Madurai: மதுரை முதலமைச்சர் கோப்பை போட்டி.. வீரர்களிடையே மோதலால் பரபரப்பு..
இறுதி போட்டியின் கடைசி ஒரு நிமிடம் இருந்த நிலையில் தீவிரமாக இரு அணி வீரர்களும் விளையாடி கொண்டிருந்தனர். அப்போது வீரர்களிடையே மீண்டும் வாக்குவாதம் ஏற்பட்டது. தொடர்ந்து சிறிய அளவிலான மோதலாக மாறியது இதனையடுத்து காவல்துறை இருதரப்பையும் அழைத்து பேச்சுவார்த்தை நடத்தினர். பின்னர் அனைவரையும் அங்கிருந்து கலைந்துப் போக சொன்னதால் போட்டியில் பரபரப்பு ஏற்பட்டது.
முதலமைச்சர் கோப்பை விளையாட்டு போட்டிகள்: மதுரையில் நடைபெற்ற முதலமைச்சர் கோப்பைக்கான இறுதிப்போட்டியின் நடுவில் இரு அணி வீரர்களும் மோதிக்கொண்டதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. இளைஞர் நலன் மற்றும் தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு துறையின் கீழ் செயல்படும் தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் சார்பாக முதலமைச்சர் கோப்பைக்கான மாநில அளவிலான விளையாட்டு போட்டிகள் சென்னை, கோவை, மதுரை, திருச்சி, செங்கல்பட்டு ஆகிய மாவட்டங்களில் நடைபெற்று வருகிறது. இதில் மதுரையில் இந்த தொடரில் தடகளம், இறகு பந்து, வளைகோல் பந்து, கபடி, சிலம்பம், நீச்சல், கூடைப்பந்து, கிரிக்கெட், கால்பந்து, மேஜைப்பந்து, கையுந்து பந்து, கைப்பந்து, சதுரங்கம், கோகோ ஆகிய பிரிவுகளில் போட்டிகள் நடைபெற்றது.
விளையாட்டுப் போட்டிகள் அனைத்தும் மதுரையில் கடந்த 6ஆம் தேதி தொடங்கியது. நேற்று (அக்டோபர் 10) வரை நடைபெற்ற இந்த போட்டிகளில் கலந்துக் கொள்வதற்காகதமிழ்நாட்டில் உள்ள 38 மாவட்டங்களை சேர்ந்த 456 வீரர்கள் மற்றும் 456 வீராங்கனைகள் வருகை தந்திருந்தனர். எம்.ஜி.ஆர் விளையாட்டரங்கில் நேற்று நடைபெற்ற இறுதிபோட்டியினை மதுரை மாவட்ட ஆட்சியர் சங்கீதா தொடங்கி வைத்தார். இறுதி போட்டியில் கோவை – சென்னை அணிகள் மோதியது.
இதனிடையே போட்டியின் இடையே நடுவர்கள் ஒருதலைபட்சமாக செயல்படுவதாக குற்றச்சாட்டு எழுந்தது. சென்னை அணிக்கு ஆதரவாக அவர்கள் செயல்படுவதாக கூறி தொடர்ந்து கோவை அணியினர் எதிர்ப்பு தெரிவித்தனர். இதனால் ஆடுகளத்தில் பரபரப்பு நிலவியது. இதனையடுத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக காவல்துறைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து போட்டி நடைபெறும் இடத்திற்கு 10க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்புக்கு வந்த நிலையில் தொடர்ந்து போட்டிகள் நடைபெற்றது.
Also Read: TTF Vasan: அன்று தங்கம்.. இன்று குப்பை.. டிடிஎஃப் வாசனை கடுமையாக விமர்சித்த செல்அம்!
இதனையடுத்து இறுதி போட்டியின் கடைசி ஒரு நிமிடம் இருந்த நிலையில் தீவிரமாக இரு அணி வீரர்களும் விளையாடி கொண்டிருந்தனர். அப்போது வீரர்களிடையே மீண்டும் வாக்குவாதம் ஏற்பட்டது. தொடர்ந்து சிறிய அளவிலான மோதலாக மாறியது இதனையடுத்து காவல்துறை இருதரப்பையும் அழைத்து பேச்சுவார்த்தை நடத்தினர். பின்னர் அனைவரையும் அங்கிருந்து கலைந்துப் போக சொன்னதால் போட்டியில் பரபரப்பு ஏற்பட்டது.
இதனையடுத்து இறுதிபோட்டியில் ஆண்கள் பிரிவில் சென்னை அணி தங்கப்பதக்கமும், கோயம்புத்தூர் அணி வெள்ளிப்பதக்கமும், ஈரோடு வெண்கலப்பதக்கமும் வென்றதாக அறிவிக்கப்பட்டது. அதேசமயம் பெண்கள் பிரிவில் சிவகங்கை அணி தங்கப்பதக்கமும், கிருஷ்ணகிரி அணி வெள்ளிப்பதக்கமும், கன்னியாகுமரி அணி வெண்கலப்பதக்கமும் வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டது. இதனையடுத்து மாவட்ட ஆட்சியர் சங்கீதா பரிசுகளை வழங்குவார் என அறிவிக்கப்பட்டிருந்தது. இதனால் வீரர், வீராங்கனைகள் எதிர்பார்ப்போடு நீண்ட நேரம் காத்திருந்தனர். ஆனால் நேரம் சென்றதே தவிர மாவட்ட ஆட்சியர் வருகை தரவில்லை. இதனால் சட்டமன்ற உறுப்பினர் பூமிநாதன் மகளிர் பிரிவு விளையாட்டு வீராங்கனைகளுக்கு பரிசுகளையும், பதக்கங்களையும் வழங்கிச் சென்றார்.
Also Read: வேகவைத்த சிக்கனை சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள்..!
இதை தொடர்ந்து ஆண்கள் பிரிவினருக்கு தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணைய அதிகாரிகள் பரிசுகளை வழங்கிச் சென்றனர் அப்போது முதல் இடத்தை பிடித்த சென்னை அணியினர் பரிசுகளை பெற்றபோது கோயம்பத்தூர் மகளிர் அணியைச் சேர்ந்த விளையாட்டு வீராங்கனைகள் திடீரென உண்மையான வெற்றியாளர்கள் கோயம்புத்தூர் அணியினர் என முழக்கங்களை எழுப்பியதால் பரபரப்பு ஏற்பட்டது. அதோடு மட்டுமல்லாமல் திடீரென நயன்தாரா என சம்பந்தம் இல்லாமல் முழக்கமிட்டதால் என்ன நடக்கிறது என்று சுற்றியிருந்தவர்களுக்கும் குழப்பம் ஏற்பட்டது.
முன்னதாக போட்டி நடைபெற்றுக் கொண்டிருந்தபோது போட்டியில் காயம் அடைந்த வீரர் ஒருவருக்கு நீண்ட நேரமாக வலியுடன் அவதிப்பட்டார். ஆனால் ஆம்புலன்ஸ் மற்றும் ஸ்ட்ரக்சர் கிடைக்காத நிலையில் பாதுகாப்பு பணியில் இருந்த காவல்துறை அதிகாரி கையில் வீரரை தூக்கி சென்று ஆம்புலன்ஸில் அனுப்பி வைத்த சம்பவம் நடைபெற்றுள்ளது.
அதேபோல் வீராங்கனை ஒருவர் திடீரென மயங்கி விழுந்ததார். அவரை தூக்கி செல்வதற்கான ஸ்ட்ரக்சர் வசதி இல்லாத நிலையில் அங்கிருந்த சக வீராங்கனைகளே கடும் சிரமத்தோடு மயங்கி விழுந்த வீராங்கனையை தூக்கி சென்று முதற்கட்ட சிகிச்சைக்காக அனுமதித்தனர். மாநில அளவிலான முதலமைச்சர் கோப்பைக்கான இறுதி போட்டியில் இது போன்று அவசர உதவிக்கான ஸ்ட்ரக்சர் உள்ளிட்ட ஏற்பாடுகள் கூட முறையாக செய்யவில்லை என பயிற்சியாளர்கள் மற்றும் விளையாட்டு வீரர்கள் அதிகாரிகளிடம் ஆதங்கத்தை வெளிப்படுத்தியுள்ளனர்.