5
Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வெப் ஸ்டோரீஸ்வணிகம்விளையாட்டுகல்விடெக்னாலஜி

Archana Patnaik: தமிழ்நாட்டிற்கு முதல் பெண் தலைமை தேர்தல் அதிகாரியாக அர்ச்சனா பட்நாயக் நியமனம்!

தமிழக தேர்தல் வரலாற்றில் முதல் பெண் அதிகாரி என்ற சிறப்பை இவர் பெற்றுள்ளார். தலைமை தேர்தல் அதிகாரியாக இருந்த சத்திய பிரகாஷ் சாகு கால்நடைத்துறை செயலாளராக இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார். அர்ச்சனா பட் நாயக் தற்போது சிறுகுறு தொழில் நிறுவனங்கள் துறையின் செயலாளராக உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. 

Archana Patnaik: தமிழ்நாட்டிற்கு முதல் பெண் தலைமை தேர்தல் அதிகாரியாக அர்ச்சனா பட்நாயக் நியமனம்!
கோப்பு புகைப்படம்
petchi-avudaiappantv9-com
Petchi Avudaiappan | Updated On: 08 Nov 2024 23:00 PM

அர்ச்சனா பட்நாயக்: தமிழ்நாட்டின் புதிய தலைமை தேர்தல் அதிகாரியாக அர்ச்சனா பட்நாயக் ஐஏஎஸ் நியமனம் செய்யப்பட்டுள்ளார். தமிழக தேர்தல் வரலாற்றில் முதல் பெண் அதிகாரி என்ற சிறப்பை இவர் பெற்றுள்ளார். 2018 ஆம் ஆண்டு முதல் தமிழகத்தின் தலைமை தேர்தல் அதிகாரியாக இருந்த சத்திய பிரதா சாஹூ சமீபத்தில் கால்நடைத்துறை செயலாளராக இடமாற்றம் செய்யப்பட்ட நிலையில் அந்த பொறுப்பிற்கு இவர் நியமிக்கப்பட்டுள்ளார். அர்ச்சனா பட் நாயக் தற்போது சிறு,குறு தொழில் நிறுவனங்கள் துறையின் செயலாளராக உள்ளார்.

Also Read: Kovai Selvaraj: மகன் திருமணத்தில் சோகம்.. முன்னாள் எம்.எல்.ஏ. கோவை செல்வராஜ் மரணம்!

முன்பாக 2013 ஆம் ஆண்டு கோவை மாவட்ட ஆட்சியராக அர்ச்சனா பட்நாயக் பதவி வகித்தார். 1945 ஆம் ஆண்டுக்குப் பின் அந்த மாவட்டத்தில் பதவியேற்ற முதல் பெண் ஆட்சியர் என்ற பெருமையைப் பெற்றார். இதனைத் தொடர்ந்து 2017 ஆம் ஆண்டு தனிப்பட்ட காரணங்களுக்காக ஒடிசா மாநிலத்துக்கு பணியிட மாற்றம் செய்யப்பட்டார். கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் ஆசிரியர் தேர்வு வாரிய தலைவராக பதவி வகித்தார். இதனைத் தொடர்ந்து செப்டம்பர் மாதம் நடைபெற்ற பணியிட மாற்றத்தின்போது அர்ச்சனா பட்நாயக்கிற்கு சிறு,குறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் துறை ஒதுக்கப்பட்டது.

Also Read: S Ve Shekher: தமிழக பாஜகவை நம்புவது வீண்.. எஸ்.வி.சேகர் கடும் விமர்சனம்!

தமிழ்நாட்டின் முதல் பெண் அதிகாரி என்பதால் அர்ச்சனா பட்நாயக் மீது மிகப்பெரிய எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. இன்னும் ஒன்றரை ஆண்டு காலத்தில் சட்டமன்ற தேர்தல் நடக்கவுள்ள நிலையில் தமிழ்நாட்டில் வாக்குப்பதிவு சதவீதத்தை அதிகரிப்பது தொடர்பாக அவர் என்னென்ன நடவடிக்கை எடுக்கப்போகிறார் என்ற கேள்வியும் எழுந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

Latest News