5
Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வெப் ஸ்டோரீஸ்வணிகம்விளையாட்டுகல்விடெக்னாலஜி

Tamilnadu Day: ” எல்லை போராளிகளின் தியாகங்களை நினைவுக்கூறுவோம்” – த.வெ.க தலைவர் விஜய் வாழ்த்து..

மொழி வாரியாக பிரிக்கப்பட்ட மாநிலங்களில் நாள் இன்று கொண்டாடப்படும் நிலையில், 2021 ஆம் ஆண்டு மு.க ஸ்டாலின் தலைமையில் அமைந்த திமுக அரசு மெட்ராஸ் மாநிலத்தின் பெயரை தமிழ்நாடு என மாற்ற வேண்டும் என சட்டப்பேரவையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்ட ஜூலை 18 ஆம் தேதி தமிழ்நாடு தினமாக கொண்டாடப்படும் என தெரிவிக்கப்பட்டது.

Tamilnadu Day: ” எல்லை போராளிகளின்  தியாகங்களை நினைவுக்கூறுவோம்” – த.வெ.க தலைவர் விஜய் வாழ்த்து..
கோப்பு புகைப்படம் (pic courtesy: twitter )
aarthi-govindaramantv9-com
Aarthi Govindaraman | Updated On: 01 Nov 2024 15:55 PM

தமிழ்நாடு தினம் இன்று அனுசரிக்கப்படுகிறது. அதாவது நவம்பர் 1 1956 ஆம் ஆண்டு இந்தியாவில் இருக்கும் மாகாணங்கள் மொழி வாரியாக பிரிக்கப்பட்டு மாநிலன்ங்களாக உருவெடுத்தது. அந்த வகையில் அப்போதைய மெட்ராஸ் மாகாணத்தில் இருந்து ஆந்திரா, கர்நாடகா, கேரளா உள்ளிட்ட மாநிலங்கள் பிரிக்கப்பட்டது. அதன் விளைவாக நில பரப்பளவில் தமிழ்நாடு தனி மாநிலமாக உருவான நாள் இன்று. இந்நிலையில் மொழி வாரியாக பிரிக்கப்பட்ட நாளை நினைவுகூறுவோம் என்றும், தமிழ்நாட்டின் பகுதிகளை தமிழ்நாட்டுடன் இணைக்க போராடிய எல்லை போராளிகளின் தியாகங்களை நினைவுக்கூறுவோம் என்றும் த.வெ.க தலைவர் விஜய் தனது எக்ஸ் தள பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

 

த.வெ.க தலைவர் விஜய் வாழ்த்து:


இதனை தொடர்ந்து த.வெ.க கட்சி தலைவர் விஜய், “ 1956இல் மொழிவாரி மாகாணங்கள் அமைக்கப்பட்டதன் மூலம், நம்முடைய மாநிலம் நிலப்பரப்பு அளவில், தனி மாநிலமாக உருவெடுத்த தினமே நவம்பர் 1.

Also Read: 2 மாவட்டங்களுக்கு ஆரஞ்சு அலர்ட்.. 25 மாவட்டங்களில் கொட்டப்போகும் மழை.. வானிலை சொல்லும் தகவல் என்ன?

மதராஸ் மாகாணமாக இருந்த நமது மாநிலத்திற்குத் தமிழ்நாடு என்று பெயர் சூட்டக் கோரி, தியாகி சங்கரலிங்கனார் உண்ணாவிரதம் இருந்து உயிரும் துறந்தார். இதைத் தன் இதயத்தில் தாங்கிய, கனிவின் திருவுருவம் பேரறிஞர் பெருந்தகை அண்ணா, தான் ஆட்சிக்கு வந்ததும் சட்டமன்றத்தில் தீர்மானம் இயற்றி, தமிழ்நாடு என்று பெயர் சூட்டினார் என்பது குறிப்பிடத்தக்கது.

தமிழர் பகுதிகளைத் தமிழ்நாட்டுடன் இணைக்கப் போராட்டம் நடத்திய எல்லைப் போராளிகளின் தியாகங்களையும் இன்னாளில் நினைவு கூருவோம். தியாகப் பெரும் பின்னணியில் தமிழர்களுக்கு என்று ஒரு தனி மாநிலம் பிறந்த இந்த நாளை (நவம்பர் 1) வரலாற்று நினைவுகளுடன் தமிழ்நாடு தினமாகப் போற்றி மகிழ்வோம்” என தெரிவித்துள்ளார்.

Also Read: சாரை சாரையாக மலை ஏறிய பக்தர்கள்.. சறுக்கி விழுந்து காயமடைந்த பரிதாபம்!

மொழி வாரியாக பிரிக்கப்பட்ட மாநிலங்களில் நாள் இன்று கொண்டாடப்படும் நிலையில், 2021 ஆம் ஆண்டு மு.க ஸ்டாலின் தலைமையில் அமைந்த திமுக அரசு மெட்ராஸ் மாநிலத்தின் பெயரை தமிழ்நாடு என மாற்ற வேண்டும் என சட்டப்பேரவையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்ட ஜூலை 18 ஆம் தேதி தமிழ்நாடு தினமாக கொண்டாடப்படும் என தெரிவிக்கப்பட்டது.

தமிழ்நாடு முதலமைச்சர் ஸ்டாலின் வாழ்த்து:


மேலும் இந்த நாளை முன்னிட்டு தமிழ்நாடு முதலமைச்சர் ஸ்டாலின், தனது எக்ஸ் தள பக்கத்தில், ” தெற்கிலும் வடக்கிலும் பல இடங்களில் போராடி தமிழ்நாட்டின் எல்லையைக் காத்த மாவீரர்களின் தியாகத்தைப் போற்றும் நாள், நவம்பர் 1! தமிழர் வாழும், தமிழ் பேசப்படும் பகுதிகளைத் தமிழ்நாட்டுடன் இணைப்பதற்காகப் போராடிய அனைவரையும் எல்லைப் போராட்டத் தியாகிகள் நாளில் போற்றி வணங்குகிறேன்!” என குறிப்பிட்டுள்ளார்.

 

Latest News