Trichy Airport: திருச்சியில் பத்திரமாக தரையிறங்கிய விமானம்.. பயணிகள் நிலை என்ன? - Tamil News | air india flight trichy landed safely after 2 hours of mid air emergency due to hydraulic failure tamil news | TV9 Tamil

Trichy Airport: திருச்சியில் பத்திரமாக தரையிறங்கிய விமானம்.. பயணிகள் நிலை என்ன?

திருச்சியில் இருந்து ஷார்ஜா புறப்பட்ட ஏர் இந்தியா விமானத்தில் தொழில்நுட்பக் கோளாறு ஏற்பட்டு  வானில் சுமார் 2 மணி நேரத்திற்கு வட்டமடித்து வந்த நிலையில், தற்போது 8.15 மணிக்கு பத்திரமாக திருச்சி விமான  நிலையத்தில் தரையிறங்கியது. மேலும், 144 பயணிகளும் பத்திரமாக உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. 

Trichy Airport: திருச்சியில் பத்திரமாக தரையிறங்கிய விமானம்.. பயணிகள் நிலை என்ன?

ஏர் இந்திய விமானம்

Updated On: 

11 Oct 2024 22:16 PM

திருச்சியில் இருந்து ஷார்ஜா புறப்பட்ட ஏர் இந்தியா விமானத்தில் தொழில்நுட்பக் கோளாறு ஏற்பட்டு  வானில் சுமார் 2 மணி நேரத்திற்கு வட்டமடித்து வந்த நிலையில், தற்போது 8.15 மணிக்கு பத்திரமாக திருச்சி விமான  நிலையத்திற்கு தரையிறங்கியது. மேலும், 144 பயணிகளும் பத்திரமாக உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.  இன்று மாலை 5.40 மணிக்கு திருச்சியில் இருந்து ஷார்ஜாவுக்கு விமானம் புறப்பட்டது.  சுமார்  141 பயணிகளுடன் விமானம் புறப்பட்டது. புறப்பட்ட சில நிமிடங்களிலே விமானத்தில் தொழில்நுட்பக் கோளாறு ஏற்பட்டிருக்கிறது. இதனால் சுமார் 2 மணி நேரத்திற்கு மேலாக விமானத்தில் வட்ட மடித்தது.

திருச்சியில் பத்திரமாக தரையிறங்கிய விமானம்

விமானம் நடுவானில் சென்றபோது திடீரென சக்கரங்கள் உள்ளே செல்லாததால் விமானத்தில் மேலும் இயக்குவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.  இதனால், எரிபொருள் தீர்ந்த பிறகு விமானத்தை தரையிறக்க அதிகாரிகள் திட்டமிட்டனர். எரிபொருள் முழுவதும்  இருக்கும் போது அவசரமாக தரையிறக்கம் செய்தால் அசம்பாவிதம் ஏற்படலாம் என்று கூறப்படுகிறது.

Also Read: திக்திக்.. வானத்தில் வட்டமடிக்கும் விமானம்.. 141 பயணிகளின் கதி என்ன? திருச்சியில் குவிந்த ஆம்புலன்ஸ்கள்!

இதன் காரணமாக 2 மணி நேரத்திற்கு மேலாக வானில் விமானம் வட்டமடித்தது.  புதுக்கோட்டை, திருச்சி மாவட்ட எல்லை பகுதிகளில் விமானம் வட்டமடித்து கொண்டிருந்தது. அன்னவாசல் உள்ளிட்ட பகுதிகளில் மட்டும் 21 முறைக்கு மேலாக வட்டமடித்ததாக தெரிகிறது.  மேலும், பாக்குடி, மலம்பட்டி, ஆவூர், முக்காணமலைப்பட்டி உள்ளிட்ட பகுதிகளில் விமானம் வட்டமடித்துள்ளது.

இதனால், முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக திருச்சி விமான நிலையத்தில் ஆம்புலன்ஸ், தீயணைப்பு வாகனங்கள் தயார் நிலையில் உள்ளன. மேலும், போலீசாருக்கு குவிக்கப்பட்டுள்ளனர். 20க்கும் மேற்பட்ட ஆம்புலன்ஸ்கள், தீயணைப்பு வாகனங்கள் திருச்சி விமான நிலையத்தில் உள்ளன.


இந்த நிலையில், இன்று மாலை 5.40 மணிக்கு புறப்பட்ட விமானம் சுமார் 2 மணி நேரத்திற்கு மேலாக விமானத்தில் வட்டமடித்த நிலையில், தற்போது பத்திரமாக தரையிறங்கியது.   விமானத்தில் எரிபொருள் தீர்ந்த பிறகு விமானம் தரையிறங்கப்பட்டது. எந்த வித பிரச்னையும் ஏற்படாமல் விமானம் பத்திரமாக தரையிறங்கியது.

அதே நேரத்தில் விமானத்தின் அடிப்பகுதியை தரையில் உரசி பெல்லி லேண்டிங் என்ற முறையில் விமானம் தரை இறக்கப்பட்டது. விமானி சாதுரயமாக செயல்பட்டு விமானத்தை பத்திரமாக தரையிறங்கப்பட்ட நிலையில், பின் பகுதியில் லேசாக புகை மட்டும் ஏற்பட்டிருக்கிறது. இதனை அடுத்து, விமானம் பத்திரமாக தரையிறங்கியது.  அதில் இருந்த 141 பயணிகளும் பத்திரமாக உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

முதல்வர் ஸ்டாலின் பாராட்டு:


விமானத்தை பத்திரமாக தரையிறக்கிய விமானிக்கு முதல்வர் ஸ்டாலின் பாராட்டு தெரிவித்துள்ளது. இதுகுறித்து தனது எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ள அவர், ” ஏர் இந்தியா விமானம் பத்திரமாக தரையிறங்கியதைக் கேள்விப்பட்டு மனம் நெகிழ்ந்தேன். தரையிறங்கும் கியர் பிரச்சினை பற்றிய செய்தி கிடைத்ததும், நான் உடனடியாக தொலைபேசியில் அதிகாரிகளுடன் அவசரக் கூட்டத்தை ஒருங்கிணைத்து, தீயணைப்பு இயந்திரங்கள், ஆம்புலன்ஸ்கள் மற்றும் மருத்துவ உதவிகளை அனுப்புவது உட்பட தேவையான அனைத்து பாதுகாப்பு நடவடிக்கைகளையும் செயல்படுத்த அறிவுறுத்தினேன்.

Also Read: மதுரை முதலமைச்சர் கோப்பை போட்டி.. வீரர்களிடையே மோதலால் பரபரப்பு..

மேலும் அனைத்து பயணிகளின் பாதுகாப்பை உறுதி செய்யவும் உதவிகளை வழங்கவும் மாவட்ட ஆட்சியருக்கு நான் இப்போது உத்தரவிட்டுள்ளேன். பாதுகாப்பாக தரையிறங்கிய விமானி மற்றும் குழுவினருக்கு எனது பாராட்டுகள்” என்று தெரிவித்துள்ளார்.

செரிமானத்தை மேம்படுத்த வேண்டுமா ? அப்போ இதை பாலோ பண்ணுங்க
மோகன் லால் உடன் இருக்கும் இந்த சிறுமி யார்?
தங்க நிற உடையில் ஜொலிக்கும் ஜான்வி போட்டோஸ் இதோ
குழந்தைகள் தெரிந்து கொள்ள வேண்டிய முக்கிய வெற்றி படிநிலைகள்!
Exit mobile version