5
Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வெப் ஸ்டோரீஸ்வணிகம்விளையாட்டுகல்விடெக்னாலஜி

Thirumavalan: ஆம்ஸ்ட்ராங் உடலை கண்டு கதறி அழுத திருமா.. உண்மையான குற்றவாளிகளை கண்டுபிடிக்க வேண்டும் என கோரிக்கை..

பகுஜன் சமாஜ் கட்சி மாநில தலைவர் ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் சரணடைந்துள்ளவர்கள் மட்டுமே உண்மையான குற்றவாளிகள் அல்ல. உண்மையான குற்றவாளிகளை கைது செய்ய வேண்டும். இதற்கு திட்டமிட்டு கொடுத்தவர்களையும் காவல்துறை கைது செய்ய வேண்டும். தமிழகத்தில் தலித்கள் மீதான தாக்குதல் நடைபெற்று வருகிறது. தென் மாநிலங்களில் நடந்து வந்த தாக்குதல் தற்பொழுது தலைநகரத்திலேயே கூலிப்படை இவ்வாறு செய்திருக்கிறது என்றால் இது அரசுக்கு மிகப்பெரிய சவாலாக மாறி இருக்கிறது என விசிக தலைவர் திருமாவளவன் தெரிவித்துள்ளார்.

Thirumavalan: ஆம்ஸ்ட்ராங் உடலை கண்டு கதறி அழுத திருமா.. உண்மையான குற்றவாளிகளை கண்டுபிடிக்க வேண்டும் என கோரிக்கை..
ஆம்ஸ்ட்ராங் உடலுக்கு நேரில் அஞ்சலி செலுத்திய திருமாவளவன்
aarthi-govindaraman
Aarthi Govindaraman | Published: 06 Jul 2024 14:58 PM

பகுஜன் சமாஜ் மாநிலத் தலைவர் ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கு: ஆம்ஸ்டராங் கொலை வழக்கில் சரணடைந்துள்ளவர்கள் மட்டுமே உண்மையான குற்றவாளிகள் அல்ல என்றும் உண்மையான குற்றவாளிகளை கைது செய்ய வேண்டும் என்றும் இதற்கு திட்டமிட்டு கொடுத்தவர்களையும் காவல்துறை கைது செய்ய வேண்டும் என விசிக தலைவர் திருமாவளவன் தெரிவித்துள்ளார். பகுஜன் சமாஜ் மாநிலத் தலைவர் ஆம்ஸ்ட்ராங் சென்னையில் வெட்டி படுகொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை கிளப்பியுள்ளது. நேற்று இரவு சென்னை, பெரம்பூரில் தனது வீட்டின் அருகே நின்றுக்கொண்டிருந்த நிலையில், உணவு டெலிவரி செய்பவர்களை போல இரண்டு இருசக்கர வாகனத்தில் வந்த மர்ம கும்பல் அவரை அரிவாளால் சரமாரிய வெட்டினர்.

இதில் படுகாயமடைந்த ஆம்ஸ்ட்ராங், மீட்டுகப்பட்டு கிரீம்ஸ் சாலையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்ட நிலையில், சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். ஒரு தேசிய கட்சியின் தலைவரை மர்ம நபர்கள் வெட்டிய சம்பவம் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

Also Read: பிஎஃப் உச்ச வரம்பை உயர்த்தும் மத்திய அரசு? ஊழியர்களுக்கு வெளியான முக்கிய தகவல்!

இவரது இழப்பிற்கு பலரும் கண்டனங்கள் தெரிவித்து வரும் நிலையில், பல்வேறு அரசியல் கட்சி தலைவர்கள் நேரில் சென்று இரங்கள் தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில் விடுதலை சிறுத்தை கட்சியின் தலைவர் திருமாவளவன் அவரது உடலுக்கு நேரில் சென்று கண்ணீர் மல்க அஞ்சலி செலுத்தினார். அதனை தொடர்ண்ட்து பேசிய அவர், “ அரசியல் படுகொலை என்பது நடைபெற்று இருக்கிறது கொடூரமாக கொலை செய்திருக்கிறார்கள் இந்த விவகாரத்தில் தமிழக அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். அவரது உடலை போது இடத்தில் அஞ்சலிக்காக வைப்பதற்கு தமிழக அரசு அனுமதி வழங்கியுள்ளது அதே நேரத்தில் ஆம்ஸ்ட்ராங் அவரது உடலை அவரது கட்சி தலைமை அலுவலகத்தில் நல்லடக்கம் செய்ய அனுமதிக்க வேண்டும் என அவரது நிர்வாகிகள் கோரிக்கை விடுத்துள்ளனர் அதனை அரசு பரிசீலனை செய்ய வேண்டும்” என தெரிவித்துள்ளார்.

மேலும், “ இந்த கொலை வழக்கு சரணடைந்துள்ளவர்கள் மட்டுமே உண்மையான குற்றவாளிகள் அல்ல. உண்மையான குற்றவாளிகளை கைது செய்ய வேண்டும். இதற்கு திட்டமிட்டு கொடுத்தவர்களையும் காவல்துறை கைது செய்ய வேண்டும். தமிழகத்தில் தலித்கள் மீதான தாக்குதல் நடைபெற்று வருகிறது. தென் மாநிலங்களில் நடந்து வந்த தாக்குதல் தற்பொழுது தலைநகரத்திலேயே கூலிப்படை இவ்வாறு செய்திருக்கிறது என்றால் இது அரசுக்கு மிகப்பெரிய சவாலாக மாறி இருக்கிறது

இதில் கூடுதல் கவனம் செலுத்த வேண்டிய தேவை உள்ளது வழக்கமாக வழக்கு பதிவு செய்வோம் புலன் விசாரணை நடத்தினோம் என்றில்லாமல் இது போன்ற கூலிப்படை கலாச்சாரம் பெருகுவதற்கு என்ன காரணம் என்பதை ஆராய வேண்டும். ஒரு அரசியல் கட்சித் தலைவரையே இவ்வளவு இலகுவாக வந்து படுகொலை செய்து இருக்கிறார்கள் என்றால் இது காவல்துறைக்கு விடப்பட்ட சவாலாகவே நான் பார்க்கிறேன். மக்களை பாதுகாக்க வேண்டும் கலந்தாய்வு கூட்டங்கள் நடத்தப்பட வேண்டும் கூலிப்படை கலாச்சாரத்தை முற்றிலுமாக ஒழிக்க வேண்டும்” என குறிப்பிட்டு பேசியுள்ளார்.

Also Read: “ஆகஸ்ட் மாதத்திற்குள் மோடி அரசு கவிழும்” அடித்து சொல்லும் லாலு பிரசாந் யாதவ்!

Latest News