அமரன் திரைப்படத்திற்கு எதிர்ப்பு.. நெல்லை திரையரங்கில் பெட்ரோல் குண்டு வீச்சு..

அமரன் திரைப்படம் தீபாவளியன்று திரையரங்குகளில் வெளியானது. வெளியான நாள் முதல் தற்போது வரை திரையரங்குகளில் வெற்றிகரமாக திரையிடப்பட்டு வருகிறது. உண்மை சம்பவத்தை தழுவி எடுக்கப்பட்ட இந்த திரைப்படம் மக்கள் மனதில் நீங்கா இடம் பிடித்துள்ளது. இந்த படத்தில் சிவகார்த்திகேயன் கதாநாயகனாகவும், சாய் பல்லவி கதாநாயகியாகவும் நடித்துள்ளனர்.

அமரன் திரைப்படத்திற்கு எதிர்ப்பு.. நெல்லை திரையரங்கில் பெட்ரோல் குண்டு வீச்சு..

கோப்பு புகைப்படம்

Published: 

16 Nov 2024 10:19 AM

நெல்லையில் அமரன் திரைப்படம் திரையிடப்பட்ட திரையரங்கில் பெட்ரோல் வெடி குண்டு வீசப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். அமரன் திரைப்படம் தீபாவளியன்று திரையரங்குகளில் வெளியானது. வெளியான நாள் முதல் தற்போது வரை திரையரங்குகளில் வெற்றிகரமாக திரையிடப்பட்டு வருகிறது. உண்மை சம்பவத்தை தழுவி எடுக்கப்பட்ட இந்த திரைப்படம் மக்கள் மனதில் நீங்கா இடம் பிடித்துள்ளது. இந்த படத்தில் சிவகார்த்திகேயன் கதாநாயகனாகவும், சாய் பல்லவி கதாநாயகியாகவும் நடித்துள்ளனர். மேஜர் முகுந்த் வரதராஜனின் ராணுவ வாழ்க்கையை மையமாக வைத்து உருவாக்கப்பட்ட படம் இது.

திரையரங்கில் பெட்ரோல் குண்டு வீச்சு:


அமரன் திரைப்படம் தற்போது வரை தமிழ்நாட்டில் இருக்கும் பெரும்பாலான திரையரங்கில் ஹவுஸ்புல்லாக ஓடிக்கொண்டிருக்கிறது. இந்நிலையில் திருநெல்வேலி மேலப்பாளையம் பகுதியில் இருக்கும் திரையரங்கில் அமரன் படம் காட்சிப்படுத்தப்பட்டுள்ளது. இந்த திரையரங்கில் இன்று அதிகாலை 3 மணியளவில் மர்ம நபர்கள் இருவர் பெட்ரோல் குண்டு வீசிச் சென்றுள்ளனர். இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

மேலும் படிக்க: சென்னையில் மின்சார ரயில்கள் ரத்து.. எந்த ரூட் தெரியுமா? வெளியான முக்கிய தகவல்!

திரையரங்கில் அதிகாலை நேரத்தில் 2 பேர் 3 பெட்ரோல் குண்டு வீசி தப்பிச் சென்றுள்ளனர். அதிகாலை நேரம் என்பதால் மக்கள் யாரும் அப்பகுதியில் இல்லை. மேலும் , திரையரங்கிற்கு எந்த சேதரமும் ஏற்படவில்லை என கூறப்படுகிறது. இந்த சம்பவம் தொடர்பாக திரையரங்க உரிமையாளர் காவல் நிலையத்தில் புகார் அளித்ததை தொடர்ந்து, காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். சிசிடிவி காட்சிகளின் உதவியால் விசாரணை மேற்கொள்ளப்படுகிறது. மேலும் தப்பி ஓடிய இரண்டு பேரையும் காவல் துறையினர் தேடி வருகின்றனர்.

அமரன் படத்திற்கு எதிர்ப்பு:

அமரன் படம் அனைவராலும் வரவேற்கப்பட்டாலும், இதில் காஷ்மீரில் இருக்கும் இஸ்லாமியர்களை பயங்கரவாதிகளாக சித்தரிக்கப்பட்டுள்ளனர் என எதிர்ப்பு கிளம்பியது. குறிப்பாக எஸ்டிபிஐ கட்சி தரப்பில் கண்டங்கள் முன் வைக்கப்பட்டது. மேலும் இத்திரைப்படத்தில் ஆசாதி என்ற கோஷம் பயங்கரவாதிகளின் கோஷமாகவும், ஜெய் பஜ்ரங்பலி என்ற கோஷம் ராணுவத்தினர் பயன்படுத்தும் கோஷமாக சித்தரிக்கப்பட்டுள்ளதாக கண்டனங்கள் தெரிவிக்கப்பட்டது.

மேலும் படிக்க: 3 மாதம் கடன் செலுத்தாததால் ஆத்திரம்.. வீட்டில் அத்துமீறிய நிதி நிறுவன ஊழியர்கள்.. நடந்தது என்ன?

மேலும் இத்திரைப்படத்தினை முதலமைச்சர் ஸ்டாலின் பாராட்டியுள்ளார் என்றும் பள்ளி கல்லூரிகளில் மாணவர்களுக்கு போட்டுக்காட்ட வேண்டும் என்ற செயல் வன்மம் மிகுந்தது என்றும் தெரிவித்தனர். இதுபோக இது தொடர்பாக எஸ்டிபிஐ கட்சி தரப்பில் தமிழ்நாடு முழுவதும் அமரன் திரைப்படம் ஓடும் திரையரங்குகள் முன் போராட்டம் நடத்தப்பட்டது.


கடந்த வாரம் நெல்லையில் மேலப்பாளையத்தில் இருக்கும் இதே திரையரங்கம் முன் எஸ்டிபிஐ கட்சியினர் போராட்டம் நடத்தியுள்ளனர். திருநெல்வேலி மேலப்பாளையம் என்ற பகுதி இஸ்லாமியர்கள் அதிகம் வசிக்கும் பகுதியாகும். இந்நிலையில் இன்று பெட்ரோல் குண்டு வீசப்பட்டுள்ளது. இதனால் எஸ்டிபிஐ கட்சியை சேர்ந்தவர்கள் தான் இதனை செய்திருப்பார்கள் என்ற கோணத்திலும் விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

மயோனைஸ் சாப்பிட்டால் இவ்வளவு பிரச்னையா?
மழைக்காலத்தில் சளி பிடிக்காமல் இருக்க இதை பண்ணுங்க
தோல்வியில் இருந்து எளிதாக மீள்வது எப்படி?
நடிகை ஷ்ரத்தா ஸ்ரீநாத் நடிப்பில் பார்க்க வேண்டிய படங்கள்!