Metro Train: தீபாவளிக்கு ஊருக்கு போறீங்களா? மெட்ரோ ரயில் சேவை நீடிப்பு..
சென்னையின் பல்வேறு பகுதிகளில் இருந்து மக்கள் செண்ட்ரல் மற்றும் எழும்பூர் ரயில் நிலையம் சென்று அங்கிருந்து விரைவு ரயிலில் பயணம் மேற்கொள்வார்கள். இதற்காக மக்கள் மெட்ரோ ரயில் சேவையை நம்பியுள்ளனர். பல்வேறு பகுதிகளில் இருந்து மெட்ரோ ரயில் மூலம் சென்னை எழும்பூர் மற்றும் செண்ட்ரல் ரயில் நிலையத்திற்கு சென்றடைவார்கள்.
தீபாவளி பண்டிகை முன்னிட்டு மக்கள் சொந்த ஊர்களுக்கு செல்லும் நிலையில், மக்களின் வசதிக்காக மெட்ரோ ரயில் சேவையில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. நாளை மறுநாள் தீபாவளி பண்டிகை கொண்டாடப்படுகிறது. இதற்காக மக்கள் நாளை இரவு ரயில் மூலம் சொந்த ஊருக்கு செல்ல திட்டமிட்டுள்ளனர். சென்னையின் பல்வேறு பகுதிகளில் இருந்து மக்கள் செண்ட்ரல் மற்றும் எழும்பூர் ரயில் நிலையம் சென்று அங்கிருந்து விரைவு ரயிலில் பயணம் மேற்கொள்வார்கள். இதற்காக மக்கள் மெட்ரோ ரயில் சேவையை நம்பியுள்ளனர். பல்வேறு பகுதிகளில் இருந்து மெட்ரோ ரயில் மூலம் சென்னை எழும்பூர் மற்றும் செண்ட்ரல் ரயில் நிலையத்திற்கு சென்றடைவார்கள்.
மெட்ரோ ரயில் சேவையில் மாற்றம்:
மக்களின் வசதிக்காக நாளை மெட்ரோ ரயில் சேவையில் மாற்றம் செய்யப்படுவதாக மெட்ரோ ரயில் நிறுவனம் தெரிவித்துள்ளது. இது தொடர்பான பதிவில், “ தீபாவளி விடுமுறையை முன்னிட்டு மெட்ரோ இரயில் சேவை நீட்டிக்கப்பட்டுள்ளது. தீபாவளி பண்டிகை தொடர் விடுமுறையை முன்னிட்டு சொந்த ஊருக்கு செல்லும் மெட்ரோ இரயில் பயணிகளின் வசதிகாக நாளை 30.10.2024 (புதன்கிழமை) மெட்ரோ இரயில் சேவைகள் பின்வரும் அட்டவணையின் படி இயக்க திட்டமிடப்பட்டுள்ளது.
காலை 5 மணி முதல் இரவு 12 மணிவரை மெட்ரோ இரயில்கள் இயக்கப்படும். (முதல் மெட்ரோ இரயில் அனைத்து முனையங்களிலிருந்தும் காலை 5 மணிக்குப்புறப்படும் மற்றும் கடைசி மெட்ரோ இரயில் அனைத்து முனையங்களிலிருந்தும் இரவு 12 மணிக்கு புறப்படும்).
மேலும் படிக்க: திடீரென முடங்கிய இன்ஸ்டாகிராம்.. குறுஞ்செய்தி அனுப்ப முடியாமல் தவிக்கும் பயனர்கள்!
காலை 8 மணி முதல் 11 மணி வரை மற்றும் மாலை 5 மணி முதல் இரவு 8 மணி வரை: பச்சை வழித்தடத்தில் புரட்சித்தலைவர் டாக்டர். எம்.ஜி. ராமச்சந்திரன் சென்ட்ரல் மெட்ரோ முதல் பரங்கிமலை மெட்ரோ வரை 6 நிமிட இடைவெளியில் மெட்ரோ இரயில்கள் இயக்கப்படும். அதேபோல், நீல வழித்தடத்தில் விம்கோ நகர் பணிமனை மெட்ரோ முதல் விமான நிலையம் மெட்ரோ வரை 6 நிமிட இடைவெளியில் மெட்ரோ இரயில்கள் இயக்கப்படும். மேலும், நீல வழித்தடத்தில் வண்ணாரப்பேட்டை மெட்ரோ முதல்அறிஞர் அண்ணா ஆலந்தூர் மெட்ரோ இடையே 3 நிமிட இடைவெளியில் மெட்ரோ இரயில்கள் இயக்கப்படும்.
காலை 5 மணி முதல் 8 மணி வரை மற்றும் காலை 11 மணி முதல் மாலை 5 மணி வரை மற்றும் இரவு 8 மணி முதல் 12 மணி வரை: பச்சை வழித்தடம் மற்றும் நீல வழித்தடத்தில் 7நிமிட இடைவெளியில் மெட்ரோ இரயில்கள் இயக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் படிக்க: ”2026-ல் இலக்கை அடைவோம்” – தொண்டர்களுக்கு நன்றி தெரிவித்த த.வெ.க தலைவர் விஜய்..
தீபாவளி அன்று விடுமுறை நாள் அட்டவணைப்படி ரயில்கள் இயக்கப்படும்:
நாளை மக்களின் வசதிக்காக ரயில் சேவையில் மாற்றம் செய்யப்பட்ட நிலையில் நாளை மறுநாள் (31.10.2024 வியாழக்கிழமை) மற்றும் நவம்பர் 1 ஆம் தேதி (வெள்ளிக்கிழமை) மெட்ரோ இரயில்கள் விடுமுறை நாள் அட்டவணையின்படி இயங்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. அதாவது காலை 5 மணி முதல் இரவு 11 மணி வரை மெட்ரோஇரயில்கள் இயக்கப்படும். காலை 5 மணி முதல் மதியம் 12 மணி வரை மற்றும் இரவு 8மணி முதல் 10 மணி வரை 10 நிமிட இடைவெளியில் மெட்ரோ இரயில்கள் இயக்கப்படும். மதியம் 12 மணி முதல் இரவு 8 மணி வரை 7 நிமிட இடைவெளியில் மெட்ரோ இரயில்கள் இயக்கப்படும். இரவு 10 மணி முதல் 11 மணி வரை 15 நிமிட இடைவெளியில் மெட்ரோ இரயில்கள் இயக்கப்படும் என குறிப்பிடப்பட்டுள்ளது.