மக்களின் வசதிக்காக..! கிளாம்பாக்கத்தில் இருந்து கூடுதல் பேருந்துகள் மற்றும் சிறப்பு மின்சார ரயில் இயக்கம்.. - Tamil News | as people returning from native to chennai after diwali special buses and emu trains to be opreated | TV9 Tamil

மக்களின் வசதிக்காக..! கிளாம்பாக்கத்தில் இருந்து கூடுதல் பேருந்துகள் மற்றும் சிறப்பு மின்சார ரயில் இயக்கம்..

சிறப்பு பேருந்துகள் மூலம் ஆயிரக்கணக்கான மக்கள் சென்னைக்கு ஒரே நேரத்தில் திரும்பினர். கடும் போக்குவரத்து நெரிசலை தவிர்க்கும் வகையில் கடந்த ஆண்டு முதல் கிளம்பாக்கம் வரை மட்டுமே பேருந்துகள் இயக்கப்பட்டு வருகிறது. அங்கிருந்து சென்னை நகரத்திற்குள் வர மாநகர போக்குவரத்து பேருந்துகள் அல்லது மின்சார ரயில்களை மக்கள் நாடியுள்ளனர். இந்நிலையில் மக்களின் வசதிக்காக கூடுதல் பேருந்துகள் கிளாம்பாக்கத்தில் இருந்து இயக்கப்படும் என மாநகர போக்குவரத்து கழகம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மக்களின் வசதிக்காக..! கிளாம்பாக்கத்தில் இருந்து கூடுதல் பேருந்துகள் மற்றும் சிறப்பு மின்சார ரயில் இயக்கம்..

கோப்பு புகைப்படம்

Updated On: 

04 Nov 2024 09:06 AM

தீபாவளி பண்டிகை முடிந்து சென்னை திரும்பும் மக்களின் வசதிக்காக சென்னை மாநகர போக்குவரத்து கழகம் தரப்பில் கூடுதல் பேருந்துகள் இயக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. கடந்த வாரம் வியாழன் அன்று தீபாவளி பண்டிகை மிகவும் விமர்சையாக கொண்டாடப்பட்டது. இதற்காக சென்னையில் இருந்து சொந்த ஊர்களுக்கு செல்ல தமிழ்நாடு அரசு தரப்பில் சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட்டது. அதாவது, அக்டோபர் 28, 29, 30 ஆகிய 3 நாட்கள் சென்னையில் இருந்து இயக்கப்படும் தினசரி 2,092 பேருந்துகளுடன் 4,900 சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட்டது. அதன்படி 3 நாட்களும் சேர்த்து 11,176 பேருந்துகள் சென்னையில் இருந்தும், மற்ற ஊர்களில் இருந்து 2,910 பேருந்துகளும் இயக்கப்பட்டது. மொத்தம் 14, 086 பேருந்துகள் தமிழகம் முழுவதும் இயக்கப்பட்டது.

ஸ்தம்பித்த பெருங்களத்தூர்:

அதேபோல் 4 நாட்கள் தொடர் விடுமுறை முடிந்து ஆயிரக்கணக்கான மக்கள் சென்னைக்கு படையெடுத்தனர். இதனால் சென்னையை இணைக்கும் பெருங்களத்தூர் சாலையில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. சாதரணமாக ஒரு மணி நேரத்தில் கடக்கக்கூடிய சாலையை கடக்க சுமார் 4 மணி நேரம் ஆனது. கடும் போக்குவரத்து நெரிசலால் பெருகளத்தூர் முழுவதும் ஸ்தம்பித்து போனது.

இது ஒரு பக்கம் இருக்க, தமிழ்நாடு போக்குவரத்து கழகம் தரப்பில் சென்னைக்கு திரும்ப வசதியாக நவம்பர் 2 ஆம் தேதி முதல் 3 நாட்களுக்கு சிறப்பு பேருந்துகள் அறிவிக்கப்பட்டது. அதாவது, வழக்கமாக இயக்கப்படும் 2,092 பேருந்துகளுடன் கூடுதலாக 12,846 பேருந்துகள் இயக்கப்படும் என தெரிவிக்கப்பட்டது. ஏற்கனவே சிறப்பு பேருந்துகள் மூலம் சுமார் 5.76 லட்சம் பேர் பயணம் மேற்கொண்ட நிலையில், மக்கள் ஊருக்கு திரும்ப வசதியாக 12 ஆயிரம் பேருந்துகள் இயக்கப்பட்டது.

மேலும் படிக்க: சில்லென மாறிய சென்னை.. இந்த மாவட்ட பள்ளி, கல்லூரிகளுக்கு இன்று விடுமுறை..

கிளாம்பாக்கத்தில் இருந்து கூடுதல் பேருந்துகள் இயக்கம்:


இந்த சிறப்பு பேருந்துகள் மூலம் ஆயிரக்கணக்கான மக்கள் சென்னைக்கு ஒரே நேரத்தில் திரும்பினர். கடும் போக்குவரத்து நெரிசலை தவிர்க்கும் வகையில் கடந்த ஆண்டு முதல் கிளம்பாக்கம் வரை மட்டுமே பேருந்துகள் இயக்கப்பட்டு வருகிறது. அங்கிருந்து சென்னை நகரத்திற்குள் வர மாநகர போக்குவரத்து பேருந்துகள் அல்லது மின்சார ரயில்களை மக்கள் நாடியுள்ளனர். இந்நிலையில் மக்களின் வசதிக்காக கூடுதல் பேருந்துகள் கிளாம்பாக்கத்தில் இருந்து இயக்கப்படும் என மாநகர போக்குவரத்து கழகம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பாக வெளியான அறிக்கையில், “ தீபாவளி பண்டிகையை சொந்த ஊரில் கொண்டாடிவிட்டு சென்னை திரும்பும் பயணிகளின் வசதிக்காக மா.போ.கழகம் 03.11.2024 பிற்பகல் முதல் 04.11.2024 பயணிகளின் நெரிசல் குறையும் வரை கிளாம்பாக்கம்(KCBT] பேருந்து நிலையத்திலிருந்து வழக்கமாக இயக்கப்படும் 478 பேருந்துகளின் 3,529 பயண நடைகளுடன் கூடுதலாக 250 பேருந்துகளின் மூலம் 1,113 பயணநடைகள் கிளாம்பாக்கம் (R.BT) பேருந்து நிலையத்திலிருந்து இயக்கப்படும்.

மேலும், தாம்பரம் ரயில் நிலையம், தாம்பரம், பூந்தமல்லி, கோயம்பேடு, MMBT, எழும்பூர் இரயில் நிலையம் மற்றும் சென்ட்ரல் இரயில் நிலையம், ஆகிய இடங்களுக்கும் வழக்கமாக இயக்கப்படும் பேருந்துகளுடன் கூடுதலாக சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும். மற்றும் மேற்குறிப்பிட்ட பேருந்து நிலையங்களில் அலுவலர்கள் நியமிக்கப்பட்டு பேருந்து இயக்கங்களை கண்காணிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது” எனதெரிவிக்கப்பட்டுள்ளது.

கூடுதல் பேருந்துகளுடன் கூடுதல் மின்சார ரயில்களும் இயக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. அதாவது காட்டாங்குளத்தூர் முதல் தாம்பரம்  வரை மின்சார ரயில்கள் இயக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த சிறப்பு மின்சார ரயில்கள் 5 நிமிட இடைவெளியில் இயக்கப்படும் என குறிப்பிடப்பட்டுள்ளது.

இரவில் டீ குடிப்பதால் இவ்வளவு பிரச்னையா?
தேங்காய் எண்ணெய் முகத்தில் தடவலாமா?
ஆரோக்கியமாக வாழ தினமும் செய்ய வேண்டிய 7 விஷயங்கள்..!
இந்திய நட்சத்திர வீரர் விராட் கோலி செய்த டாப் 7 சாதனைகள்..!