Fengal Cyclone: 2 மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட்.. ஃபெங்கல் புயலின் தாக்கம் எப்படி இருக்கும்? வானிலை ஆய்வாளர்கள் சொல்வது என்ன?
இன்று காலை 10 மணி வரை சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர், விழுப்புரம், கடலூர், மயிலாடுதுறை, நாகை, திருவாரூர், தஞ்சை, புதுக்கோட்டை, அரியலூர், பெரம்பலூர், சிவகங்கை, ராமநாதபுரம் ஆகிய மாவட்டங்களில் இடி மின்னலுடன் கூடிய மிதமான மழை பெய்யக்கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
வட கிழக்கு பருவ மழை கடந்த மாதம் தொடங்கிய நிலையில், நேற்று வங்கக் கடலில் ஃபெங்கல் புயல் உருவாகியுள்ளது. இந்த ஃபெங்கல் புயல் காரணமாக தமிழ்நாட்டில் டெல்டா மாவட்டங்களில் கனமழை பதிவாகி வருகிறது. அதே சமயம் வறண்ட வானிலையாக இருந்த சென்னை மற்றும் புறநகர் பகுதிகளிலும் கனமழை பதிவாகி வருகிறது. தென்மேற்கு வங்கக்கடலில் ஏற்பட்ட ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு நிலை கடந்த 6 மணி நேரத்தில் மணிக்கு 10 கிமீ வேகத்தில் வடக்கு நோக்கி நகர்ந்து 26 நவம்பர் 2024 இரவு 11.30 மணியளவில் மையம் கொண்டு அதே பகுதியில் அட்சரேகை 7.5°N மற்றும் தீர்க்கரேகை 82.6°E, திருகோணமலைக்கு தென்கிழக்கே சுமார் 190 கி.மீ, நாகப்பட்டினத்திலிருந்து 470 கி.மீ தென்கிழக்கே, புதுச்சேரிக்கு தென்-தென்கிழக்கே 580 கி.மீ., சென்னைக்கு தென்-தென்கிழக்கே 670 கி.மீ. நிலை கொண்டுள்ளது.
இது தொடர்ந்து வடக்கு-வடமேற்கு நோக்கி நகர்ந்து மேலும் தீவிரமடைந்து நவம்பர் 27ஆம் தேதி சூறாவளி புயலாக மாற வாய்ப்புள்ளது என கணிக்கப்பட்டுள்ளது. அதன்பிறகு, இது தொடர்ந்து 2 நாட்களுக்கு வடக்கு – வடமேற்கு திசையில் தமிழகக் கடற்கரையை நோக்கி நகர்ந்து இலங்கைக் கடற்கரையை நோக்கி நகரும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
தனியார் வானிலை ஆய்வாளர் சொல்வது என்ன?
KTCC gets a wonderful start and these on and off rains will continue till tomorrow.
The Depression will take north movement (refer 2nd pic) from Sri Lanka and then it starts to take W-NW movement from 28th towards the North Tamil Nadu coast. The west movement is the ideal one… pic.twitter.com/lXrG0hLw0N
— Tamil Nadu Weatherman (@praddy06) November 26, 2024
சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர் ஆகிய மாவட்டங்களில் இன்றும் விட்டு விட்டு அவ்வப்போது கனமழை பெய்யும் என தனியார் வானிலை ஆய்வாளர் பிரதீப் ஜான் தெரிவித்துள்ளா. மேலும், இந்த ஃபெங்கல் புயல் வடக்கு மற்றும் வட மேற்கு திசையில் நகர்ந்து நாளை மற்றும் நாளை மறுநாள் அதாவது நவம்பர் 28 மற்றும் 29 ஆம் தேதி தமிழ்நாடு கடற்கரை ஒட்டு நகரும் என்றும் சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் இந்த இரண்டு நாட்களிலும் நல்ல மழை இருக்கும் என்றும், டெல்டா மாவட்டங்களில் தொடர் கனமழை இருக்கும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Also Read: ஃபெங்கல் புயல் எங்கே இருக்கிறது? கரையை கடக்கும் பகுதி எது? வானிலை விவரம்!
காலை 10 மணி வரை 25 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு:
அதேபோல் இன்று காலை 10 மணி வரை சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர், விழுப்புரம், கடலூர், மயிலாடுதுறை, நாகை, திருவாரூர், தஞ்சை, புதுக்கோட்டை, அரியலூர், பெரம்பலூர், சிவகங்கை, ராமநாதபுரம் ஆகிய மாவட்டங்களில் இடி மின்னலுடன் கூடிய மிதமான மழையும், நீலகிரி, கோவை, கள்ளக்குறிச்சி, திருச்சி, தென்காசி, விருதுநகர், மதுரை, தூத்துக்குடி, திருநெல்வேலி, கன்னியாகுமரி ஆகிய மாவட்டங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசான மழையும் பெய்யக்கூடும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
Also Read: நெருங்கும் ஃபெங்கல் புயல்.. இன்று பள்ளி , கல்லூரிகளுக்கு விடுமுறை.. எந்தெந்த மாவட்டங்களில்?
ரெட் அலர்ட் எங்கே?
கடலூர், மயிலாடுதுறை ஆகிய இரண்டு மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. அதேபோல், சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, விழுப்புரம், அரியலூர், திருவாரூர், நாகப்பட்டினம், தஞ்சாவூர், புதுக்கோட்டை மாவட்டங்கள் மற்றும் புதுவையில் ஓரிரு இடங்களில் கன முதல் மிக கனமழையும், ராணிப்பேட்டை, திருவண்ணாமலை, கள்ளக்குறிச்சி, பெரம்பலூர், திருச்சிராப்பள்ளி, சிவகங்கை மற்றும் ராமநாதபுரம் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழையும் பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் குறிப்பிட்டுள்ளது.