5
Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வெப் ஸ்டோரீஸ்வணிகம்விளையாட்டுகல்விடெக்னாலஜி

Amstrong Murder: செல்போன் ஆடியோ.. கொலைக்கான சதி.. ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் வழக்கறிஞர் அருளிடம் மீண்டும் விசாரணை!

பகுஜன் சமாஜ் கட்சி மாநில தலைவர் ஆம்ஸ்ட்ரங்கை படுகொலை செய்த விவகாரத்தில் இறந்த ரவுடி ஆற்காடு சுரேஷின் தம்பி பொன்னை பாலு, ராமு, திருவேங்கடம், திருமலை, செல்வராஜ், மணிவண்ணன், சந்தோஷ், அருள், கோகுல், விஜய், சிவசக்தி ஆகிய 11 நபர்களை தனிப்படை போலீசார் கைது செய்தனர்.

Amstrong Murder: செல்போன் ஆடியோ.. கொலைக்கான சதி.. ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் வழக்கறிஞர் அருளிடம் மீண்டும் விசாரணை!
கோப்பு புகைப்படம்
Follow Us
aarthi-govindaramantv9-com
Aarthi Govindaraman | Updated On: 24 Jul 2024 09:19 AM

ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கு: ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் கைதான வழக்கறிஞர் அருளை போலீஸார் தனியாக அழைத்துச் சென்று விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இரண்டாவது முறையாக போலீஸ் காவலில் எடுக்கப்பட்டுள்ள வழக்கறிஞர் அருளை இன்று அதிகாலை, பெரம்பூர், புழல் உள்ளிட்ட இடங்களுக்கு அழைத்துச் சென்று விசாரணை நடத்தி வருகின்றனர். கொலைக்கான சதி திட்டம் தீட்டிய இடங்களுக்கும் அழைத்துச் சென்று போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். பகுஜன் சமாஜ் கட்சி மாநில தலைவர் ஆம்ஸ்ட்ரங்கை படுகொலை செய்த விவகாரத்தில் இறந்த ரவுடி ஆற்காடு சுரேஷின் தம்பி பொன்னை பாலு, ராமு, திருவேங்கடம், திருமலை, செல்வராஜ், மணிவண்ணன், சந்தோஷ், அருள், கோகுல், விஜய், சிவசக்தி ஆகிய 11 நபர்களை தனிப்படை போலீசார் கைது செய்தனர்.

இதில் 11 பேரை 5 நாள் காவலில் எடுத்து போலீசார் விசாரணை மேற்கொண்டனர். இந்த விசாரணையின் போது ரவுடி திருவேங்கடம் காவல்துறையினரை தாக்கி தப்பி செல்ல முயலும்போது என்கவுண்டர் சுட்டுக் கொல்லப்பட்டார். இந்த கொலை வழக்கில் முக்கிய குற்றவாளிகளான பொண்ணை பாலு திருமலை மற்றும் அருள் ஆகியோரை மீண்டும் காவலில் எடுத்து விசாரிக்க செம்பியம் போலீசார் மனு தாக்கல் செய்ய திட்டமிட்டு இருந்தனர். இந்நிலையில் பாஜக கட்சியை சேர்ந்த அஞ்சலையை கடந்த சில நாட்களுக்கு முன் போலீசார் கைது செய்தனர்.

Also Read: நல்லெண்ணெயை இப்படி பயன்படுத்துங்க முடி அடர்த்தியா வளரும்..

அவரிடம் மேற்கொண்ட விசாரணையில் பல திடுக்கிடும் தகவல்கள் வெளியானது. கொலை திட்டத்தை வெற்றிகரமாக முடிக்க புழல், சித்தூர், அரக்கோணம், திருநின்றவூர் ஆகிய இடங்களில் பலமுறை நடந்த சதி ஆலோசனை கூட்டங்களில் அஞ்சலை பங்கேற்றதாகவும் விசாரணையில் அம்பலமானது. மேலும் அஞ்சலை மற்றும் கூட்டாளிகள் பயன்படுத்திய செல்போன்களை கூவம் ஆற்றில் இருந்து போலீசார் மீட்டு அதில் இருக்கும் ஆடியோ பதிவுகளை கேட்டனர். மேலும், அரசு அதிகாரிகள் காவல்துறையினரையும் சரிகட்டி விடலாம். அப்புறம் நம்மை கண்ட்ரோல் பண்ணுவதற்கு சென்னையில் ஆளே கிடையாது என உரத்த குரலில் பேசி உன்னை பாலு தலைமையிலான கும்பலுக்கு வெறி யேற்றியுள்ளார் அஞ்சலை. நீங்கள் சிறை சென்றாலும் உங்கள் குடும்பத்திற்கு தேவையான நிதி உதவி, பாதுகாப்பு வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாகவும் பேசி கொலையாளிகளுக்கு மன தைரியத்தை ஊட்டியுள்ளார்.

இந்நிலையில் இரண்டாவது முறையாக வழக்கறிஞர் அருளை காவல் துறையினர் காவலில் எடுத்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். குறிப்பாக வழக்கறிஞர் அருளை இன்று அதிகாலை, பெரம்பூர், புழல் உள்ளிட்ட இடங்களுக்கு அழைத்துச் சென்று விசாரணை நடத்தி வருகின்றனர். கொலைக்கான சதி திட்டம் தீட்டிய இடங்களுக்கும் அழைத்துச் சென்று போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Also Read: சென்னையில் இன்று மின்தடை.. எந்தெந்த பகுதிகளில்? லிஸ்ட் இதோ..

Latest News