Chennai Air Show: களைக்கட்டும் வான் சாகச நிகழ்ச்சிகள்.. சென்னை மெரினா கடற்கரை ரெட் சோனாக அறிவிப்பு..

இந்தியாவின் முக்கிய போர் விமானங்களான ரபேல் உள்ளிட்ட விமானங்களும் இன்று ஒத்திகை மேற்கொண்டது. இந்தியாவின் சிறந்த வான் சாகச குழுவினரான சார்ங் மற்றும் சூரிய கிரண் குழுவினரும் வானில் தாழ்வாக பறந்து ஒத்திகை மேற்கொண்டது. பேரிடர் காலங்களில் விமானப்படை வீரர்கள் மக்களை எப்படி மீட்கிறார்கள் உள்ளிட்ட செயல்முறை விளக்கங்களுக்கான ஒதிகையும், விமானப்படை வீரர்கள் போர்க்களத்தில் எப்படி சண்டையிடுகின்றனர் உள்ளிட்ட ஒத்திகை இன்றைய தினம் நடைபெற்றது.

Chennai Air Show: களைக்கட்டும் வான் சாகச நிகழ்ச்சிகள்.. சென்னை மெரினா கடற்கரை ரெட் சோனாக அறிவிப்பு..

கோப்பு புகைப்படம்

Updated On: 

02 Oct 2024 16:07 PM

விமானப்படை சாகச நிகழ்ச்சியை முன்னைட்டு சென்னை மெரினா கடற்கரை பகுதி முழுவதும் ரெட் சோனாக அறிவிக்கப்பட்டுள்ளது. 92 வது இந்திய விமானப்படையில் ஆண்டு விழாவை ஒட்டி வருகின்ற 6 தேதி விமானப்படையில் வான் சாகச நிகழ்ச்சி சென்னை மெரினா கடற்கரை நேற்று முதல் தொடங்கி நடைபெற்று வருகின்றது. நேற்று நடைபெற்ற ஒத்திகையில் ரபேல், தேஜஸ், உள்ளிட்ட இந்திய போர் விமானங்கள் ஒத்திகையில் ஈடுபட்டது. இந்தியாவின் அதிநவீன விமானங்கள் முதல் பாரம்பரிய விமானங்கள் வரை அனைத்து விமானங்களும் வான் சாகச நிகழ்ச்சிகளுக்கான ஒத்திகையில் பங்கேற்று வருகிறது. இரண்டாம் நாள் இன்று இந்தியாவின் 42 விமானங்கள் ஒத்திகை மேற்கொண்டது. இந்தியாவில் தயாரிக்கபட்ட தேஜஸ், பிரசாந்த், ஹச் டி டி 40, உள்ளிட்ட விமானங்கள் இன்று ஒத்திகையில் பங்கேற்றது.


அதேபோல் இந்தியாவின் முக்கிய போர் விமானங்களான ரபேல் உள்ளிட்ட விமானங்களும் இன்று ஒத்திகை மேற்கொண்டது. இந்தியாவின் சிறந்த வான் சாகச குழுவினரான சார்ங் மற்றும் சூரிய கிரண் குழுவினரும் வானில் தாழ்வாக பறந்து ஒத்திகை மேற்கொண்டது. பேரிடர் காலங்களில் விமானப்படை வீரர்கள் மக்களை எப்படி மீட்கிறார்கள் உள்ளிட்ட செயல்முறை விளக்கங்களுக்கான ஒதிகையும், விமானப்படை வீரர்கள் போர்க்களத்தில் எப்படி சண்டையிடுகின்றனர் உள்ளிட்ட ஒத்திகை இன்றைய தினம் நடைபெற்றது.

அதே போன்று விமானங்கள் பல்வேறு கார்த்திகேயன், தனுஷ்,மரீனா உள்ளிட்ட ஃபார்மேஷன்களிலும் வானில் வட்டமிட்ட படியும், பல்டி அடித்தும் தலைகீழாக விமானங்களை இயக்கியும் சாகச ஒத்திகை மேற்கொண்டனர். வானில் 8000 அடியில் இருந்து பாராசூட் மூலம் விமானப்படை வீரர்கள் குதித்து சாகசம் செய்த காட்சிகள் இடம் பெற்றன.


வான் சாகச நிகழ்ச்சிக்காக ஒத்திகைகள் நடந்து வரும் நிலையில் சென்னை மெரினா கடற்கரை ரெட் சோனாக அறிவிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக காவல்துறை வெளியிட்ட அறிவிப்பில். “ விமானப்படை தின அணிவகுப்பு 2024 நிகழ்ச்சியின் ஒரு பகுதியாக பறக்கும் மற்றும் ஏரோபாட்டிக்ஸ் நிகழ்ச்சிகள் 6-10-2024 அன்று சென்னை மெரினாவில் நடைபெறவுள்ளது. இதில் மாண்புமிகு தமிழக ஆளுநர், தமிழக முதலமைச்சர், விமானப்படை தலைவர், தலைமைச்செயலாளர், மாநில அமைச்சர்கள், இராணுவ உயரதிகாரிகள் மற்றும் மூத்த ஆயுதப்படை அதிகாரிகள் கலந்து கொள்ள உள்ளனர். இதனை முன்னிட்டு ஒத்திகைகள் 1.10.2024 முதல் 5.10.2024 வரை மெரினா கடற்கரைப் பகுதியில் நடைபெறவுள்ளது.

Also Read: இந்திய ரூபாய் நோட்டிற்கு காந்தியின் புகைப்படம் முதல் தேர்வு அல்ல.. முதல் தேர்வு என்ன தெரியுமா?

எனவே பாதுகாப்பு அலுவலின் பொருட்டு சென்னை விமான நிலையம் மற்றும் மெரினா கடற்கரை பகுதியை 1.10.2024 முதல் 6-10-2024 வரை (அரசு ஏற்பாடுகள் தவிர) சிவப்பு மண்டலமாக அறிவிக்கப்பட்டு (RED ZONE), அந்த பகுதிகளில் Remotely Piloted Aircraft Systems (RPAS)/Drone உள்ளிட்ட எந்த விதமான பொருட்களும் பறக்கவிட தடை விதிக்கப்படுகிறது” என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Also Read:  10 மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை.. 5 நாட்களுக்கு கொட்டப்போகும் மழை.. எந்தெந்த பகுதிகளில்?

6 ஆம் தேதி நடைபெறும் வான் சாகச நிகழ்ச்சி காலை 11 மணிக்கு சென்னை மெரினா கடறகரையில் நடைபெறுகிறது. இந்நிகழ்ச்சியில் தமிழ்நாடு முதலமைச்சர் ஸ்டாலின், முப்படை தளபதிகள் மற்றும் அதிகாரிகள் சிறப்பு விருந்தினர்களாக கலந்துக்கொள்கினறனர்.

மலச்சிக்கல் பிரச்னையை தடுக்க டிப்ஸ்
பச்சை ஆப்பிள் சாப்பிட்டால் இவ்வளவு நன்மைகளா?
பப்பாளி விதையில் கொட்டிக்கிடக்கும் நன்மைகள்
தினமும் ஒரு ஸ்பூன் தேங்காய் எண்ணெய் குடித்தால் என்னாகும்?