Nirmala Sitharaman: ஜிஎஸ்டியால் கடை நடத்த முடியல.. நிர்மலா சீதாராமனிடம் புலம்பிய தொழிலதிபர்! - Tamil News | Annapurna Group Chairman Srinivasan's request to Finance Minister Nirmala Sitharaman | TV9 Tamil

Nirmala Sitharaman: ஜிஎஸ்டியால் கடை நடத்த முடியல.. நிர்மலா சீதாராமனிடம் புலம்பிய தொழிலதிபர்!

Published: 

12 Sep 2024 06:45 AM

மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் கோவையில் உள்ள தொழில் அமைப்பினருடன் நேற்று ஆலோசனை நடத்தினார். இந்தக் கூட்டத்தில் கோவை தெற்கு தொகுதி எம்எல்ஏ வானதி சீனிவாசனும் கலந்து கொண்டிருந்தார். கோவை கொடிசியா வளாகத்தில் நடைபெற்ற இந்த சந்திப்பில் போது எடுக்கப்பட்ட வீடியோக்கள் அனைத்தும் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

Nirmala Sitharaman: ஜிஎஸ்டியால் கடை நடத்த முடியல.. நிர்மலா சீதாராமனிடம் புலம்பிய தொழிலதிபர்!

கோப்பு புகைப்படம்

Follow Us On

நிர்மலா சீதாராமன்: இந்தியாவைப் பொறுத்தவரை ஆளும் பாஜக அரசு தொடந்து 3வது முறையாக ஆட்சியில் அமர்ந்துள்ளது. இதில் 2019 ஆம் ஆண்டு முதல் நிர்மலா சீதாராமன் நிதியமைச்சராக இருந்து வருகிறார். அவரது தலைமையில் பொருளாதாரத்தை சீர்படுத்த பல்வேறு விதமான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது. இதனிடையே மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் கோவையில் உள்ள தொழில் அமைப்பினருடன் நேற்று ஆலோசனை நடத்தினார். இந்தக் கூட்டத்தில் கோவை தெற்கு தொகுதி எம்எல்ஏ வானதி சீனிவாசனும் கலந்து கொண்டிருந்தார். கோவை கொடிசியா வளாகத்தில் நடைபெற்ற இந்த சந்திப்பில் போது எடுக்கப்பட்ட வீடியோக்கள் அனைத்தும் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

இந்நிகழ்ச்சியில் அமைச்சர் நிர்மலா சீதாராமன் முதலில் பேசினார். அப்போது, “சிறு குறு மற்றும் நடுத்தர தொழில் வளர்ச்சிக்காக வளர்ச்சிக்காகவும் பொருளாதார மேம்பாட்டிற்காகவும் எடுக்கப்பட்டுள்ள மத்திய அரசு எடுத்துள்ள நடவடிக்கைகள் குறித்து பேசினார். தொடர்ந்து நிகழ்ச்சியில் வந்திருந்த அனைத்து தொழில் மற்றும் வர்த்தக அமைப்பினருக்கும் பேச வாய்ப்பு அளிக்கப்பட்டது. இதில் பேசிய தமிழ்நாடு ஹோட்டல் உரிமையாளர் கூட்டமைப்பின் தலைவரும், கோவை அன்னபூர்ணா உணவு குழு தலைவருமான சீனிவாசன் தன்னுடைய ஆதங்கத்தைப் புலம்பித் தீர்த்து விட்டார்.

ஆரம்பத்தில் பாராட்டு.. பின்பு புலம்பல்

முதலில் பேச ஆரம்பித்த சீனிவாசன், “கடந்த காலங்களில் வங்கி கடன் பெறுவதற்கு ஆறு மாத காலம் அலைய வேண்டியிருந்தது ஆனால் தற்போது வங்கியாளர்கள் தங்களை துரத்துவதாகவும், எண்ணற்ற சேவைகள் வங்கிகள் மூலமாக வழங்குவது உண்மையிலேயே சிறப்பான ஒன்று” என பாராட்டினார்.

தொடர்ந்து பேசிய அவர், மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமனிடம் வேண்டுகோள் ஒன்றை விடுத்தார். அதாவது. “உங்கள் அருகில் இருக்கும் கோவை தெற்கு தொகுதி எம்எல்ஏ வானதி சீனிவாசன் எங்கள் கடையின் ரெகுலர் கஸ்டமர். வரும்போதெல்லாம் சண்டை போடுகிறார்.ஏனென்றால் எங்களுக்கு இனிப்புகளுக்கு 5 சதவீதம் ஜிஎஸ்டி வரி விதிக்கிறீர்கள். உணவுக்கு 5 சதவிகிதம், காரத்துக்கு 12 சதவிகிதம், அடுத்ததாக பேக்கரி வகையில் பார்த்தால் பிரட் மற்றும் பன் தவிர மற்ற அனைத்திற்கும் 28% ஜிஎஸ்டி வரி விதிக்கிறீர்கள்.

வானதி சீனிவாசன் கடைக்கு வந்து முதலில் ஜிலேபி சாப்பிடுகிறார். அடுத்ததாக காபி குடிக்கும்போது காரம் தேவைப்படுகிறது. அந்த காரத்துக்கு 12 சதவீதம் ஜிஎஸ்டி என சொன்னால் சண்டைக்கு வருகிறார். ஒரே பில்லில் ஒரு குடும்பத்திற்கு வெவ்வேறு விதமான ஜிஎஸ்டி போட்டு கொடுப்பது கஷ்டமாக இருக்குது. ஒரு பன்னுக்கு ஜிஎஸ்டி கிடையாது. ஆனால் பன்னுக்குள் வைக்கப்படும் கிரீமுக்கு 18% ஜிஎஸ்டி விதிக்கப்படுகிறது.

இதனால் வாடிக்கையாளர் டென்ஷனாகி எங்களிடம் நீங்கள் கிரீமையும் ஜாமையும் கொண்டு வாருங்கள். நாங்களே வைத்துக் கொள்கிறோம் என சொல்கிறார்கள். எங்களால் கடை நடத்த முடியல மேடம்.  எல்லாவற்றிற்கும் ஒரே மாதிரியான ஜிஎஸ்டி வரி விதிக்க வேண்டும்” என சொன்னார்.

மேலும், “வானதி சீனிவாசன் எங்கள் தொகுதியில் தான் உள்ளார். கடையில் வந்து வடநாட்டில் அதிகமாக ஸ்வீட் சாப்பிடுகிறார்கள். அதனால் ஐந்து சதவீதம் ஜிஎஸ்டி வரி விதிக்கப்படுகிறது. காரத்துக்கு 12 சதவீதம் விதிக்கப்பட்டுள்ளது என சொன்னார். நான் அதற்கு தமிழ்நாட்டில் ஸ்வீட் காரம் காபி என்று தான் போகும். அதனை தயவு செய்து பரிசீலிக்க  வேண்டும் என கேட்டுக்கொண்டார்.

இதற்கு பதில் அளித்த நிர்மலா சீதாராமன் ஒவ்வொரு மாநிலத்திற்கும் தனித்தனியாக ஜிஎஸ்டி வரி போடப்படுவதில்லை என தெரிவித்தார். அதற்கு சீனிவாசன், “இல்லை மேடம் நீங்கள் இந்தியா முழுவதும் ஒரே மாதிரியாக ஏத்திவிட்டாலும் சந்தோசம். ஆனால் வெவ்வேறு விதமாக வைக்காதீர்கள்” என கேட்டுக்கொண்டார்.  “ஒரு குடும்பம் வந்தால் வெவ்வேறு விதமாக ஜிஎஸ்டி வரி போடுவதால் பில் போடுவதில் கம்ப்யூட்டரே திணறி விடுகிறது.தொடர்ந்து வருடத்தில் ஏதாவது ஒரு நாள் தான் ஹோட்டல்களில் ஒரு அறைக்கு 7500 பில் போடுவோம். ஆனால் இப்போதெல்லாம் ஹோட்டலின் அறை கட்டணங்களை தனியார் வலைத்தளங்கள் தான் தீர்மானிக்கிறது. ஒரு நாள் 7500 பில் போட்டதற்கு ஆண்டு முழுவதும் 18 செய்தும் ஜிஎஸ்டி போடுகிறார்கள். எனவே இதனை கட்டாயம் பரிசீலனை செய்ய வேண்டும்” என சீனிவாசன் கேட்டுக்கொண்டார்

Related Stories
இனி இரவு நேரத்தில் ஆன்லைன் கேம் விளையாட முடியாது.. அமலாகும் புதிய விதிமுறைகள் என்ன?
Tamilnadu Weather Alert: வாட்டி வதைக்கும் வெயில்.. இன்னும் 4 நாட்களுக்கு மோசமாக இருக்கும்.. வானிலை மையம் தகவல்!
ஸ்விக்கியில் பணியாற்றி வந்த கல்லூரி மாணவன் தூக்கிட்டு தற்கொலை.. வாடிக்கையாளர் கொடுத்த புகாரால் நேர்ந்த சோகம்..
அமைச்சர்கள் மீதான சொத்து குவிப்பு வழக்கு.. தமிழக அரசு பதிலளிக்க உயர்நீதிமன்றம் உத்தரவு..
சென்னை எழும்பூரிலிருந்து புறப்படும் பயணிகள் ரயில் இயக்கத்தில் மாற்றம்.. எந்தெந்த ரயில்? நோட் பண்ணிகோங்க..
Tamilnadu Powercut : சென்னை முதல் கோவை வரை.. முக்கிய மாவட்டங்களில் இன்று மின்தடை.. லிஸ்ட் இதோ..
பக்கவாதத்தை தடுக்கும் நூக்கல்.. இதில் இவ்வளவு நன்மை பண்புகளா..?
கோலிவுட்டில் இந்த வாரம் வெளியாகும் படங்களின் லிஸ்ட்
இந்த குழந்தை பிரபல சினிமா குடும்பத்திற்கு மருமகள் ஆக போறாங்க...
கல்லீரலை சுத்தப்படுத்த இந்த உணவுகளை சாப்பிடுங்கள்..!
Exit mobile version