5
Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வெப் ஸ்டோரீஸ்வணிகம்விளையாட்டுகல்விடெக்னாலஜி

Amstrong Murder: ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கு.. கைதானவர்களின் சொத்துக்களை முடக்க திட்டம்..

பகுஜன் சமாஜ் கட்சியின் மாநில தலைவராக இருந்த ஆம்ஸ்ட்ராங் படுகொலை செய்யப்பட்ட நிலையில் இந்த சம்பவம் தொடர்பாக இதுவரை 21 நபர்களை போலீசார் கைது செய்துள்ளனர். அதில் திருவேங்கடம் என்பவர் என்கவுண்டர் செய்யப்பட்டார். இவ் வழக்கில் தொடர்புடைய நபர்களை போலீசார் கைது செய்து வரும் நிலையில், மிகப்பெரிய ரவுடிகள் ஆன சம்பவம் செந்தில் மற்றும் சீசிங் ராஜாவை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர்.

Amstrong Murder: ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கு.. கைதானவர்களின் சொத்துக்களை முடக்க திட்டம்..
மாதிரி புகைப்படம்
aarthi-govindaraman
Aarthi Govindaraman | Published: 29 Jul 2024 18:18 PM

ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கு: ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் கைதான 20 நபர்களின் சொத்துக்களை முடக்க சென்னை காவல்துறை திட்டமிட்டுள்ளது. பகுஜன் சமாஜ் கட்சியின் மாநில தலைவராக இருந்த ஆம்ஸ்ட்ராங் படுகொலை செய்யப்பட்ட நிலையில் இந்த சம்பவம் தொடர்பாக இதுவரை 21 நபர்களை போலீசார் கைது செய்துள்ளனர். அதில் திருவேங்கடம் என்பவர் என்கவுண்டர் செய்யப்பட்டார். இவ் வழக்கில் தொடர்புடைய நபர்களை போலீசார் கைது செய்து வரும் நிலையில், மிகப்பெரிய ரவுடிகள் ஆன சம்பவம் செந்தில் மற்றும் சீசிங் ராஜாவை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர். போலீசார் கைது செய்யப்பட்ட நபர்களை ஒவ்வொருவராக கஸ்டடி எடுத்து விசாரணை மேற்கொண்ட போது அதிக அளவிலான பணப் பரிமாற்றம் நடந்திருப்பது போலீசாரின் விசாரணையில் தெரிய வந்ததால், அவர்களது சொத்துக்களை முடக்கும் நடவடிக்கையில் போலீசார் ஈடுபட இருப்பதாக தகவல் தெரிவித்துள்ளனர்.

மேலும் கைது செய்யப்பட்ட நபர்களின் வங்கி கணக்கு பணபரிவர்த்தனைகள், சொத்து பட்டியல், வலையில் கிடைத்த பணத்தை எதில் பயன்படுத்தியுள்ளனர் என்ற முழு விவரங்களையும் போலீசார் சேகரிக்கும் பணியில் ஈடுபட்டு வருவதாக தகவல் தெரிவித்துள்ளது. மேலும் ஆம்ஸ்ட்ராங் கொலைக்காக எவ்வளவு பணம் கைமாறி இருப்பதையும் போலீசார் பட்டியலை தயாரிக்கும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

Also Read: அழிவை நோக்கி செல்கிறதா ஜப்பான்.. ஆராய்ச்சிகள் கூறும் காரணம் இவை தான்!

ரவுடிகளின் சொத்துக்கள் மற்றும் அவர்களது பணத்தை முடக்கினால் ரவுடிசம் கட்டுப்படுத்தப்படும் என்ற நோக்கில் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்படுவதாக போலீசார் தரப்பில் தகவல் தெரிவித்துள்ளனர். இதற்கிடையில், போலீசாரால் தேடப்படக்கூடிய ரவுடி சம்போ செந்திலின் கூட்டாளி வெளிநாட்டிற்கு தப்பியோடியதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் முக்கிய நபராக பார்க்கக்கூடிய சம்போ செந்தில் தலைமறைவாகி உள்ள நிலையில் அவரது கூட்டாளி கிருஷ்ணன் கைது செய்யப்பட்ட ஹரிஹரனுடன் நெருக்கமாக இருந்த நிலையில் கிருஷ்ணன் வெளி நாட்டிற்கு தப்பி சென்றுருபது போலீசார் விசாரணையில் தகவல்.

வழக்கறிஞர் ஹரிஹரன் கைது செய்யப்பட்ட உடன் கிருஷ்ணன், சிவா உட்பட மூன்று பேர் காரில் திருச்சென்றந்தூர் சென்றதும், அதன் பிறகு காரிலேயே மதுரை சென்றனர். அதன் பிறகு கிருஷ்ணன் தனது காரை சிவாவிடம் கொடுத்து சென்னைக்கு செல்லும் படி அறிவுறுத்தினார். சென்னைக்கு வந்தவுடன் வழக்கறிஞர் சிவா காவல்துறையிடம் வசமாக சிக்கிக்கொண்டார். ஆனால் கிருஷ்ணன் விமானம் மூலமாக குடும்பத்துடன் தாய்லாந்திற்கு தப்பி சென்றிருப்பதை போலீசார் கண்டுபிடித்துள்ளதாக தகவல்.

Also Read:  தூத்துக்குடி துப்பாக்கிச் சூடு.. அதிகாரிகளின் சொத்து விவரங்கள் வழங்க உயர்நீதிமன்றம் உத்தரவு..

Latest News