Amstrong Murder Case: ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கு.. திமுக, அதிமுக, பாஜக நிர்வாகிகள் தொடர்பு.. மேலும் 3 பேர் கைது..
பகுஜன் சமாஜ் கட்சி மாநில தலைவர் ஆம்ஸ்ட்ரங்கை படுகொலை செய்த விவகாரத்தில் இறந்த ரவுடி ஆற்காடு சுரேஷின் தம்பி பொன்னை பாலு, ராமு, திருவேங்கடம், திருமலை, செல்வராஜ், மணிவண்ணன், சந்தோஷ், அருள், கோகுல், விஜய், சிவசக்தி ஆகிய 11 நபர்களை தனிப்படை போலீசார் கைது செய்தனர். இதில் 11 பேரை 5 நாள் காவலில் எடுத்து போலீசார் விசாரணை மேற்கொண்டனர். இந்த விசாரணையின் போது ரவுடி திருவேங்கடம் காவல்துறையினரை தாக்கி தப்பி செல்ல முயலும்போது என்கவுண்டர் சுட்டுக் கொல்லப்பட்டார்.
ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் மேலும் 3 பேர் கைது: பகுஜன் சமாஜ் கட்சி மாநிலத் தலைவர் ஆம் சாங் கொலை வழக்கில் பெண் வழக்கறிஞர் உட்பட மேலும் இருவரை போலீசார் கைது செய்துள்ளனர். பகுஜன் சமாஜ் கட்சி மாநில தலைவர் ஆம்ஸ்ட்ரங்கை படுகொலை செய்த விவகாரத்தில் இறந்த ரவுடி ஆற்காடு சுரேஷின் தம்பி பொன்னை பாலு, ராமு, திருவேங்கடம், திருமலை, செல்வராஜ், மணிவண்ணன், சந்தோஷ், அருள், கோகுல், விஜய், சிவசக்தி ஆகிய 11 நபர்களை தனிப்படை போலீசார் கைது செய்தனர். இதில் 11 பேரை 5 நாள் காவலில் எடுத்து போலீசார் விசாரணை மேற்கொண்டனர். இந்த விசாரணையின் போது ரவுடி திருவேங்கடம் காவல்துறையினரை தாக்கி தப்பி செல்ல முயலும்போது என்கவுண்டர் சுட்டுக் கொல்லப்பட்டார். இந்த கொலை வழக்கில் முக்கிய குற்றவாளிகளான பொண்ணை பாலு திருமலை மற்றும் அருள் ஆகியோரை மீண்டும் காவலில் எடுத்து விசாரிக்க செம்பியம் போலீசார் மனு தாக்கல் செய்ய திட்டமிட்டு இருந்தனர்.
ஏற்கனவே ஐந்து நாள் காவலில் கைதான அவர்களிடம் விசாரணை மேற்கொண்டதிலும் தொழில்நுட்ப ரீதியாகவும் வங்கிக் கணக்குகளை ஆய்வு செய்வதிலும் பல்வேறு தகவல்கள் கிடைத்தன. அதன் அடிப்படையில் ஆறு பேரை போலீசார் அழைத்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். குறிப்பாக ஆம்ஸ்ட்ராங் கொலை செய்வதற்கு அளிக்கப்பட்ட பணப்பரிவர்த்தனை விவகாரம் தொடர்பாக விசாரணை மேற்கொண்ட போது வழக்கறிஞர் மலர்கொடி மற்றும் ஹரிஹரன் ஆகிய இருவருக்கு தொடர்பு இருப்பது விசாரணையில் கண்டுபிடிக்கப்பட்டது.
Also Read: தலையே இல்லாமல் 18 மாதங்கள் வாழ்ந்த கோழி – எப்படி தெரியுமா?
இதையடுத்து இருவரையும் செம்பியம் போலீசார் அதிரடியாக கைது செய்துள்ளனர்.வழக்கறிஞர் மலர்கொடி பிரபல அதிமுக பேச்சாளரும் மறைந்த பிரபல தாதாவுமான தோட்டம் சேகரின் மனைவியாவார். 2001ஆம் ஆண்டு தோட்டம் சேகர் என்பவரை ரவுடி சிவக்குமார் கொலை செய்தார். தோட்டம் சேகரின் மகன்கள் 20 ஆண்டுகள் கழித்து கடந்த 2021ஆம் ஆண்டு ரவுடி சிவக்குமாரை மாம்பலத்தில் வைத்து கொலை செய்தது குறிப்பிடத்தக்கது.
ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் ஏற்கனவே கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டிருக்கும் திமுக வழக்கறிஞர் அருள் என்பவரோடு மலர்கொடி தொடர்பில் இருந்துள்ளார் எனவும், திமுக வழக்கறிஞர் அருள் வங்கி பணபரிவர்தணையை ஆய்வு செய்தபோது வழக்கறிஞர் மலர்கொடிக்கு லட்சக்கணக்கில் பணம் சென்றுள்ளது தெரியவந்ததுள்ளது. நாட்டுக்காய் (நாட்டு வெடிகுண்டு) மலர்கொடி மூலமாக அருளுக்கு சென்றுள்ளது விசாரணையில் தெரியவந்துள்ளது. இதே அடிப்படையில் தான் ஹரிஹரனுக்கும் தொடர்பு இருப்பதாக போலீசார் தரப்பில் தெரிவித்துள்ளனர். தொடர்ந்து கைது செய்யப்பட்டவர்களிடம் விசாரணை என்பது மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இந்த கொலை வழக்கில் மேலும் பலர் கைதாகலாம் என போலீசார் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், இந்த கொலை வழக்கில் சதிஷ் என்பவர் கைது செய்யப்பட்டுள்ளார். மேலும், வடசென்னை மாவட்ட பாரதிய ஜனதா கட்சி மகளிர் அணி செயலாளரும், ஆற்காடு சுரேஷின்( தோழி) கள்ளக்காதலியும், பெண் ரவுடியுமான புளியந்தோப்பு அஞ்சலையை போலீசார் தேடி வருகின்றனர். இதற்கிடையில், புனித தோமையர் மலை ஆயுதப்படை அலுவலகத்தில் பகுஜன் சமாஜ் கட்சியின் தலைவர் ஆம்ஸ்ட்ராங் கொலையில் தொடர்புடைய மூன்று பேர் சீனிவாசன், கார்த்திக், கிறிஸ்டோபர் ஆகியோர் நேற்று இரவு முதல் போலீஸ் கஸ்டடியில் வைத்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
Also Read: பாத்ரூம் உப்புக்கரையை ஈசியா போக்கலாம்.. இதோ எளிதான சில வழிகள்!