Trichy Airport: ஏர் இந்தியா விமானத்தில் ஏற்பட்ட தொழில்நுட்ப கோளாறு.. விசாரணை நடத்த சிவில் ஏவியேஷனுக்கு உத்தரவு..

திருச்சியில் இருந்து ஷார்ஜா புறப்பட்ட ஏர் இந்தியா விமானத்தில் தொழில்நுட்ப கோளாறு ஏற்பட்டதால் சுமார் 2 மணி நேரத்திற்கு மேலாக வானிலை வட்டமடித்து இருந்தது. இதன் பிறகு சரியாக இரவு 8.15 மணிக்கு விமானம் திருச்சி விமான நிலையத்தில் பத்திரமாக தரையிறங்கியது. மேலும், அதில் பயணித்த 144 பேரும் பத்திரமாக உள்ளதாகவும் தகவல் வெளியாகி உள்ளது.

Trichy Airport: ஏர் இந்தியா விமானத்தில் ஏற்பட்ட தொழில்நுட்ப கோளாறு.. விசாரணை நடத்த சிவில் ஏவியேஷனுக்கு உத்தரவு..

கோப்பு புகைப்படம்

Updated On: 

12 Oct 2024 08:10 AM

திருச்சியில் இருந்து ஷார்ஜா செல்லும் ஏர் இந்தியா விமானம் நேற்று ஹைட்ராலிக் கோளாறு காரணமாக தொழில்நுட்பக் கோளாறை எதிர்கொண்டு, திருச்சி விமான நிலையத்தில் பாதுகாப்பாக தரையிறங்குவதற்குள் எரிபொருளை எரிக்க சுமார் 2 மணி நேரம் வானில் வட்டமிட்டது. இந்த சம்பவம் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் மற்றும் சிவில் விமான போக்குவரத்து துறை அமைச்சர் ராம்மோகன் நாயுடு ஆகியோரின் கவனத்தை ஈர்த்தது, இந்த சம்பவம் குறித்து விசாரணை நடத்த உத்தரவிடப்பட்டுள்ளது. சிவில் விமான போக்குவரத்து அமைச்சர் அதிகாரப்பூர்வ அறிக்கையை வெளியிட்டுள்ளார் மேலும், இந்த சம்பவம் குறித்து டிஜிசிஏ “முழுமையான” விசாரணை நடத்தும் என்றும் தெரிவித்துள்ளார்.


இது தொடர்பாக வெளியிடப்பட்ட அறிக்கையில், “ திருச்சியில் இருந்து சார்ஜாவிற்கு 141 பேருடன் இயக்கப்பட்ட ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமானம் AXB 613 இல் ஹைட்ராலிக் கோளாறு ஏற்பட்டதைத் தொடர்ந்து, விமானம் திருச்சி விமான நிலையத்தில் பாதுகாப்பாக தரையிறங்கியதில் நாங்கள் நிம்மதியடைந்தோம். பணியாளர்கள் அனைத்து பாதுகாப்பு நெறிமுறைகளையும் பின்பற்றி, மக்களின் பாதுகாப்பை உறுதி செய்தனர். நேற்று இரவு 8 மணியளவில் விமானம் தரையிறங்குவதற்குத் தயாரானதைத் தொடர்ந்து, விமான நிலையமும், அவசரகாலக் குழுக்களும், மாலை 6 மணிக்கு முழு அவசர நிலை பிரகடனப்படுத்தப்பட்ட பிறகு, விரைவாகவும் திறம்படவும் பதிலளித்தனர்” என தெரிவிக்கப்பட்டது.


இதற்கிடையில், முதல்வர் மு.க.ஸ்டாலின் தனது எக்ஸ் தள பக்கத்தில், ”ஏர் இந்தியா விமானம் பத்திரமாக தரையிறங்கியதைக் கேள்விப்பட்டு மனம் நெகிழ்ந்தேன். தொழில்நுட்ப கோளாறு பிரச்சினை பற்றிய செய்தி கிடைத்ததும், நான் உடனடியாக தொலைபேசியில் அதிகாரிகளுடன் அவசரக் கூட்டத்தை ஒருங்கிணைத்து, தீயணைப்பு இயந்திரங்கள், ஆம்புலன்ஸ்கள் மற்றும் மருத்துவ உதவிகளை அனுப்புவது உட்பட தேவையான அனைத்து பாதுகாப்பு நடவடிக்கைகளையும் செயல்படுத்த அறிவுறுத்தினேன்.

மேலும் அனைத்து பயணிகளின் பாதுகாப்பை உறுதி செய்யவும் உதவிகளை வழங்கவும் மாவட்ட ஆட்சியருக்கு நான் உத்தரவிட்டுள்ளேன். பாதுகாப்பாக தரையிறங்கிய கேப்டன் மற்றும் குழுவினருக்கு எனது பாராட்டுகள்” என தெரிவித்துள்ளார்.


பாதுகாப்பை உறுதி செய்வதற்காக, நிலைமை DGCA கண்காணிப்பில் உள்ளது. மேலும், 20 க்கும் மேற்பட்ட ஆம்புலன்ஸ்கள் மற்றும் தீயணைப்பு வாகனங்கள் விமான நிலையத்தில் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளன என்று விமான நிலைய இயக்குனர் கோபாலகிருஷ்ணன் தெரிவித்தார்.

மேலும் படிக்க: சென்னையில் கனமழை.. 3 நாட்களுக்கு மிக கனமழை எச்சரிக்கை..

ஆனால் ஏர் இந்தியா செய்தித் தொடர்பாளர் பேசுகையில், விமான இயக்கக் குழுவினரால் எந்த அவசரநிலையும் அறிவிக்கப்படவில்லை என்றும், தொழில்நுட்பக் கோளாறு குறித்து முறையாக விசாரிக்கப்படும் என்றும் தெளிவுபடுத்தினார்.

 

ஆஸ்திரேலியாவில் 16 வயதுக்குட்பட்டவர்கள் சமூக ஊடகங்களை பயன்படுத்த தடை!
குளிர் காலத்தில் சாப்பிட வேண்டிய 6 வகை உணவுகள்!
நீங்கள் பயன்படுத்தும் கோதுமை தரமானதா - சோதிப்பது எப்படி?
உணவில் தக்காளி சேர்ப்பது ஆபத்தானதா? - ஆய்வுகள் கூறுவது என்ன?