5
Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வெப் ஸ்டோரீஸ்வணிகம்விளையாட்டுகல்விடெக்னாலஜி

Amstrong Murder Case: ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கு.. பிரபல இயக்குநர் நெல்சன் மனைவியிடம் போலீசார் விசாரணை..

பகுஜன் சமாஜ் கட்சியின் மாநில தலைவரான ஆம்ஸ்ட்ராங் கொலை செய்யப்பட்ட வழக்கில் இதுவரை 24 நபர்களை போலீசார் கைது செய்துள்ளனர். அதில் திருவேங்கடம் என்பவர் என்கவுண்டர் செய்யப்பட்டார். இந்த கொலை வழக்கில் தொடர்புடையதாக பிரபல ரவுடியான சம்பவம் செந்தில் மற்றும் சீசிங் ராஜாவை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர்.

Amstrong Murder Case: ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கு.. பிரபல இயக்குநர் நெல்சன் மனைவியிடம் போலீசார் விசாரணை..
ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கு
Follow Us
aarthi-govindaramantv9-com
Aarthi Govindaraman | Updated On: 20 Aug 2024 23:16 PM

ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கு: ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் போலீசாரால் தேடப்படும் ரவுடி சம்போ செந்திலின் கூட்டாளி மொட்டை கிருஷ்ணன் வெளி நாட்டிற்கு குடும்பத்துடன் தப்பியோடியதாக கூறப்படும் நிலையில் அவருக்கு அடைக்கலம் கொடுத்தார்களா? என்ற சந்தேகத்தின் அடிப்படையில் பிரபல திரைப்பட இயக்குனர் நெல்சனின் மனைவியிடம் போலீசார் விசாரணை நடத்தியுள்ளனர். அடுத்தக்கட்டமாக நெல்சனிடம் விசாரணை நடத்தவும் திட்டமிட்டுள்ளனர். பகுஜன் சமாஜ் கட்சியின் மாநில தலைவரான ஆம்ஸ்ட்ராங் கொலை செய்யப்பட்ட வழக்கில் இதுவரை 24 நபர்களை போலீசார் கைது செய்துள்ளனர். அதில் திருவேங்கடம் என்பவர் என்கவுண்டர் செய்யப்பட்டார். இந்த கொலை வழக்கில் தொடர்புடையதாக பிரபல ரவுடியான சம்பவம் செந்தில் மற்றும் சீசிங் ராஜாவை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர்.

இந்நிலையில் போலீசார் நடத்திய விசாரணையில் பிரபல ரவுடி சம்போ செந்திலின் கூட்டாளி தனது குடும்பத்துடன் தாய்லாந்துக்கு தப்பி சென்றது தெரியவந்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் தொடர்புடைய வழக்கறிஞர் ஹரிஹரன் என்பவரை போலீசார் கைது செய்து விசாரணை மேற்கொண்ட போது, சம்போ செந்திலுடன் வழக்கறிஞர் சிவா மற்றும் கிருஷ்ணன் ஆகியோர் தொடர்பில் இருந்து வந்தது தெரிய வந்தது. இதனை அடுத்து சிவாவை போலீசார் தீவிரமாக தேடி வந்த நிலையில் சென்னையில் காரில் வந்தபோது போலீசார் அவரை கைது செய்தனர்.

மேலும் படிக்க: கலைஞர் 100 நாணயம்.. எங்கே கிடைக்கும்? எப்படி வாங்கலாம்? முழு விவரம்..

இந்நிலையில் இவரிடம் நடத்தப்பட்ட விசாரணையில் பல்வேறு திடுக்கிடும் தகவல்கள் வெளியானது. ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் வழக்கறிஞர் ஹரிஹரன் கைது செய்யப்பட்ட பின்பு வழக்கறிஞர் கிருஷ்ணன், சிவா உட்பட மூன்று பேரும் காரில் திருச்செந்தூர் வரை சென்றதும் அதன் பிறகு காரிலேயே மதுரை சென்று தலைமறைவாக சுற்றி வந்துள்ளனர். அதன் பிறகு கிருஷ்ணன் தனது காரை சிவாவிடம் கொடுத்து சென்னையில் தனது வீட்டில் விடும்படியும் தனக்கு வேறொரு வேலை இருப்பதாக கூறிவிட்டு சென்றுள்ளார். சிவா காரை கொண்டு சென்னைக்கு வரும் வழியில் போலீசாரிடம் சிக்கிக்கொண்டது தெரியவந்துள்ளது.

மேலும் போலீசார் கிருஷ்ணன் குறித்து விசாரணை மேற்கொண்ட போது, கிருஷ்ணன் தனது குடும்பத்துடன் மதுரை விமான நிலையத்திலிருந்து டெல்லி சென்று அங்கிருந்து தாய்லாந்திற்கு விமானம் மூலமாக தப்பி சென்று இருப்பதாக போலீசார் தகவல் தெரிவித்துள்ளனர். ஏற்கனவே ரவுடி சம்போ செந்தில் வெளிநாட்டில் பதுங்கி இருப்பதாக ஒரு தகவல் பரவி வரும் நிலையில் அவரது கூட்டாளி கிருஷ்ணனும் வெளிநாட்டிற்கு தப்பி சென்றாதக கூறப்பட்டது.

மேலும் படிக்க: நடிப்பு வாய்ப்புக்காக பாலியல் சுரண்டல்.. மோலிவுட்டின் மறுபக்கம்.. ஷாக் கொடுத்த ரிப்போர்ட்

கிருஷ்ணான் வழக்கறிஞராக உள்ள நிலையில் அவரது தொலைப்பேசி அழைப்புகளை வைத்து அடிக்கடி அவரிடம் பேசியவர்களை அழைத்து போலீசார் விசாரணை நடத்தி இருக்கிறார்கள். அந்த வகையில் நெல்சனின் மனைவி மோனியிடமும் விசாரணை நடைபெற்றுள்ளது. ஆம்ஸ்ட்ராங் கொலைக்கு பின்பு , கிருஷ்ணன் வெளிநாடு தப்பிசெல்வதற்கு முன்பு என இடைப்பட்ட காலத்தில் மோனி அடிக்கடி கிருஷ்ணனுடன் தொலைபேசியில் பேசி இருப்பதை கண்டறிந்த போலீசார் அவரை அழைத்து சில நாட்களுக்கு முன்பாக விசாரணை மேற்கொண்டுள்ளனர். கிருஷ்ணனுக்கு மோனி அடைக்கலம் கொடுத்தாரா? என்ற சந்தேத்தின் அடிப்படையில் விசாரணை நடைப்பெற்றுள்ளது.

விசாரணையில் வழக்கு ஒன்றின் சம்பந்தமாக பேசியதாக மோனி ரிவித்துள்ளார். அடுத்தகட்டமாக நெல்சனிடமும் விசாரணை நடத்த திட்டமிட்டுள்ளனர். திருவொற்றியூரை சேர்ந்த கட்டிட காண்ட்ராக்டரை மிரட்டி பணம் பறித்ததாக கடந்த ஜூலை மாதம் சம்போ செந்தில், வழக்கறிஞர் மொட்டை கிருஷ்ணன் உள்ளிட்ட 13 பேர் மீது புதுவண்ணாரப்பேட்டை போலீசார் வழக்குப் பதிவு செய்திருந்தது குறிப்பிடத்தக்கது

Latest News