Special Bus: தீபாவளி பண்டிகை முடிந்து சென்னை திரும்பும் மக்களே..! இன்று முதல் 3 நாட்களுக்கு சிறப்பு பேருந்துகள் இயக்கம்..
சென்னையில் இருந்து பிற மாவட்டங்களுக்கு சுமார் 5.76 மக்கள் பயணம் மேற்கொண்டுள்ளனர். மேலும், தீபாவளி பண்டிகை முடிந்த நிலையில் சொந்த ஊருக்கு சென்ற மக்கள் சென்னைக்கு திரும்பும் வகையில் இன்று முதல் 3 நாட்களுக்கு சிறப்பு பேருந்துகள் அறிவிக்கப்பட்டுள்ளது. அதாவது, வழக்கமாக இயக்கப்படும் 2,092 பேருந்துகளுடன் கூடுதலாக 12,846 பேருந்துகள் இயக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
நேற்று முன் தினம் தீபாவளி பண்டிகை கோலகலமாக கொண்டாடப்பட்டது. மக்கள் அனைவரும் தங்களது சொந்த ஊர்களுக்கு சென்று மகிழ்ச்சியுடன் கொண்டாடினார்கள். பொதுவாக பண்டிகை நாட்கள் மற்றும் விசேஷ நாட்கள் என்றாலே தமிழ்நாடு அரசு தரப்பில் கூடுதல் பேருந்துகள் இயக்கப்படும். அந்த வகையில் தீபாவளி பண்டிகைக்காக தமிழ்நாட்டில் சுமார் 11,176 கூடுதல் பேருந்துகள் இயக்கப்பட்டது. அதாவது அக்டோபர் 28,29, 30 ஆகிய மூன்று நாட்களில் 11 ஆயிரம் பேருந்துகள் இயக்கப்பட்டது. இது தொடர்பாக வெளியிடப்பட்ட செய்தி குறிப்பில், சென்னையிலிருந்து தினசரி இயக்கக்கூடிய 2092 பேருந்துகளுடன் 4,508 சிறப்பு பேருந்துகள் என மொத்தமாக 10.784 பேருந்துகள் இயக்கப்பட்டு, 5.76 இலட்சம் பயணிகள் தங்கள் சொந்த ஊர்களுக்கு பயணம் மேற்கொண்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டது.
இந்த மூன்று நாட்களில் சென்னையில் இருந்து பிற மாவட்டங்களுக்கு சுமார் 5.76 மக்கள் பயணம் மேற்கொண்டுள்ளனர். மேலும், தீபாவளி பண்டிகை முடிந்த நிலையில் சொந்த ஊருக்கு சென்ற மக்கள் சென்னைக்கு திரும்பும் வகையில் இன்று முதல் 3 நாட்களுக்கு சிறப்பு பேருந்துகள் அறிவிக்கப்பட்டுள்ளது. அதாவது, வழக்கமாக இயக்கப்படும் 2,092 பேருந்துகளுடன் கூடுதலாக 12,846 பேருந்துகள் இயக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
Also Read: சர்ச்சையான சிராஜ் பேட்டிங் ஆர்டர்.. டெஸ்ட் கிரிக்கெட்டில் நைட் வாட்ச்மேன் என்றால் என்ன..?
சிறப்பு பேருந்துகள் இயக்கம்:
இது தொடர்பாக வெளியிடப்பட்ட அறிக்கையில், “ 2024 தீபவாளி பண்டிகையை முன்னிட்டு, பொதுமக்கள் சிரமமின்றி தங்கள் சொந்த ஊர்களுக்கு பயணம் செய்திடவும், பண்டிகை முடிந்து சென்னை மற்றும் பிற ஊர்களுக்கு திரும்பிடும் வகையில் சிறப்புப் பேருந்துகளை இயக்கிட முதலமைச்சர் அவர்கள் உத்தரவிட்டார்கள்.
தீபாவளி பண்டிகையை முன்னிட்டு, போக்குவரத்துத்துறை அமைச்சரின் அறிவிப்பின்படி, கடந்த 28.10.2024 முதல் 30.10.2024 ஆகிய 3 நாட்களில் சென்னையிலிருந்து தினசரி இயக்கக்கூடிய 2092 பேருந்துகளுடன் 4,508 சிறப்பு பேருந்துகள் என மொத்தமாக 10.784 பேருந்துகள் இயக்கப்பட்டு, 5.76 இலட்சம் பயணிகள் தங்கள் சொந்த ஊர்களுக்கு பயணம் மேற்கொண்டுள்ளனர்.
Also Read: ஸ்பெயினில் கனமழை காரணமாக ஏற்பட்ட வெள்ளம்.. 205 பேர் உயிரிழந்த சோகம்..
தீபாவளி பண்டிகை முடிந்த பின்னர், பிற ஊர்களிலிருந்து சென்னைக்கு வரும் பயணிகளின் வசதிக்காக 02/11/2024 முதல் 04/11/2024 வரையில் தினசரி இயக்கக்கூடிய 2092 பேருந்துகளுடன் 3,165 சிறப்புப் பேருந்துகளும், ஏனய பிற முக்கிய ஊர்களிலிருந்து 3,405 பேருந்துகளும் என ஆக மொத்தம் 12,846 பேருந்துகள் இயக்கப்படும் என்பதனைத் தெரிவித்துக் கொள்ளப்படுகிறது.
எனவே, பயணிகள் கடைசி நேர கூட்ட நெரிசலில் பயணிப்பதை தவிர்த்து, தங்கள் பயணத்தை முன்கூட்டியே திட்டமிட்டு காலியாக உள்ள இருக்கைகளில் முன்பதிவு செய்து பயணிக்க அன்புடன் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்” என குறிப்பிடப்பட்டுள்ளது.
திருநெல்வேலி, தூத்துக்குடி, திருச்செந்தூர், நாகர்கோவில், கன்னியாகுமரி, புதுக்கோட்டை, திண்டுக்கல், தேனி, திருப்பூர், பொள்ளாச்சி, திருவனந்தபுரம், செங்கோட்டை,கோயம்புத்தூர், எர்ணாகுளம், திண்டிவனம், விழுப்புரம், கள்ளக்குறிச்சி தேனி திருப்பூர் பொள்ளாச்சி காரைக்குடி ராமேஸ்வரம், சேலம், விருத்தாச்சலம், அரியலூர், திட்டக்குடி, ஜெயங்கொண்டம், வந்தவாசி, திண்டிவனம், புதுச்சேரி, விருத்தாச்சலம், பண்ருட்டி, கும்பகோணம், தஞ்சாவூர், திருவாரூர், திருச்சி, கரூர், மதுரை ஆகிய மாவட்டங்களில் இருந்து புறப்படும் பேருந்துகள் கிளாம்பாக்கம் பேருந்து நிலையம் வந்தடையும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.