Fengal Cyclone: கரையை கடந்த ஃபெஞ்சல் புயல்.. 25 மாவட்டங்களுக்கு மழை எச்சரிக்கை..
Weather Alert: நாளை, நீலகிரி, கோயம்புத்தூர், திருப்பூர், திண்டுக்கல் மற்றும் ஈரோடு மாவட்டங்களில் கன முதல் மிக கனமழையும், கிருஷ்ணகிரி, தர்மபுரி, சேலம், நாமக்கல், கரூர், தேனி மற்றும் மதுரை மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழையும் பெய்ய வாய்ப்புள்ளதாகவும், நாளை மறுநாள் நீலகிரி, கோயம்புத்தூர், திருப்பூர், தேனி, திண்டுக்கல் மற்றும் ஈரோடு மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
வங்ககடலில் உருவான ஃபெஞ்சல் புயல் நேற்று நள்ளிரவு சுமார் 11.30 மணியளவில் முழுமையாக கரையை கடந்தது. மாமல்லப்புரம் மற்றும் புதுச்சேரிக்கு இடையே இந்த புயல் கரையை கடந்தது. மேலும், தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியின் வட கடலோரப் பகுதிகளில் “ஃபெஞ்சல்” என்ற சூறாவளி புயல் கடந்த 6 மணி நேரத்தில் மணிக்கு 7 கிமீ வேகத்தில் தென்மேற்கு திசையில் நகர்ந்து இன்று, டிசம்பர் 1, 2024 அதிகாலை 0230 மணி நிலவரப்படி 12.0°N மற்றும் தீர்க்கரேகை 79.8°E, புதுச்சேரிக்கு அருகில் நிலை கொண்டுள்ளது. இது மேற்கு திசையில் மெதுவாக நகர்ந்து படிப்படியாக வலுவிழந்து வட கடலோர தமிழகம் மற்றும் புதுச்சேரியில் அடுத்த 3 மணி நேரத்தில் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாற வாய்ப்புள்ளது என வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது.
கரையை கடந்த ஃபெஞ்சல் புயல்:
வங்கக்கடலில் கடந்த 2 நாட்களுக்கு முன் உருவான ஃபெஞ்சல் புயலின் காரணமாக சென்னை செங்கல்பட்டு காஞ்சிபுரம் திருவள்ளூர் உள்ளிட்ட மாவட்டங்களில் மிக கனமழை முதல் அதி கனமழை பதிவானது. இந்த ஃபெஞ்சல் புயல் நேற்று மதியம் கரையை காக்கக்கூடும் என தெரிவிக்கப்பட்ட நிலையில், புயலின் வேகம் மெதுவாக இருந்ததால் அது நீடித்தது. நேற்று மாலை கரையை கடக்கத் தொடங்கிய ஃபெஞ்சல் புயல் சுமார் 6 மணி நேரம் 7 கி.மீ வேகத்தில் கரையை கடந்ததாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
மேலும் படிக்க: ஃபெங்கல் புயலுக்கு பின் பள்ளிகள் திறப்பு எப்போது? அமைச்சர் அன்பில் மகேஷ் விளக்கம்!
ஃபெஞ்சல் புயல் புதுச்சேரி மற்றும் மாமல்லப்புரம் இடையே கரையை கடந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் கரையை கடக்கும் சமயத்தில் அதிகபட்சமாக 90 கி.மீ வேகத்தில் காற்று வீசியது. இதனால் கடல் சீற்றமாக காணப்பட்டது. கடல் அலை சுமார் 5 அடி உயரம் வரை எழுந்ததாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
எந்தெந்த மாவட்டங்களில் மழை இருக்கும்?
புயல் கரையை கடந்த நிலையில், விழுப்புரம், கள்ளக்குறிச்சி, கடலூர் மாவட்டங்கள் புதுவையில் ஒருசில இடங்களில் கன முதல் மிக கனமழையும், ஓரிரு இடங்களில் அதி கன மழையும், சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு, காஞ்சிபுரம், ராணிப்பேட்டை, திருவண்ணாமலை, தர்மபுரி, சேலம், பெரம்பலூர், அரியலூர், தஞ்சாவூர், திருவாரூர், மயிலாடுதுறை மற்றும் நாகப்பட்டினம் மாவட்டங்கள் மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் கன முதல் மிக கனமழையும், வேலூர், திருப்பத்தூர், கிருஷ்ணகிரி, நீலகிரி, ஈரோடு, நாமக்கல், திருச்சிராப்பள்ளி மற்றும் புதுக்கோட்டை மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழையும் பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது.
மேலும் படிக்க: வெள்ளக்காடாக மாறிய சென்னை.. பரிதவிக்கும் மக்கள்.. தீர்வு எப்போது?
நாளை, நீலகிரி, கோயம்புத்தூர், திருப்பூர், திண்டுக்கல் மற்றும் ஈரோடு மாவட்டங்களில் கன முதல் மிக கனமழையும், கிருஷ்ணகிரி, தர்மபுரி, சேலம், நாமக்கல், கரூர், தேனி மற்றும் மதுரை மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழையும் பெய்ய வாய்ப்புள்ளதாகவும், நாளை மறுநாள் நீலகிரி, கோயம்புத்தூர், திருப்பூர், தேனி, திண்டுக்கல் மற்றும் ஈரோடு மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.