PM Swearing-in Ceremony: மோடி பதவியேற்பு விழா.. சென்னை ரயில் ஓட்டிக்கு அழைப்பு.. யார் இவர்? - Tamil News | | TV9 Tamil

PM Swearing-in Ceremony: மோடி பதவியேற்பு விழா.. சென்னை ரயில் ஓட்டிக்கு அழைப்பு.. யார் இவர்?

Updated On: 

09 Jun 2024 10:08 AM

டெல்லியில் இன்று நடைபெறும் மோடியின் பதவியேற்பு விழாவுக்கு தெற்கு ரயில்வேயின் சென்னை கோட்டத்தைச் சேர்ந்த பெண் லோகோ பைலட் ஐஸ்வர்யா எஸ் மேனனுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. தற்போது இவர் வந்தே பாரத், ஜன சதாப்தி உள்ளிட்ட முக்கிய ரயில்களை ஐஸ்வர்யா அதிக பயண நேரங்கள் இயக்கியுள்ளார். சென்னை-விஜயவாடா மற்றும் சென்னை-கோயம்புத்தூர் வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் சேவைகள் அறிமுகப்படுத்தப்பட்ட நாளில் இருந்தே அவர் பணிபுரிந்து வருகிறார்.

PM Swearing-in Ceremony: மோடி பதவியேற்பு விழா.. சென்னை ரயில் ஓட்டிக்கு அழைப்பு.. யார் இவர்?

பெண் ரயில் ஓட்டி ஐஸ்வர்யா

Follow Us On

மோடி பதவியேற்பு விழா: மக்களவைத் தேர்தலில் பெரும்பான்மை பெற்ற பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி மீண்டும் ஆட்சி அமைக்கிறது. இதனை அடுத்து, 3வது முறையாக நாட்டின் பிரதமராக மோடி இன்று இரவு 7.15 மணிக்கு பதவி ஏற்க உள்ளார். அவருடன் தேசிய ஜனநாயக கூட்டணி அமைச்சர்களும் பதவி ஏற்க உள்ளனர். மோடி மற்றும் இதர அமைச்சர்களுக்கு குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு பதவி பிரமாணம் செய்து வைக்கிறார். இந்த பதவியேற்பு  விழாவுக்கு பல்வேறு துறைகளில் சிறந்து விளங்குபவர்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.  அந்த வகையில், பதவியேற்பு விழாவுக்கு தெற்கு ரயில்வேயின் சென்னை கோட்டத்தைச் சேர்ந்த பெண் லோகோ பைலட் ஐஸ்வர்யா எஸ் மேனனுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. தற்போது இவர் வந்தே பாரத், ஜன சதாப்தி உள்ளிட்ட முக்கிய ரயில்களை ஐஸ்வர்யா அதிக பயண நேரங்கள் இயக்கியுள்ளார்.

Also Read: முன்னணி ஊடக தொழிலதிபர் ராமோஜி ராவ் காலமானார்!

பெண் ரயில் ஓட்டிக்கு அழைப்பு:

சென்னை-விஜயவாடா மற்றும் சென்னை-கோயம்புத்தூர் வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் சேவைகள் அறிமுகப்படுத்தப்பட்ட நாளில் இருந்தே அவர் பணிபுரிந்து வருகிறார். குறிப்பாக ரயில்வே சிக்னல்களை உடனடியாக உள்வாங்கி செயல்பட்டதற்காக ரயில்வே அதிகாரிகளால் பாராட்டுகளை பெற்றுள்ளார். இந்த நிலையில், டெல்லியில் நாளை நடைபெறும் பிரதமர் பதவியேற்பு விழாவில் பங்கேற்க ஐஸ்வர்யா விமானத்தில் புறப்பட்டுச் செல்கிறார். அவருக்கு சக ஊழியர்களை வாழ்த்துகளை தெரிவித்து வருகின்றனர்.

மூன்று அடுக்கு பாதுகாப்பு:

மோடி பதவியேற்பு விழா நடைபெறும் சுற்றியுள்ள பகுதியில் மூன்று அடுக்கு போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. அதாவது, குடியரசு தலைவர் மாளிகை மற்றும் பதவியேற்பு விழா நடைபெறும் கர்தவ்யா பாத் ஆகியவற்றில் முதல் அடுக்கு பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. விருந்தினர்கள் தங்கும் இடங்களை சுற்றி பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. மத்திய டெல்லியை சுற்றிலும் மூன்றாவது அடுக்கு பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. மேலும், இந்திரா காந்தி சர்வதேச விமான நிலையத்தில் கூடுதல் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. சிறப்பு கட்டுப்பாடு அறைகள் ஏற்படுத்தப்பட்டு அனைத்து இடங்களும் தீவிரமாக கண்காணிக்கப்பட்டு வருகிறது. மேலும், ட்ரோன்கள், சிறிய ரக ஏர்கிராப்ட்கள், பாரா கிளைடர்கள் உள்ளிட்டவை பறக்க தடை விதிக்கப்பட்டுள்ளது.

Also Read:  மோடி பதவியேற்பு விழா.. தலைநகர் டெல்லியில் உச்சக்கட்ட பாதுகாப்பு!

 

யூரிக் அமிலம் அதிகமாக இருந்தால் இந்த பருப்பு வகைகளை தவிர்க்க வேண்டும்..
வெயில் காலத்தில் அன்னாசி பழம் சாப்பிடலாமா?
ஒரே ஒரு சதம்.. பல்வேறு சாதனைகளை குவித்த அஸ்வின்!
பக்கவாதத்தை தடுக்கும் நூக்கல்.. இதில் இவ்வளவு நன்மை பண்புகளா..?
Exit mobile version