தொடர் மழை.. ரஜினிகாந்த் இல்லத்தை சூழ்ந்த மழைநீர்.. இணையத்தில் வைரல்..
இன்று சென்னை, திருவள்ளூர், காஞ்சி, செங்கல்பட்டு உள்ளிட்ட மாவட்டங்களில் எதிர்ப்பார்த்த அளவிற்கு மழை இருக்காது என தனியார் வானிலை ஆய்வாளர் பிரதீப் ஜான் தெரிவித்துள்ளார். அதி கன மழை எச்சரிக்கை விடுக்கப்பட்ட நிலையில் மேகங்கள் மற்றும் காற்று தெற்கு ஆந்திரா நோக்கி நகர்ந்த காரணத்தால் மழையின் அளவு சமாளிக்கக்கூடிய அளவே இருக்கும் என தெரிவித்துள்ளார்.
வடகிழக்கு பருவ மழை தொடங்கிய நிலையில், வட தமிழகத்தில் கனமழை பெய்து வருகிறது. மேலும் தென்மேற்கு வங்கக்கடலில் ஏற்பட்ட காற்றழுத்த தாழ்வு மண்டலம் கடந்த 6 மணி நேரத்தில் மணிக்கு 12 கிமீ வேகத்தில் மேற்கு-வடமேற்கு திசையில் நகர்ந்து இன்று காலை 05.30 மணிநேர நிலவரப்படி அதே பகுதியில் அட்சரேகை 12.1° N மற்றும் தீர்க்கரேகை 83.4° E, சென்னைக்கு (தமிழ்நாடு) கிழக்கு-தென்கிழக்கே சுமார் 360 கி.மீ., புதுச்சேரிக்கு கிழக்கே 390 கி.மீ., நெல்லூருக்கு (ஆந்திரப் பிரதேசம்) தென்கிழக்கே 450 கி.மீ நிலை கொண்டுள்ளது. இது மேற்கு-வடமேற்கு திசையில் நகர்ந்து, அக்டோபர் 17 ஆம் தேதி அதிகாலையில் சென்னைக்கு அருகில், புதுச்சேரி மற்றும் நெல்லூர் இடையே வடக்கு தமிழ்நாடு – தெற்கு ஆந்திரா கடற்கரையை கடக்க வாய்ப்புள்ளது என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
#Rains @rajinikanth
நடிகர் ரஜினிகாந்த் இல்லத்தை சூழ்ந்த மழைநீர்போயஸ் கார்டன் முழுவதும் பல்வேறு தெருக்களில் மழைநீர் சூழ்ந்துள்ளது@vinishsaravana @Vel_Vedha pic.twitter.com/qq3osSsAjQ
— Thamaraikani (@kani_twitz24) October 15, 2024
இதன் காரணமாக சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு, காஞ்சிபுரம் உள்ளிட்ட மாவட்டங்களில் நேற்று முன் தினம் இரவு முதல் கனமழை பெய்து வருகிறது. குறிப்பாக இன்று இந்த 4 மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது. தொடர் மழை காரணமாக சென்னையில் பல்வேறு பகுதிகளில் மழைநீர் தேங்கியுள்ளது. குறிப்பாக வட சென்னையில் பல்வேறு பகுதிகளில் மழை நீர் தேங்கியுள்ளது. இதனை அக்ற்றும் பணிகள் தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
திருவான்மியூர், பூந்தமல்லி, வியாசர்பாடி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் வீடுகளுக்குள் தண்ணீர் புகுந்துள்ளது. இந்நிலையில் நடிகர் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் வசிக்கும் போயஸ் கார்டனிலும் தண்ணீர் தேங்கியுள்ளது. இது தொடர்பான வீடியோ காட்சிகள் இணையத்தில் வெளியான நிலையில் பலரும் இதனை பகிர்ந்து வருகின்றனர்.
Also Read: புதிய உச்சம் தொட்ட தங்கம் விலை.. சவரனுக்கு ரூ.57 ஆயிரம் கடந்து விற்பனை..
கடந்த 24 மணி நேரத்தில் அதிகபட்சமாக, சோழவரம் (திருவள்ளூர் மாவட்டம்) 30, ரெட் ஹில்ஸ் (திருவள்ளூர் மாவட்டம்) 28, ஆவடி (திருவள்ளூர் வட்டம்) 25, மண்டலம் 01 கத்திவாக்கம் (சென்னை மாவட்டம்) 23, மண்டலம் 02 D15 மணாலி (சென்னை மாவட்டம்) 21, மண்டலம் 06 திரு.வி.கே நகர் (சென்னை மாவட்டம்) 19, மண்டலம் 06 D65 கொளத்தூர் (சென்னை மாவட்டம்), மண்டலம் 13 U39 அடையாறு (சென்னை மாவட்டம்), புழல் ஏஆர்ஜி (திருவள்ளூர் மாவட்டம்), மண்டலம் 07 அம்பத்தூர் (சென்னை மாவட்டம்) தலா 18, மண்டலம் 01 திருவொற்றியூர் (சென்னை மாவட்டம்), பெருங்குடி (சென்னை மாவட்டம்), மண்டலம் 02 மணலி (சென்னை மாவட்டம்), இந்துஸ்தான்_பல்கலைக்கழகம் (காஞ்சிபுரம் மாவட்டம்), எண்ணூர் AWS (சென்னை மாவட்டம்) தலா 17ம் செ.மீ மழை பதிவாகியுள்ளது.
Also Read: உலக உணவு தினம் இன்று ஏன் கொண்டாடப்படுகிறது? அதன் நோக்கம் என்ன..?
இந்நிலையில் இன்று சென்னை, திருவள்ளூர், காஞ்சி, செங்கல்பட்டு உள்ளிட்ட மாவட்டங்களில் எதிர்ப்பார்த்த அளவிற்கு மழை இருக்காது என தனியார் வானிலை ஆய்வாளர் பிரதீப் ஜான் தெரிவித்துள்ளார். அதி கன மழை எச்சரிக்கை விடுக்கப்பட்ட நிலையில் மேகங்கள் மற்றும் காற்று தெற்கு ஆந்திரா நோக்கி நகர்ந்த காரணத்தால் மழையின் அளவு சமாளிக்கக்கூடிய அளவே இருக்கும் என தெரிவித்துள்ளார். ஆனால் நாளை அதிகாலை சென்னை அருகே கரையை கடக்கும் என குறிப்பிடப்பட்டுள்ள நிலையில், இன்று இரவு முதல் மீண்டும் கனமழை இருக்கும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.