AIADMK: RSS பேரணியை தொடங்கி வைத்த அதிமுக எம்.எல்.ஏ – சஸ்பெண்ட் செய்த இபிஎஸ்!
தமிழக முழுவதும் கடந்த அக்டோபர் 6 ஆம் தேதி ஆர்எஸ்எஸ் பேரணி பல்வேறு நிபந்தனைகளுடன் நடைபெற்றது. இதில் கன்னியாகுமரி மாவட்டம் ஈசாந்திமங்கலத்தில் நடைபெற்ற ஆர்எஸ்எஸ் பேரணியை எம்.எல்.ஏ., தளவாய் சுந்தரம் தொடங்கி வைத்திருந்தார். இதுதொடர்பான வீடியோ வெளியாகிச் சமூக வலைத்தளங்களில் வைரலானது. மேலும் கன்னியாகுமரி மாவட்டத்தில் பாஜக மற்றும் ஆர்.எஸ்.எஸ் அமைப்புடன் தளவாய் சுந்தரம் நெருக்கம் காட்டுவதாகவும் மேலிடத்துக்கு புகார் சென்றுள்ளதாக கூறப்படுகிறது.
அஇஅதிமுக: அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழக கட்சியிலிருந்து கன்னியாகுமரி கிழக்கு மாவட்ட செயலாளரும் மற்றும் அதிமுக அமைப்புச் செயலாளருமான தளவாய் சுந்தரம் தற்காலிகமாக நீக்கப்பட்டுள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதுகுறித்து அதிமுக தலைமை கழக அலுவலகத்தின் சமூக வலைத்தளப் பக்கத்தில் அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது அதில், “கழக பொதுச்செயலாளரும், சட்டமன்ற எதிர்க்கட்சி தலைவரும், முன்னாள் முதலமைச்சருமான எடப்பாடி பழனிசாமி வெளியிடும் அறிவிப்பு என்னவென்றால், கழகத்தின் கொள்கை குறிக்கோள்களுக்கும் கோட்பாடுகளுக்கும் முரணான வகையில் செயல்பட்டதாகவும், கழகத்தின் சட்ட திட்டங்களுக்கு மாறுபட்டு நடந்து கொண்டதாகவும் கிடைத்த தகவல் கிடைக்கப் பெற்றுள்ளது.
Also Read: Jammu Kashmir Election: காஷ்மீர் முதலமைச்சராகும் உமர் அப்துல்லா.. கொண்டாட்டத்தில் தொண்டர்கள்!
அதனடிப்படையில் கன்னியாகுமரி கிழக்கு மாவட்டத்தை சேர்ந்த என்தளவாய் சுந்தரம் எம்எல்ஏ அவர்கள் தான் வகித்து வந்த கழக அமைப்புச் செயலாளர், கன்னியாகுமரி கிழக்கு மாவட்ட கழகச் செயலாளர் ஆகிய பொறுப்புகளில் இருந்து தற்காலிகமாக விடுவிக்கப்படுகிறார்” என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த அறிவிப்பு அதிமுக தொண்டர்களிடையே மிகப்பெரிய அளவில் பேசுபொருளாக மாறியுள்ளது.
மாண்புமிகு கழகப் பொதுச்செயலாளர் ‘புரட்சித் தமிழர்’ திரு. @EPSTamilNadu அவர்களின் முக்கிய அறிவிப்பு. pic.twitter.com/G5TlliCgoe
— AIADMK – Say No To Drugs & DMK (@AIADMKOfficial) October 8, 2024
இதுதான் காரணமா?
தமிழக முழுவதும் கடந்த அக்டோபர் 6 ஆம் தேதி ஆர்எஸ்எஸ் பேரணி பல்வேறு நிபந்தனைகளுடன் நடைபெற்றது. இதில் கன்னியாகுமரி மாவட்டம் ஈசாந்திமங்கலத்தில் நடைபெற்ற ஆர்எஸ்எஸ் பேரணியை எம்.எல்.ஏ., தளவாய் சுந்தரம் தொடங்கி வைத்திருந்தார். இதுதொடர்பான வீடியோ வெளியாகிச் சமூக வலைத்தளங்களில் வைரலானது. மேலும் கன்னியாகுமரி மாவட்டத்தில் பாஜக மற்றும் ஆர்.எஸ்.எஸ் அமைப்புடன் தளவாய் சுந்தரம் நெருக்கம் காட்டுவதாகவும் மேலிடத்துக்கு புகார் சென்றுள்ளதாக கூறப்படுகிறது. இதன் காரணமாக அவர் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டதாக சொல்லப்படுகிறது.
அதிமுக பொதுச்செயலாளராக எடப்பாடி பழனிசாமி பொறுப்பேற்றப்பின் கட்சியின் எவ்வித பாரபட்சமும் இன்றி நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. தன்னுடைய தலைமையில் சந்தித்த அனைத்து தேர்தல்களிலும் அதிமுக தோல்வியடைந்து விட்ட நிலையில் 2026 சட்டமன்ற தேர்தலில் எப்படியாவது வென்று மீண்டும் ஆட்சியமைக்க வேண்டும் என்ற நோக்கில் எடப்பாடி பழனிசாமி செயல்பட்டு வருகிறார்.
இந்நிலையில் ஊடகம் ஒன்றிற்கு பேட்டி அளித்துள்ள தளவாய் சுந்தரம், “தொகுதி எம்எல்ஏ என்ற முறையில் ஆர்எஸ்எஸ் பேரணியை தொடங்கி வைத்தேன். என் மீது நடவடிக்கை எடுத்தால் கவலை இல்லை. கட்சியிலிருந்து நீக்கப்பட்டு விட்டால் ஓகே ரைட் என செல்ல வேண்டியதுதான். ஆர்எஸ்எஸ் பேரணியை தொடங்கி வைத்ததால் அதிமுகவின் பலம் குறையும்” என இபிஎஸ் நடவடிக்கை எடுத்துள்ளார்.
இதனிடையே திருச்சியில் பாஜக ஒருங்கிணைப்பு குழு தலைவர் ஆன எச். ராஜா செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவரிடம், “கன்னியாகுமரி அதிமுக எம்எல்ஏ தளவாய் சுந்தரம் ஆர்எஸ்எஸ் பேரணியை தொடங்கி வைத்ததால் கட்சிப் பதவிகள் பறிக்கப்பட்டு தற்காலிகமாக நீக்கப்பட்டது குறித்த கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு, “தளவாய் சுந்தரத்தை வரவேற்கிறேன்” என சுருக்கமாக பதில் அளித்தார்.
தளவாய் சுந்தரம் மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா அமைச்சரவையில் பொதுப்பணி மற்றும் நெடுஞ்சாலை துறை அமைச்சராக பொறுப்பு வகித்தவர். இவர் முன்னாள் ராஜ்ய சபா எம்பி ஆகவும் தேர்வு செய்யப்பட்டு பணியாற்றினார். ஜெயலலிதாவின் குட்புக்கில் இடம் பெற்ற அவர் டெல்லியில் தமிழக அரசின் பிரதிநிதியாக செயல்பட்டு வந்தார். தளவாய் சுந்தரம் கன்னியாகுமரி மாவட்ட அதிமுகவின் முக்கிய முகமாக திகழ்ந்து வந்தார். ஆனால் தன்னுடைய பதவிகளை பறித்ததால் கவலை இல்லை என தெரிவித்திருப்பது ஒருவேளை பாஜகவில் இணையும் முடிவில் இருக்கிறாரா என்று கேள்வியையும் எழுப்பி உள்ளது குறிப்பிடத்தக்கது.