5
Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வெப் ஸ்டோரீஸ்வணிகம்விளையாட்டுகல்விடெக்னாலஜி

School Leave: நெருங்கும் ஃபெங்கல் புயல்.. இன்று பள்ளி , கல்லூரிகளுக்கு விடுமுறை.. எந்தெந்த மாவட்டங்களில்?

தென்மேற்கு வங்கக்கடலில் ஏற்பட்ட ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு நிலை கடந்த 6 மணி நேரத்தில் மணிக்கு 10 கிமீ வேகத்தில் வடக்கு நோக்கி நகர்ந்து 26 நவம்பர் 2024 இரவு 11.30 மணியளவில் மையம் கொண்டு அதே பகுதியில் அட்சரேகை 7.5°N மற்றும் தீர்க்கரேகை 82.6°E, திருகோணமலைக்கு தென்கிழக்கே சுமார் 190 கி.மீ, நாகப்பட்டினத்திலிருந்து 470 கி.மீ தென்கிழக்கே, புதுச்சேரிக்கு தென்-தென்கிழக்கே 580 கி.மீ., சென்னைக்கு தென்-தென்கிழக்கே 670 கி.மீ. நிலை கொண்டுள்ளது.

School Leave: நெருங்கும் ஃபெங்கல் புயல்.. இன்று பள்ளி , கல்லூரிகளுக்கு விடுமுறை.. எந்தெந்த மாவட்டங்களில்?
கோப்பு புகைப்படம்
aarthi-govindaraman
Aarthi Govindaraman | Updated On: 27 Nov 2024 06:46 AM

வங்கக்கடலில் உருவாகியுள்ள ஃபெங்கல் புயல் 10 கி.மீ வேகத்தில் வடக்கு வட மேற்கு திசையில் நகர்ந்து வருவதால் தமிழ்நாட்டில் ஒரு சில மாவட்டங்களில் அதி கனமழை பதிவாகி வருகிறது. சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம் உள்ளிட்ட மாவட்டங்களில் அவ்வாப்போது கனமழை பதிவாகி வருகிறது. அதே சமயம் நாகை, மயிலாடுதுறை, கடலூர், தஞ்சாவூர், திருவள்ளூர் உள்ளிட்ட மாவட்டங்களில் தொடர் கனமழை பதிவாகி வருகிறது. இதன் காரணமாக 8 மாவட்டங்களில் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. அதாவது, விழுப்புரம், திருச்சி, ராமநாதபுரம்,  திருவள்ளூர், திருவாரூர், தஞ்சாவூர், நாகை, மயிலாடுதுறை, கடலூர் ஆகிய மாவட்டங்களில் பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. அதே சமயம் சென்னை, செங்கல்பட்டு, புதுக்கோட்டை, சிவகங்கை, அரியலூர், காஞ்சிபுரம் ஆகிய 6 மாவட்டங்களில் பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.

வங்கக்கடலில் உருவான ஃபெங்கல் புயல்:

தென்மேற்கு வங்கக்கடலில் ஏற்பட்ட ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு நிலை கடந்த 6 மணி நேரத்தில் மணிக்கு 10 கிமீ வேகத்தில் வடக்கு நோக்கி நகர்ந்து 26 நவம்பர் 2024 இரவு 11.30 மணியளவில் மையம் கொண்டு அதே பகுதியில் அட்சரேகை 7.5°N மற்றும் தீர்க்கரேகை 82.6°E, திருகோணமலைக்கு தென்கிழக்கே சுமார் 190 கி.மீ, நாகப்பட்டினத்திலிருந்து 470 கி.மீ தென்கிழக்கே, புதுச்சேரிக்கு தென்-தென்கிழக்கே 580 கி.மீ., சென்னைக்கு தென்-தென்கிழக்கே 670 கி.மீ. நிலை கொண்டுள்ளது.

மேலும் படிக்க: நெருங்கும் ஃபெங்கல் புயல்.. சென்னைக்கு ஆபத்து இருக்கா? வானிலை மையம் கூறுவது என்ன?

இது தொடர்ந்து வடக்கு-வடமேற்கு நோக்கி நகர்ந்து மேலும் தீவிரமடைந்து நவம்பர் 27ஆம் தேதி சூறாவளி புயலாக மாற வாய்ப்புள்ளது என கணிக்கப்பட்டுள்ளது. அதன்பிறகு, இது தொடர்ந்து 2 நாட்களுக்கு வடக்கு – வடமேற்கு திசையில் தமிழகக் கடற்கரையை நோக்கி நகர்ந்து இலங்கைக் கடற்கரையை நோக்கி நகரும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

தமிழ்நாட்டில் எத்தனை மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட்?

இதன் காரணமாக இன்று, கடலூர், மயிலாடுதுறை மாவட்டங்கள் மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் அதி கனமழையும், ஒருசில இடங்களில் கன முதல் மிக கனமழையும், சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, விழுப்புரம், அரியலூர், திருவாரூர், நாகப்பட்டினம், தஞ்சாவூர், புதுக்கோட்டை மாவட்டங்கள் மற்றும் புதுவையில் ஓரிரு இடங்களில் கன முதல் மிக கனமழையும், ராணிப்பேட்டை, திருவண்ணாமலை, கள்ளக்குறிச்சி, பெரம்பலூர், திருச்சிராப்பள்ளி, சிவகங்கை மற்றும் ராமநாதபுரம் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழையும் பெய்ய வாய்ப்புள்ளது என வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது.

மேலும் படிக்க: ஃபெங்கல் புயல் எங்கே இருக்கிறது? கரையை கடக்கும் பகுதி எது? வானிலை விவரம்!

மேலும், புயலின் தீவிரத்தன்மை, எந்த பகுதியில் கரையை கடக்கும் என்பது குறித்து தொடர்ந்து கண்காணிக்கப்பட்டு வருவதாக சென்னை வானிலை ஆய்வு மண்டலம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. கடந்த மாதம் தமிழ்நாட்டில் வட கிழக்கு பருவ மழை தொடங்கியது. வட கிழக்கு பருவ மழை தொடங்கியது முதலே வங்கக்கடலில் இரண்டு காற்றழுத்த தாழ்வு மண்டலம் உருவானது. ஆனால் இரண்டுமே புயலாக வலுபெறாமல் கரையை கடந்தது.

இதன் காரணமாக டெல்டா மாவட்டங்கள் மற்றும் தென் மாவட்டங்களில் நல்ல மழை பதிவானது. வட கடலோர மாவட்டங்களில் வறண்ட வானிலையே நிலவியது. இதனை ஈடு செய்யும் வகையில் தற்போது வங்கக்கடலில் ஃபெங்கல் புயல் உருவாகியுள்ளது. இது வடக்கு மற்றும் வடமேற்கு திசையை நோக்கி நகரும் என கணிக்கப்பட்டுள்ளது. மேலும் இது சென்னை மற்றும் புதுச்சேரி இடையே கரையை கடக்க வாய்ப்புள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

Latest News