Armstrong Murder Case : ”ஆம்ஸ்ட்ராங் படுகொலை வழக்கில் செல்வப்பெருந்தகைக்கு தொடர்பு”.. ராகுல் காந்திக்கு பகுஜன் சமாஜ் பரபரப்பு கடிதம்!

Bahujan Samaj | பகுஜன் சமாஜ் கட்சியின் தமிழ்நாடு மாநில தலைவராக இருந்த ஆம்ஸ்ட்ராங் கடந்த ஜூலை மாதம் 5 ஆம் தேதி படுகொலை செய்யப்பட்டார்.  இந்த கொலை தமிழகம் மட்டுமல்லாது இந்தியா முழுவதும் மிகப்பெரிய அளவில் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த கொலை வழக்கில் சம்பந்தப்பட்டவர்கள் நிச்சயம் தண்டிக்கப்படுவார்கள் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உறுதியளித்துள்ளார்.

Armstrong Murder Case : ஆம்ஸ்ட்ராங் படுகொலை வழக்கில் செல்வப்பெருந்தகைக்கு தொடர்பு.. ராகுல் காந்திக்கு பகுஜன் சமாஜ் பரபரப்பு கடிதம்!

செல்வப்பெருந்தகை மற்றும் ஆம்ஸ்ட்ராங்

Updated On: 

17 Oct 2024 10:45 AM

பகுஜன் சமாஜ் கட்சியின் மாநில தலைவர் ஆம்ஸ்ட்ராங் கொலையில் காங்கிரஸ் மாநில தலைவர் செல்வப்பெருந்தகைக்கு தொடர்பு உள்ளது என்றும் அவரை உடனடியாக பதவி நீக்கம் செய்ய வேண்டும் என்றும் ராகுல் காந்திக்கு பகுஜன் சமாஜ் கட்சி கடிதம் எழுதியுள்ளது. ஆம்ஸ்ட்ராங்க் கொலை வழக்கில் ஏற்கனவே பலர் கைது செய்யப்பட்டுள்ள நிலையில், தற்போது செல்வப்பெருந்தகையின் மீது குற்றம் சுமத்தப்பட்டுள்ளது கடும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.

இதையும் படிங்க : Tirupati Laddu: ”மாட்டு கொழுப்பு.. மீன் எண்ணெய்” திருப்பதி லட்டு குறித்து ஆய்வில் வெளிவந்த அதிர்ச்சி தகவல்!

பகுஜன் சமாஜ் கட்சியின் மாநில தலைவராக இருந்த ஆம்ஸ்ட்ராங் படுகொலை செய்யப்பட்டார்

பகுஜன் சமாஜ் கட்சியின் தமிழ்நாடு மாநில தலைவராக இருந்த ஆம்ஸ்ட்ராங் கடந்த ஜூலை மாதம் 5 ஆம் தேதி படுகொலை செய்யப்பட்டார்.  இந்த கொலை தமிழகம் மட்டுமல்லாது இந்தியா முழுவதும் மிகப்பெரிய அளவில் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த கொலை வழக்கில் சம்பந்தப்பட்டவர்கள் நிச்சயம் தண்டிக்கப்படுவார்கள் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உறுதியளித்துள்ளார். இதனைத் தொடர்ந்து இந்த கொலை வழக்கில் தொடர்புடையவர்களை பிடிக்க போலீசார் தனிப்படை அமைத்து விசாரணை நடத்தி வருகின்றனர்.  இதுவரை ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் ரவுடி ஆற்காடு சுரேஷின் தம்பியான பொன்னைபாலு, பெண் தாதா மலர்கொடி, அஞ்சலை,  ஹரிஹரன் ஆகியோர் கைது செய்யப்பட்டனர்.

இதையும் படிங்க : CISF Recruitment 2024: 12ஆம் வகுப்பு தேர்ச்சியா? மத்திய அரசு வேலை.. விண்ணப்பிப்பது எப்படி?

பல்வேறு கட்சி நிர்வாகிகள் கைது செய்யப்பட்டனர்

அது மட்டுமல்ல அதிமுக, திமுக, பாஜக, தமாக, காங்கிரஸ் உள்ளிட்ட பல்வேறு கட்சிகளைச் சார்ந்த நிர்வாகிகளும் இந்த கொலை சம்பவத்தில் கைது செய்யப்பட்டுள்ளது மிகப்பெரிய அளவில் புயலை கிளப்பியுள்ளது. இதுவரை 23 பேர் கைது செய்யப்பட்ட நிலையில் அனைவரிடமும் தீவிர விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் செல்வப்பெருந்தகைக்கு தொடர்பு – பகுஜன் சமாஜ்

இந்த நிலையில் ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் காங்கிரஸ் மாநில தலைவர் செல்வப்பெருந்தகைக்கு தொடர்பு இருப்பதாகவும், அவரை உடனடியாக பதவி நீக்கம் செய்ய வேண்டும் என்றும் பகுஜன் சமாஜ் ராகுல் காந்திக்கு கடிதம் எழுதியுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இது குறித்து ராகுல் காந்திக்கு பகுஜன் சமாஜ் எழுதிய கடிதத்தில், ஆடிட்டர் பாண்டியன், ஆல்ப்ரெட், பிபிஜி சங்கர் ஆகியோர் கொலை தொடர்பான வழக்குகள் செல்வப் பெருந்தகையின் மீது உள்ளன. ரியல் எஸ்டேட் உள்ளிட்ட தொழில் துறைகளை கட்டுப்படுத்தும் ஒரு வன்முறை கும்பலின் தலைவர் தான் வேலூர் சிறையில் இருக்கும் நாகேந்திரன். அவருடைய மகன் இளைஞர் காங்கிரஸில் பொதுச் செயலாளராக இருந்த அஸ்வத்தாமன்.

இதையும் படிங்க : IND vs BAN 1st Test Highlights: சிக்கலில் இருந்து மீட்ட அஸ்வின், ஜடேஜா.. முதல் நாளில் இந்திய அணி 339 ரன்கள் குவிப்பு!

செல்வப்பெருந்தகையை உடனடியாக பொருப்பில் இருந்து நீக்க வேண்டும் – பகுஜன் சமாஜ்

ஆம்ஸ்ட்ராங் கொலையில் அஸ்வத்தாமன் கைது செய்யப்பட்டுள்ளார். அவரை இளைஞர் காங்கிரஸில் நியமித்து செல்ல பெருந்தகைதான். ஆம்ஸ்ட்ராங் கொலையில் செல்வபெருந்தாக ஏன் கைது செய்யப்படவில்லை என மக்கள் கேள்வி கேட்கின்றனர். காங்கிரஸ் கட்சியின் மாநில தலைவர் ஆக இருப்பதால் அவரை கைது செய்ய அரசும் காவல்துறையும் தயங்குவதாக மக்கள் தெரிவிக்கின்றனர். எனவே மாநில தலைவர் பொறுப்பிலிருந்து அவரை நீக்க வேண்டும் என்று அதில் கூறப்பட்டுள்ளது.

இதையும் படிங்க : Udhayanidhi Stalin: 10 நாட்களில் துணை முதல்வராகிறாரா உதயநிதி? அமைச்சர் சொன்ன முக்கிய தகவல்!

பகுஜன் சமாஜ் குற்றச்சாட்டுக்கு செல்வப்பெருந்தகை மறுப்பு

இந்த கடிதம் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், தனக்கும் ஆம்ஸ்ட்ராங் கொலைக்கும் எந்தவித தொடர்பும் இல்லை என செல்வப்பெருந்தகை மறுப்பு தெரிவித்துள்ளார்.

இரத்த சோகை உள்ளவர்கள் எடுத்துக்கொள்ள வேண்டிய உணவுகள்..!
காலையில் 10 நிமிடங்கள் ஓடுவதால் கிடைக்கும் நன்மைகள்..!
குழந்தை பெற்ற பிறகு தம்பதியினர் செய்ய வேண்டிய விஷயங்கள்!
உங்களின் வருமானம் பற்றி அறியக்கூடாதவர்கள்!