப்பாடி பழனிசாமி, “ஒரு நல்ல எண்ணத்தின் அடிப்படையில் மாநாட்டில் விஜய் பேசியுள்ளார். தனது கருத்துகளை கூறுவது அவரது சுதந்திரம்.

சிறப்பாக செயல்படுவதால் அதிமுகவை பற்றி மாநாட்டில் விஜய் பேசவில்லை” என்றார். தொடர்ந்து பேசிய அவர், “கொள்கையே இல்லாத கூட்டணி திமுக தான். நாங்கள் ஒத்த கொள்கையுடன் கட்சிகள் என்று திமுகவில் அங்கம் வசிக்கும் கட்சிகள் சொல்கிறார்கள்.

Also Read : 20% தீபாவளி போனஸ்.. சர்க்கரை ஆலை ஊழியர்கள் குஷி.. யார் யாருக்கு எவ்வளவு?

அப்படி இருந்தால், திமுகவுக்கும், அதன் கூட்டணி கட்சிகளுக்கும் ஒரே கொள்கைதான் இருக்கிறதா? அப்போ ஏன தனித் தனி கட்சி? ஒரே கட்சியாக இருந்திடலாமே. எனவே, அதிமுகவை பொறுத்தவரை கூட்டணி என்பது வேறு. கொள்கை என்பது வேறு. அதேபோல கூட்டணி என்பது தேர்தலை பொறுத்து தான் இருக்கும்” என்றார்.

Latest News