5
Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வெப் ஸ்டோரீஸ்வணிகம்விளையாட்டுகல்விடெக்னாலஜி

இனி பொது இடத்தில் குப்பை கொட்டினால் மாட்டிப்பீங்க.. ஏஐ மூலம் மிரட்டும் சென்னை மாநகராட்சி!

சென்னை மாநகராட்சி: பொது இடங்களில் குப்பை கொட்டுப்படுவதை தடுக்கும் வகையில், ஏஐ தொழில்நுட்பத்துடன் சிசிடிவி கேமராக்கள் பொருத்தப்பட்டு கண்காணிக்க சென்னை மாநகராட்சி முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. பொது இடங்களில் குப்பை கொட்டுபவர்களை கண்டறிந்து அபராதம் வசூலிக்க நடவடிக்கை எடுப்பதை உறுதி செய்யும் வகையில், இந்த அம்சம் கொண்டு வரப்பட உள்ளதாக கூறப்படுகிறது.

இனி பொது இடத்தில் குப்பை கொட்டினால் மாட்டிப்பீங்க.. ஏஐ மூலம் மிரட்டும் சென்னை மாநகராட்சி!
குப்பை (picture credit: Getty)
umabarkavi-k
Umabarkavi K | Updated On: 28 Oct 2024 12:15 PM

பொது இடங்களில் குப்பை கொட்டுப்படுவதை தடுக்கும் வகையில், ஏஐ தொழில்நுட்பத்துடன் சிசிடிவி கேமராக்கள் பொருத்தப்பட்டு கண்காணிக்க சென்னை மாநகராட்சி முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. சென்னை மாநகராட்சியின் முக்கிய பிரச்னைகளில் ஒன்றாக இருப்பது குப்பை மேலாண்மை. சென்னை மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் பொதுமக்கள் மக்கள் குப்பை கொட்டி வருகின்றனர். இதனை தடுக்க மாநகராட்சி பல்வேறு நடவடிக்கைகளை எடுத்துள்ளது. மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் உள்ள வீடுகளுக்கே தூய்மை பணியாளர்கள் சென்று குப்பைகளை சேகரித்து வருகின்றனர்.

பொது இடத்தில் குப்பை கொட்டுறீங்களா?

அப்படி இருந்தும் சில மக்கள் பொது இடங்களில் குப்பைகள், கட்டிட கழிவுகளை கொட்டி வருகின்றனர். இதனை தடுக்க மாநகராட்சி அபராதம் விதித்து வருகின்றனர். கடந்த ஐந்து ஆண்டுகளாக அபராதம் விதிக்கும் நடைமுறை இருந்து வருகிறது.

ஆனாலும் மக்கள் கண்ணை மூடிக்கொண்டு குப்பையை கண்ட இடங்களில் வீசி வருகின்றனர். இதனை தீவிரமாக கண்காணித்த சென்னை மாநகராட்சி, இதற்கு ஒரு முடிவு கட்ட வேண்டும் என்ற நோக்கில் சமீபத்தில் நடந்த மாநகராட்சி மன்ற கூட்டத்தில் ஒரு தீர்மானத்தை கொண்டு வந்தது.

Also Read: சிறுமியை திருமணம் செய்ய நினைத்த பெண் பயிற்சியாளர்.. கடத்தல் வழக்கில் திடுக் வாக்குமூலம்!

அதாவது, பொது மற்றும் தனியார் இடங்களில் குப்பைகளை கொட்டினால் விதிக்கப்படும் அபராத தொகையை உயர்த்தியது. அதாவது, பொது மற்றும் தனியார் இடங்களில் குப்பை கொட்டினால் ரூ.500-ல் இருந்து ரூ.5,000 வரை உயர்த்தப்படும் என்று தீர்மானம் கொண்டு வந்துள்ளது.

ஏஐ மூலம் மிரட்டும் சென்னை மாநகராட்சி

மேலும், பொது வெளியில் குப்பை கொட்டுபவர்களுக்கு உடனடியாக ஆன் ஸ்பாட் அபராதமும் விதிக்கப்பட்டு வருகிறது. இந்த நிலையில் தான் சென்னை மாநகராட்சி புதிய முடிவை எடுத்துள்ளது.

பொது இடங்களில் குப்பை கொட்டுப்படுவதை தடுக்கும் வகையில், ஏஐ தொழில்நுட்பத்துடன் சிசிடிவி கேமராக்கள் பொருத்தப்பட்டு கண்காணிக்க சென்னை மாநகராட்சி முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

பொது இடங்களில் குப்பை கொட்டுபவர்களை கண்டறிந்து அபராதம் வசூலிக்க நடவடிக்கை எடுப்பதை உறுதி செய்யும் வகையில், குப்பை கொட்டும் இடங்களை கண்காணிக்க ஏஐ தொழில்நுட்ப சிசிடிவி கேமராக்களை சென்னை மாநகராட்சி நிறுவ உள்ளது.

இந்த ஏஐ கேமராக்கள் ரிப்பன் மாளிகையில் உள்ள கட்டுப்பாட்டு மையத்திற்கு நேரடியாக தகவல்களை அனுப்பும் திறன் கொண்டது. இதன் மூலம் சம்பந்தப்பட்டவர்களுக்கு அபராதம் விதிக்கப்படும்  என்று கூறப்படுகிறது.

Also Read: இரண்டு நாட்களுக்கு கனமழை அலர்ட்.. எந்தெந்த மாவட்டங்கள்? வானிலை மையம் எச்சரிக்கை

இதுகுறித்து மாநகராட்சி ஆணையர் குமரகுருபரன் கூறுகையில், “சென்னை மாநகரை தூய்மைப்படுத்தும் நோக்கில் பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது. இதனால் மண்டலம் முழுவதும் தீவிர தூய்மை பணி நடந்து வருகிறது. எனவே, மண்டல வாரியாக ஏஐ தொழில்நுட்பம் நிறுவப்பட உள்ளது. இதன் மூலம் குப்பை கொட்டுபவர்களுக்கு கண்காணிக்கப்பட்டு அபராதம் விதிக்கப்படும்” என்றார்.

இதுவரை 17 லட்சம் அபராதம்

சென்னையில் பொது இடங்களில் விதிமீறி குப்பை கொட்டுபவர்களுக்கு அபராதம் விதிக்கப்படுகிறது.   அதன்படி, சென்னை மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் பொது இடங்களில் குப்பை கொட்டியதற்காக இதுவரை ரூ.17.96 லட்சம் அபராதம் வசூலிக்கப்பட்டுள்ளது என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.

அபராதம் மற்றும் விதிகளை மீறி செயல்படுபவர்களை கண்காணிக்க மாநகராட்சி பாதுகாப்பு மற்றும் தூய்மை ஆய்வாளர்கள், மண்டல அதிகாரிகள், நிர்வாக மற்றும் உதவி செயற் பொறியாளர்கள், சென்னையில் மாநகராட்சி வார்டு உதவி பொறியாளர்கள் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர்.

Latest News