Fengal Cyclone: தாமதமாகும் ஃபெங்கல் புயல்.. கனமழை இருக்குமா? வானிலை சொல்லும் தகவல் என்ன?
Weather Alert: நவம்பர் 28 மாலை முதல் 29 நவம்பர் 2024 காலை வரை தென்மேற்கு வங்கக்கடலில் மணிக்கு 85 கிமீ வேகத்தில் காற்றின் வேகம் மணிக்கு 65 - 75 கி.மீ வேகத்தில் காற்றின் வேகம் கொண்ட ஆழமான காற்றழுத்த தாழ்வு மண்டலம் ஒரு சூறாவளி புயலாக மாற வாய்ப்பு உள்ளது என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
தென்மேற்கு வங்கக்கடலில் உருவான ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு நிலை கடந்த 06 மணி நேரத்தில் மணிக்கு 2 கிமீ வேகத்தில் வடக்கு நோக்கி நகர்ந்து இன்று 28 நவம்பர் மையமாக கொண்டு அதே பகுதியில் அட்சரேகை 9.1°N மற்றும் தீர்க்கரேகை 82.1°Eக்கு அருகில் நிலைக்கொண்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. திருகோணமலைக்கு கிழக்கு-வடகிழக்கே 110 கி.மீ., நாகப்பட்டினத்திலிருந்து தென்கிழக்கே 310 கி.மீ. புதுச்சேரிக்கு தென்கிழக்கே 410 கி.மீ தொலைவிலும், சென்னைக்கு தென்கிழக்கே 480 கி.மீ தொலைவில் உள்ளது. இது அடுத்த 12 மணி நேரத்தில் இலங்கைக் கடற்கரையை ஒட்டி வடக்கு-வடமேற்கு நோக்கி நகரும் வாய்ப்பு அதிகம். அதன்பிறகு, இது தொடர்ந்து வடக்கு-வடமேற்கு திசையில் நகர்ந்து, காரைக்கால் மற்றும் மகாபலிப்புரம் இடையே வடக்கு தமிழ்நாடு-புதுச்சேரி கடற்கரையை நவம்பர் 30-ஆம் தேதி காலையில் ஆழமான காற்றழுத்த தாழ்வு மண்டலமாக கடக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
புயலாக வலுபெறும் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம்:
Location of our Depression. The low level circulation remains exposed today too with high wind shear.
The shear has hindered the intensification so far and now it might intensify a bit. Still on nearing north TN coast, the windshear will hinder the intensification. So even if… pic.twitter.com/lV8PLe3obo
— Tamil Nadu Weatherman (@praddy06) November 27, 2024
நவம்பர் 28 மாலை முதல் 29 நவம்பர் 2024 காலை வரை தென்மேற்கு வங்கக்கடலில் மணிக்கு 85 கிமீ வேகத்தில் காற்றின் வேகம் மணிக்கு 65 – 75 கி.மீ வேகத்தில் காற்றின் வேகம் கொண்ட ஆழமான காற்றழுத்த தாழ்வு மண்டலம் ஒரு சூறாவளி புயலாக மாற வாய்ப்பு உள்ளது என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
Also Read: சென்னை அருகே கரையை கடக்கும் ஃபெங்கல் புயல்.. எப்போது உருவாகும்? எந்த திசையில் நகரும்?
இது தொடர்பாக தனியார் வானிலை ஆய்வாளர் பிரதீப் ஜான் தெரிவிக்கையில், “ வங்கக்கடலில் நிலைக்கொண்டுள்ள ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் மெல்ல மெல்ல நகர்ந்து வலுபெறக்கூடும். அப்படி புயலாக வலுப்பெற்றாலும், தீவிரமாக இல்லாமல் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலத்தின் தாக்கத்தில் தான் இருக்கும். தீவிர புயலின் தாக்கம் இருக்காது. இதன் காரணமாக டெல்டா மற்றும் கடலோர மாவட்டங்களில் இன்றும் நாளையும் மிதமான மழையே பெய்யக்கூடும். கனமழைக்கான வாய்ப்பு மிகவும் குறைவு தான்” என தெரிவித்துள்ளார்.
கனமழை இருக்குமா?
No change in the interpretations. Today right from Delta to Chennai will see moderate rains later in the day / night. Enjoy the cold winds in day !!!
Rains to pickup in intensity from 29 and leading into 30th there will be heavy rains in KTCC, Pondy, Cuddalore and Villupuram… pic.twitter.com/yJktDjpq4W
— Tamil Nadu Weatherman (@praddy06) November 28, 2024
மேலும், இன்று காலை குளிர்ந்த காற்று வீசக்கூடும் என்றும் மாலை அல்லது இரவு நேரங்களில் சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவள்ளூர் ஆகிய மாவட்டங்களில் மிதமான மழை இருக்கும் என்றும், நாளை சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் கனமழை இருக்கக்கூடும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதேபோல் டிசம்பர் 1 மற்றும் 2 ஆகிய தேதிகளில் புயலின் தாக்கத்தால் நல்ல மழை இருக்கும் என தனியார் வானிலை ஆய்வாளர் பிரதீப் ஜான் தெரிவித்துள்ளார்.