School Leave: தொடர்ந்து கொட்டும் கனமழை.. பள்ளிகளுக்கு இன்று விடுமுறை.. எந்தெந்த மாவட்டங்கள்?
தமிழ்நாட்டில் பருவமழை தொடங்கியதில் இருந்தே நல்ல மழை பெய்தி வருகிறது. சென்னை மற்றும் புறநகர் பகுதியில் மாலை மற்றும் இரவு நேரங்களில் மழை பெய்து வருகிறது. மேற்கு தொடர்ச்சி மலைலை ஓட்டியுள்ள பகுதிகளில் கனமழை பெய்து வருகிறது. குறிப்பாக நீலகிரி பகுதிகளில் தொடர் கனமழை பெய்து வருவதால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது.
பள்ளிகளுக்கு இன்று விடுமுறை: தமிழ்நாட்டில் பருவமழை தொடங்கியதில் இருந்தே நல்ல மழை பெய்தி வருகிறது. சென்னை மற்றும் புறநகர் பகுதியில் மாலை மற்றும் இரவு நேரங்களில் மழை பெய்து வருகிறது. மேற்கு தொடர்ச்சி மலைலை ஓட்டியுள்ள பகுதிகளில் கனமழை பெய்து வருகிறது. குறிப்பாக நீலகிரி பகுதிகளில் தொடர் கனமழை பெய்து வருவதால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. பல்வேறு இடங்களில் மழை நீர் தேங்கியுள்ள நிலையில், பொதுமக்களால் வெளியே கூட சென்று திரும்ப முடியவில்லை. தற்போதும் கூட அங்கு மழை பெய்து வரும் நிலையில், நீலகிரி மாவட்டத்தில் 4 தாலுகா பள்ளிகளுக்கு மட்டும் இன்று விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. உதகை, குந்தா, கூடலூர், பந்தலூர் தாலுகாவில் உள்ள பள்ளிகளுக்கு இன்று விடுமுறை அளித்து ஆட்சியர் அருணா விடுமுறை உத்தரவு பிறப்பித்துள்ளார்.
வானிலை நிலவரம்:
மேற்கு திசை காற்றின் வேகமாறுபாடு காரணமாக, இன்று தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி மற்றும் மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என்று வானிலை மையம் தெரிவித்துள்ளது. இன்று நீலகிரி மாவட்டத்தில் ஓரிரு இடங்களில் கன முதல் மிக கனமழையும், கோவை, திருப்பூர், தேனி, திண்டுக்கல் மாவட்ட மலைப்பகுதிகளில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது ஜூலை 20 முதல் 24ஆம் தேதி வரை தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி மற்றும் மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
Also Read: மொஹரம் பண்டிகையை கொண்டாடும் இந்துக்கள்.. 300 ஆண்டுகளாக பின்பற்றப்படும் பாரம்பரியம்!
மீனவர்களுக்கான எச்சரிக்கை:
தமிழக கடலோரப்பகுதிகள்:
இன்று மன்னார் வளைகுடா மற்றும் அதனை ஒட்டிய தென்தமிழக கடலோரப்பகுதிகள் மற்றும் குமரிக்கடல் பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 45 முதல் 55 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 65 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும்.
20.07.2024 மற்றும் 21.07.2024: மன்னார் வளைகுடா மற்றும் அதனை ஒட்டிய தென்தமிழக கடலோரப்பகுதிகள் மற்றும் குமரிக்கடல் பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 35 முதல் 45 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 55 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும்.
வங்கக்கடல் பகுதிகள்:
19.07.2024: மத்திய வங்கக்கடல், தென் வங்கக்கடலின் வடக்கு பகுதிகள் மற்றும் வடக்கு அந்தமான் கடல்பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 45 முதல் 55 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 65 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும். தெற்கு, மத்திய வங்கக்கடல் மற்றும் வடக்கு ஆந்திர கடலோரப்பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 35 முதல் 45 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 55 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும்.
20.07.2024:மத்திய வங்கக்கடல் அதனை ஒட்டிய தென் வங்கக்கடல், வடக்கு வங்கக் கடலோரப்பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 45 முதல் 55 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 65 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும். தெற்கு, மத்திய வங்கக்கடல் மற்றும் வடக்கு அந்தமான் கடல்பகுதிகள், ஆந்திர கடலோரப்பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 35 முதல் 45 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 55 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
Also Read: பெண் குழந்தையை கத்தரிக்கோலால் குத்தி கொலை செய்த தந்தை.. அதிர்ச்சி வாக்குமூலம்!