ஒற்றை கை இருந்தாலும் தன்நம்பிக்கையுடன் சாதித்து காட்டிய மாணவன்.. கோவையில் நெகிழ்ச்சி சம்பவம்..
கோவையில் உள்ள ஒரு பிரபல தனியார் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் பி.காம் இரண்டாம் ஆண்டு படிக்கும் மாணவர் கே.சஞ்சய். இவர் 2013 ஆம் ஆண்டு சாலை விபத்தில் தனது வலது கை முழங்கைக்குக் கீழே உள்ள இயக்கத்தை இழந்தார். அன்னூர் அருகே சந்திராபுரம் கிராமத்தில் வசித்து வருபவர் சஞ்சய்.
கோயம்புத்தூரில் 18 வயது கல்லூரி மாணவர் ஒருவர், தொழில்நுட்பக் கல்வி இயக்குனரகம் நடத்திய லோயர் டைப்ரைட்டிங் தேர்வை, வலது கை செயலற்ற நிலையில் இருந்தும், ஒற்றை கையில் எழுதி வெற்றிகரமாக முடித்துள்ளார். இந்த சம்பவம் பெரும் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கோவையில் உள்ள ஒரு பிரபல தனியார் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் பி.காம் இரண்டாம் ஆண்டு படிக்கும் மாணவர் கே.சஞ்சய். இவர் 2013 ஆம் ஆண்டு சாலை விபத்தில் தனது வலது கை முழங்கைக்குக் கீழே உள்ள இயக்கத்தை இழந்தார். அன்னூர் அருகே சந்திராபுரம் கிராமத்தில் வசித்து வருபவர் சஞ்சய்.
Also Read: ரஷ்ய உளவாளி பெலுகா திமிங்கலம்.. நார்வேயில் சடலமாக கண்டெடுப்பு..வெளிநாடுகளின் சதி காரணமா?
இவர் தனியார் பத்திரிக்கைக்கு அளித்த பேட்டியில், “கல்லூரி வழிகாட்டுதல்களின்படி, மாணவர்கள் தட்டச்சு வகுப்புகளை முடிக்க வேண்டும். எனது வலது கை பற்றி கல்லூரி நிர்வாகத்திடம் தெரிவித்தேன். அதிலிருந்து எனக்கு விலக்கு அளிக்க முடியும் என்று ஆசிரியர்கள் குறிப்பிட்டாலும், தேவைப்பட்டால், அது எனது வாழ்க்கையை முன்னேற்றும் என்பதால் படிப்பை முடிக்க முடிவு செய்தேன்.
மேலும் கருமத்தம்பட்டியில் உள்ள தனியார் வணிகக் கல்லூரியில் தட்டச்சுப் பணியில் சேர்ந்தேன். எனக்கு வலது கை செயலற்ற நிலையில் இருப்பதை பற்றி அறிந்த பிறகு, ஆசிரியர் ஏ சுசீலா தினமும் மாலையில் இரண்டு மணி நேரம் சிறப்பு கவனம் செலுத்தி பயிற்சி அளிக்கத் தொடங்கினார், மற்றவர்கள் வழக்கமாக ஒரு மணி நேரம் மட்டுமே பயிற்சி மேற்கொள்வார்கள்.
Also Read: புருனேவிற்கு செல்லும் முதல் இந்திய பிரதமர்.. 3 நாள் பயணத்தின் முக்கியத்துவம் என்ன?
ஆரம்பத்தில், தட்டச்சு செய்ய இடது கையை முழுமையாக நம்பியிருந்ததால் சிரமப்பட்டேன்.ஆனால், ஆறு மாத கால தொடர் பயிற்சியால், ஒற்றை கையால் எளிதாக டைப்ரைட்டிங் படிக்க முடிந்தது,” என தெரிவித்தார். சஞ்சய் ஒரு மணி நேர தட்டச்சு தேர்வில் (லோயர் டைப்ரைட்டிங்) சிறப்பாக செயல்பட்டதாகவும், 100 க்கு 80 க்கு மேல் மதிப்பெண் பெறுவார் என்றும் நம்பிக்கை தெரிவித்தார். சிவா வணிகக் கல்லூரியின் உரிமையாளர் சுசீலா, தனியார் பத்திரிக்கையிடம் பேசுகையில், சஞ்சய் அங்கு இருந்த காலத்தில் தன்னம்பிக்கையுடன் தட்டச்சுக் கற்றுக்கொண்டதாக கூறினார். மற்ற விண்ணப்பதாரர்கள் போல ஒரு கை இல்லாத நிலையிலும் ஒரு மணி நேரத்தில் தேர்வை வெற்றிகரமாக முடித்தார் என்பது பெருமைக்குரிய விஷயம் என தெரிவித்தார்.