5
Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வெப் ஸ்டோரீஸ்வணிகம்விளையாட்டுகல்விடெக்னாலஜி

TVK Party’s first conference: பட்டாசுகள் வெடிக்க தடை.. தமிழக வெற்றிக் கழக தொண்டர்கள் அதிர்ச்சி!

Thalapathy Vijay: இந்த மாநாட்டிற்கு தமிழ்நாடு மட்டுமின்றி வெளிமாநிலங்களில் இருக்கும் விஜய் ரசிகர்கள் கூட வருகை தருவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. கட்சியின் முதல் மாநில மாநாடு என்பதால் அதனை மற்ற அரசியல் கட்சிகள் எல்லாம் கண்டிப்பாக கவனிக்கும் என்பதை உணர்ந்துள்ள விஜய் 2 முறை கடிதம் எழுதி தொண்டர்களை உஷார்படுத்தியுள்ளார்

TVK Party’s first conference: பட்டாசுகள் வெடிக்க தடை.. தமிழக வெற்றிக் கழக தொண்டர்கள் அதிர்ச்சி!
தமிழக வெற்றிக்கழக மாநாட்டு பணிகள்
petchi-avudaiappantv9-com
Petchi Avudaiappan | Updated On: 25 Oct 2024 11:18 AM

தமிழக வெற்றிக் கழக மாநாடு: நடிகர் விஜய் தொடங்கியுள்ள தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாட்டுக்கான பணிகள் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. இதனிடையே மாநாட்டில் பட்டாசு வெடிக்கத் தடை விதித்து காவல்துறை உத்தரவிட்டுள்ளதால் தொண்டர்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர். இதனை ஏற்று பட்டாசு வெடிக்க வேண்டாம் என தொண்டர்களுக்கு அறிவுறுத்திய தமிழக வெற்றிக் கழகத்தின் தலைமையும் அறிவுறுத்தியுள்ளது. அதிகப்படியான கூட்டம் கூடும் என எதிர்பார்க்கப்படுவதால் பட்டாசு வெடிக்கும்போது ஏதேனும் அசம்பாவிதம் ஏற்படுவதை தடுக்க இந்த முன்னேற்பாடு பணிகள் செய்யப்பட்டுள்ளது.

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகராக திகழும் விஜய் கடந்த பிப்ரவரி மாதம் தமிழக வெற்றிக் கழகம் என்ற கட்சியை தொடங்கினார். ரசிகர்களின் நீண்ட எதிர்பார்ப்புகளுக்கு இடையே அவரது அரசியல் பயணம் தொடங்கியுள்ளதால் பெரும் எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது. 2026 ஆம் ஆண்டு சட்டமன்றத் தேர்தலை தனது இலக்காக கொண்டு செயல்பட்டு வரும் விஜய் அதற்கான பணிகளை ஏற்கனவே தொடங்கிவிட்டார்.

Also Read: IND vs NZ: ஸ்டேடியத்தில் தண்ணீர் பற்றாக்குறை.. 20 பேர் மருத்துவமனையில் அனுமதி.. மன்னிப்பு கேட்ட நிர்வாகம்!

கடந்த ஆகஸ்ட் 22ஆம் தேதி தமிழக வெற்றிக் கழகத்தின் கட்சிக்கொடி அறிமுகப்படுத்தப்பட்டது. இதனை தொடர்ந்து வரும் அக்டோபர் 27ஆம் தேதி விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டி அருகே உள்ள வி சாலையில் அக்கட்சியின் முதல் மாநில மாநாடு நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதற்கான முன்னேற்பாடு பணிகள் தீவிரமாக நடந்து வரும் நிலையில் தொண்டர்களுக்கு பல்வேறு கட்டுப்பாடுகளை  தலைமையும், காவல்துறையும் விதித்துள்ளது. மாநாட்டுக்கு 50 ஆயிரத்திற்கும் அதிகமானோர் வருவார்கள் என எதிர்பார்க்கப்படுவதால் தேவையான அடிப்படை வசதிகளும் செய்யப்பட்டுள்ளது.

மேலும் மாநாட்டுக்கு வரும் வாகனங்கள் பார்க்கிங் செய்ய வசதியாக 3 இடங்களில் நிலங்கள் குத்தகைக்கு எடுக்கப்பட்டுள்ளது. மாநாட்டின் முகப்பு கோட்டை மதில் சுவர் வடிவில் அமைக்கப்பட்டுள்ள நிலையில் அதன் தொடர்ச்சியாக மாமன்னன் ராஜராஜ சோழன், தீரன் சின்னமலை, புலித்தேவன், மருது சகோதரர்கள், ஒண்டிவீரன், பெரும்பிடுகு முத்தரையர், வேலு நாச்சியார், அழகு முத்துக்கோன், வீரபாண்டிய கட்டபொம்மன், சுந்தரலிங்கம் ஆகியோரின் புகைப்படம் இடம் பெறவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Also Read: TVK Conference: இதய வாசலை திறந்து வைத்து காத்திருப்பேன்.. விஜய் 3வது முறையாக கடிதம்!

ஏற்கனவே மாநாட்டு மேடைக்கு இடதுபுறம் சட்டமேதை அம்பேத்கர், தந்தை பெரியார், பெருந்தலைவர் காமராஜர் ஆகியோருடன் தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய் கட் அவுட் அமைக்கப்பட்டுள்ளது. அதேசமயம் தவெக மாநாட்டில் கட்சித் தலைவர் விஜய் ஓய்வு எடுக்க சிறப்பு ஏற்பாடுகளுடன் தனி அறை அமைக்கப்பட்டுள்ளது. இதன்மூலம் அவர் மாநாடு நடைபெறும் இடத்திற்கு காலையில் வருகை தர வாய்ப்புள்ளதாக சொல்லப்படுகிறது. இந்த மாநாட்டிற்கு தமிழ்நாடு மட்டுமின்றி வெளிமாநிலங்களில் இருக்கும் விஜய் ரசிகர்கள் கூட வருகை தருவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. கட்சியின் முதல் மாநில மாநாடு என்பதால் அதனை மற்ற அரசியல் கட்சிகள் எல்லாம் கண்டிப்பாக கவனிக்கும் என்பதை உணர்ந்துள்ள விஜய் 2 முறை கடிதம் எழுதி தொண்டர்களை உஷார்படுத்தியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Latest News