“விஜய்யை விமர்சிக்காதீங்க” இபிஎஸ் போட்ட ஆர்டர்.. 2026 தேர்தலில் பூகம்பம்தான் போலயே!

அதிமுக vs த.வெ.க: தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய் பற்றி விமர்சனம் செய்யக் கூடாது என்று அதிமுக நிர்வாகிகளுக்கு எடப்பாடி பழனிசாமி கட்டளையிட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.  இதனால், வரும் 2026 தமிழக சட்டப்பேரவை தேர்தலில் அதிமுக மற்றும் த.வெ.க இடையே கூட்டணி ஏற்பட வாய்ப்பு இருப்பதாக அரசியல் வட்டாரத்தில் பேசப்பட்டு வருகிறது.

விஜய்யை விமர்சிக்காதீங்க இபிஎஸ் போட்ட ஆர்டர்.. 2026 தேர்தலில்  பூகம்பம்தான் போலயே!

விஜய் - எடப்பாடி பழனிசாமி (picture credit: PTI)

Updated On: 

02 Nov 2024 16:57 PM

தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய் பற்றி விமர்சனம் செய்யக் கூடாது என்று அதிமுக நிர்வாகிகளுக்கு எடப்பாடி பழனிசாமி கட்டளையிட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.  தமிழ் சினிமாவில் உச்சபட்ச நடிகராக இருக்கும் விஜய், தற்போது அரசியல் தலைவரகா அவதாரம் எடுத்திருக்கிறார். கடந்த பிப்ரவரி 2ஆம் தேதி தமிழக வெற்றிக் கழகம் என்ற கட்சியை தொடங்கினார். வரும் 2026 சட்டப்பேரவை தேர்தலை குறிவைத்து தமிழக வெற்றிக் கழக எனும் கட்சியை தொடங்கி உள்ளார். அரசியல் தொடங்கிய பிறகு, சமூக பிரச்னைகளுக்கு குரல் கொடுத்து வருகிறது.

“விஜய்யை விமர்சிக்க கூடாது”

இதன்பிறகு அனைவரும் எதிர்பார்த்து காத்திருந்து தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநாடு கடந்த அக்டேபார் 27ஆம் தேதி விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டியில் உள்ள வி.சாலையில் நடந்தது. இந்த மாநாட்டில் விஜய் மீது ஒட்டுமொத்த அரசியல் தலைவர்களின் கவனமும் இருந்து.

எதிர்பார்ப்புக்கு ஏற்றது போலவே விஜய் தனது மாநாட்டில் தெளிவாக தனது கொள்கைகள், கோட்பாடுகள், குறிக்கோள்களை எடுத்துரைத்தார். மதச்சார்பற்ற சமூக நிதி அரசியலை முன்னேக்க இருப்பதாகவும், பிளவுவாத அரசியல் பேசுபவர்களும், ஊழல் அரசியலுமே தங்கள் கட்சியின் எதிரி என்றும் கூறினார்.

தந்தை பெரியார் கட்சியின் கொள்கை தலைவராக பின்பற்றப்படுவார் என்றும் பெரியாரின் கடவுள் மறுப்பு கொள்கைகளுடன் உடல்பாடில்லை என்றும் விளக்கினார். இதில் பிளவுவாத அரசியல் என பாஜகவும், ஊழல் என திமுகவைம் கடுமையாக விமர்சித்த விஜய், அதிமுகவை பற்றி அவர் எதுவும் பேசவில்லை.

Also Read : “அண்ணன் என்ன.. தம்பி என்ன? எதிரி எதிரிதான்” மீண்டும் விஜய்யை கடுமையாக சாடிய சீமான்!

அதிமுக நிர்வாகிகளுக்கு எடப்பாடி பழனிசாமி கட்டளை?

அதேநேரத்தில், எம்.ஜி.ஆரை புகழ்ந்து பேசினார். மேலும், ஒன்றே குலம் ஒருவனே தேவன் என்ற அண்ணாவின் தத்துவத்தை ஏற்றுக் கொள்வதாகவும் அவர் கூறினார். மாநாட்டில் விஜய் பேச்சியதற்கு பாஜக, திமுக தரப்பில் இருந்து கடுமையான எதிர்ப்புகள் கிளம்பியது.

அதேநேரத்தில், அதிமுக வாக்குகளை குறிவைக்கும் நோக்கில் அதிமுகவை விஜய் விமர்சிக்காமல் தவிர்த்திருக்கலாம் என்று பேச்சுக்கள் அடிபட்டது.  மேலும், ஆனால், விஜய்யின் பேச்சு அதிமுகவினர் வரவேற்றனர். மேலும், பாராட்டுகளையும் தெரிவித்து வருகின்றனர்.

இதனால், 2026 சட்டப்பேரவை தேர்தலில் அதிமுகவுக்கும், தமிழக வெற்றிக் கழக கட்சிக்கும் இடையே கூட்டணி ஏற்பட வாய்ப்பு இருப்பதாக அரசியல் வட்டாரத்தில் பேச்சுகள் நிலவுகிறது. இந்த சூழலில்,  தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய் பற்றி விமர்சனம் செய்யக் கூடாது என்று அதிமுக நிர்வாகிகளுக்கு எடப்பாடி பழனிசாமி கட்டளையிட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

Also Read : ஒரே நிகழ்ச்சியில் திருமா – விஜய் ? எங்கே ? எப்போது? அரசியலில் நடக்கப்போகும் புது ட்விஸ்ட்

அதிமுகவுடன் கைக்கோர்கிறாரா விஜய்?

விஜய் பற்றியோ, அவரது மாநாடு பற்றியோ அதிமுக தலைவர்கள், நிர்வாகிகள் மற்றும் பேட்டி அளிக்கும் அதிகாரப்பூர்வ செய்தி தொடர்பாளர்கள் யாரும் விஜய் குறத்து விமர்சிக்கக் கூடாது என்றும் கட்டளையிட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

இதன் மூலம் வரும் 2026 சட்டப்பேரவை தேர்தலில் விஜய் கட்சியுடன் கூட்டணி அமைப்பதில் எந்தவித சிக்கலும் ஏற்படாமல் இருக்க இத்தகைய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அதிமுக முன்னாள் அமைச்சர் ஒருவர் கூறியுள்ளதாக சொல்லப்படுகிறது.

விஜய் கட்சி தொடங்க உள்ளதாக தகவல்கள் வெளியான சமயத்தில் இருந்தே, அவர் சீமானுடன் கூட்டணி வைக்க வாய்ப்புள்ளதாக அரசியல் வட்டாரத்தில் பேசப்பட்டன. ஆனால், கட்சி தொடங்கி கொள்கையை சொன்னதில் இருந்து விஜயை சீமான் விமர்சனம் செய்தி வருகிறார்.

அதேபோல, விஜயின் அரசியல் வருகை தொடர்பான செய்திகள் வெளியான சமயத்தில் இருந்தே, அவருடன் இணக்கமான போக்கையே விசிக தலைவர் திருமாவளவன் பேணி வந்தார். ஆனால், பாசிசம் தொடர்பான விஜயின் கருத்தை மேற்கோள் காட்டி அவரை திருமா விமர்சிக்க தொடங்கி உள்ளார்.

ஆனால், அதிமுக விஜய்யின் பேச்சுக்கு வரவேற்பு  தெரிவித்து வரும் சூழலில், விஜய் பற்றி  விமர்சனம் செய்ய வேண்டாம் என்று கட்டளையிட்டுள்ளதாக கூறப்படுகிறது. இது 2026 தேர்தலில் அதிமுக, த.வெ.க இடையே கூட்டணி வைக்க வாய்ப்புள்ளதாக அரசியல் வட்டாரத்தில் பேசப்படுகிறது.

 

இரத்த சோகை உள்ளவர்கள் எடுத்துக்கொள்ள வேண்டிய உணவுகள்..!
காலையில் 10 நிமிடங்கள் ஓடுவதால் கிடைக்கும் நன்மைகள்..!
குழந்தை பெற்ற பிறகு தம்பதியினர் செய்ய வேண்டிய விஷயங்கள்!
உங்களின் வருமானம் பற்றி அறியக்கூடாதவர்கள்!