Chennai Air Show: சென்னை ஏர் ஷோ போற பிளான் இருக்கா? கூடுதல் பேருந்துகள் அறிவிப்பு.. பார்க்கிங் உள்ளிட்ட முழு விவரம் உள்ளே..
நாளை நடைபெற இருக்கும் நிகழ்ச்சியில், தமிழ்நாடு முதலமைச்சர் மு.க ஸ்டாலின், முப்படை தளபதிகள் மற்றும் அதிகாரிகள் கலந்துக்கொள்ள உள்ளனர். இதற்கான ஒத்திகை நிகழ்ச்சிகள் கடந்த வாரம் முதல் நடைபெற்று வருகிறது. வான் சாகச நிகழ்ச்சிக்காக ஒத்திகைகள் நடந்து வரும் நிலையில் சென்னை மெரினா கடற்கரை ரெட் சோனாக அறிவிக்கப்பட்டுள்ளது.
92 வது இந்திய விமானப்படையின் ஆண்டு விழாவை ஒட்டி வருகின்ற 6 தேதி விமானப்படையின் வான் சாகச நிகழ்ச்சி சென்னை மெரினா கடற்கரையில் நடைபெற உள்ளது. இதற்கான ஒத்திகை நிகழ்ச்சி கடந்த சில நாட்களாக நடைபெற்று வருகிறது. நாளை நடைபெற இருக்கும் வான் சாகச நிகழ்ச்சியில், ரபேல், தேஜஸ், உள்ளிட்ட இந்திய போர் விமானங்கள் கலந்துக்கொள்ளும். அதேபோல், இந்தியாவின் அதிநவீன விமானங்கள் முதல் பாரம்பரிய விமானங்கள் வரை அனைத்து விமானங்களும் வான் சாகச இதில் இடம்பெற உள்ளது. இந்தியாவின் சிறந்த வான் சாகச குழுவினரான சார்ங் மற்றும் சூரிய கிரண் குழுவினரும் இதில் பங்குபெற உள்ளனர். சாரங் மற்றும் சூரிய கிரண் வான் சாகச நிகழ்ச்சிகளுக்கு பெயர் பெற்றது.
நாளை நடைபெற இருக்கும் நிகழ்ச்சியில், தமிழ்நாடு முதலமைச்சர் மு.க ஸ்டாலின், முப்படை தளபதிகள் மற்றும் அதிகாரிகள் கலந்துக்கொள்ள உள்ளனர். இதற்கான ஒத்திகை நிகழ்ச்சிகள் கடந்த வாரம் முதல் நடைபெற்று வருகிறது. வான் சாகச நிகழ்ச்சிக்காக ஒத்திகைகள் நடந்து வரும் நிலையில் சென்னை மெரினா கடற்கரை ரெட் சோனாக அறிவிக்கப்பட்டுள்ளது.
அதாவது, “ பாதுகாப்பு அலுவலின் பொருட்டு சென்னை விமான நிலையம் மற்றும் மெரினா கடற்கரை பகுதியை 1.10.2024 முதல் 6-10-2024 வரை (அரசு ஏற்பாடுகள் தவிர) சிவப்பு மண்டலமாக அறிவிக்கப்பட்டு (RED ZONE), அந்த பகுதிகளில் Remotely Piloted Aircraft Systems (RPAS)/Drone உள்ளிட்ட எந்த விதமான பொருட்களும் பறக்கவிட தடை விதிக்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதற்காக பல்வேறு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. முக்கியமாக வான் சாகச நிகழ்ச்சிகளை பொது மக்கள் கண்டு களிக்கலாம் என என்பதால் சென்னை மாநகர போக்குவரத்து கழகம் தரப்பில் கூடுதல் பேருந்துகள் இயக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக வெளியிடப்பட்ட அறிவிப்பில், “ இந்திய விமானப்படை தினத்தை முன்னிட்டு, 06.10.2024 ஞாயிற்றுக்கிழமை அன்று, சென்னை மெரினா கடற்கரையில் நடைபெறும் விமானப்படை சாகச நிகழ்வுகளை காண வரும் பொதுமக்களின் நலன் சுருதி, மாநகர் போக்குவரத்துக் கழகம் சார்பாக காலை 8:00 மணி முதல் சென்னையின் பல்வேறு பகுதிகளில் இருந்து அண்ணா சதுக்கத்திற்கு வழக்கமாக இயக்கப்படும் 120 பேருந்துகளுடன் கூடுதலாக 75 பேருந்துகளும், அரசினர் பூங்கா மெட்ரோ ரயில் நிலையம் மற்றும் டி.எம்.எஸ் மெட்ரோ ரயில் நிலையங்களில் இருந்து 25 சிற்றுந்துகளும் (Small Bus) இயக்கப்பட உள்ளது.
அரசினர் பூங்கா மெட்ரோ ரயில் நிலையத்திலிருந்து சென்னை பல்கலைக்கழகம் வரை 3 நிமிட இடைவெளியில் சிற்றுந்துகளும், அதேபோல், டி.எம்.எஸ் மெட்ரோ ரயில் நிலையத்தில் இருந்து பாக்டர் ராதாகிருஷ்ணன் சாலையில் உள்ள வி.எம்.தெரு வரை 2 நிமிட இடைவெளியில் மொத்தம் 25 சிற்றுந்துகள் இயக்கப்பட உள்ளன.
மேலும், முக்கிய பேருந்து நிலையங்களில் அலுவலர்களை நியமித்து பேருந்துகள் இயக்கத்தினை கண்காணிக்கவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. எனவே, பொதுமக்கள் இந்த பேருந்து வசதியினை பயன்படுத்தி சிரமமின்றி பயணிக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது” என தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் படிக்க: ஈரானுக்கு எதிராக இஸ்ரேலை தூண்டிய டிரம்ப்.. 24 மணி நேரத்தில் 100 ஹிஸ்புல்லாவினர் உயிரிழப்பு.. அதிகரிக்கும் போர் பதற்றம்..
மேலும் மெரினா கடற்கரையில் வாகனங்கள் நிறுத்துவதற்கான வசதிகளிலும் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. காமராஜர் சாலையில் – கடற்கரை சாலை விஐபி &விவிஐபி பார்க்கிங், பிரசிடன்சி கல்லூரி, சுவாமி சிவானந்தா சாலை, லேடி வெலிங்டன் கல்லூரி (நீல நிற பாஸ் மட்டும்) சாந்தோம் சாலை – காது கேளாதவர் & வாய் பேசாதோர் சிஎஸ்ஐ பள்ளி, செயிண்ட் பெட்ஸ் மேல் நிலைப்பள்ளி, புனித சந்தோம் பள்ளி, செயிண்ட் பெட்ஸ் மைதானம், கதீட்ரல் ஆரம்பப் பள்ளி, சமுதாய கூடம், சாந்தோம் லூப் ரோட்
ஆர்.கே. சாலையில் – MRTS – லைட் ஹவுஸ் சாலை, NKT பள்ளி (ஐஸ் ஹவுஸ் சந்திப்பு), குயின் மேரிஸ் கல்லூரி புனித எபாஸ் பள்ளி. வாலாஜா சாலையில் – கலைவாணர் அரங்கம், ஓமந்தூரார் மருத்துவ மைதானம் (பிரஸ் கிளப் சாலை நுழைவு), விக்டோரியா விடுதி மைதானம், அண்ணாசாலை தீவுதிடல் மைதானம், PWD மைதானம் (செயலகம் எதிரில்), மன்றோ சிலை முதல் பல்லவன் சாலை சந்திப்பு வரை, எம்.ஆர்.டி.எஸ் சிந்தாதிரிப்பேட்டை உள்ளிட்ட இடங்களில் வாகனம் நிறுத்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.