5
Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வெப் ஸ்டோரீஸ்வணிகம்விளையாட்டுகல்விடெக்னாலஜி

இளையராஜா பாடல்களை பயன்படுத்த தடை – ரெக்கார்டிங்க் நிறுவனம் வழக்கு விசாரணையிலிருந்து ஒரு நீதிபதி விலகல்

  இசையமைப்பாளர் இளையராஜா பாடல்களை பயன்படுத்த விதிக்கப்பட்ட தடையை நீக்க கோரி எக்கோ ரெக்கார்டிங் நிறுவனம் தொடர்ந்த வழக்கின் விசாரணையில் இருந்து சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி ஆர்.சுப்ரமணியன் விலகினார். பிரபல இசையமைப்பாளர் இளையராஜாவின் ஆயிரத்துக்கும் மேற்பட்ட படங்களின், 4,500க்கும் மேற்பட்ட பாடல்களை பயன்படுத்த எக்கோ, அகி உள்ளிட்ட நிறுவனங்கள் ஒப்பந்தம் செய்திருந்தன. இந்த ஒப்பந்தம் முடிந்த பிறகும், காப்புரிமை பெறாமல், தான் இசையமைத்த பாடல்களை பயன்படுத்தியதாக கூறி, எக்கோ நிறுவனம், அகி மியூசிக் உள்ளிட்ட இசை […]

இளையராஜா பாடல்களை பயன்படுத்த தடை – ரெக்கார்டிங்க் நிறுவனம் வழக்கு விசாரணையிலிருந்து ஒரு நீதிபதி விலகல்
intern
Tamil TV9 | Updated On: 25 Sep 2024 15:31 PM

 

இசையமைப்பாளர் இளையராஜா பாடல்களை பயன்படுத்த விதிக்கப்பட்ட தடையை நீக்க கோரி எக்கோ ரெக்கார்டிங் நிறுவனம் தொடர்ந்த வழக்கின் விசாரணையில் இருந்து சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி ஆர்.சுப்ரமணியன் விலகினார்.

பிரபல இசையமைப்பாளர் இளையராஜாவின் ஆயிரத்துக்கும் மேற்பட்ட படங்களின், 4,500க்கும் மேற்பட்ட பாடல்களை பயன்படுத்த எக்கோ, அகி உள்ளிட்ட நிறுவனங்கள் ஒப்பந்தம் செய்திருந்தன. இந்த ஒப்பந்தம் முடிந்த பிறகும், காப்புரிமை பெறாமல், தான் இசையமைத்த பாடல்களை பயன்படுத்தியதாக கூறி, எக்கோ நிறுவனம், அகி மியூசிக் உள்ளிட்ட இசை நிறுவனங்களுக்கு எதிராக இசையமைப்பாளர் இளையராஜா சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார்.

இந்த வழக்கை விசாரித்த தனி நீதிபதி அனிதா சுமந்த், தயாரிப்பாளர்களிடம் இருந்து உரிமை பெற்ற இந்த பாடல்களை பயன்படுத்த இசை நிறுவனங்களுக்கும் உரிமை உள்ளது என்று உத்தரவிட்டிருந்தார்.

இந்த உத்தரவை எதிர்த்து இளையராஜா தாக்கல் செய்த மேல்முறையீட்டு வழக்கை விசாரித்த இரு நீதிபதிகள் அமர்வு, தனி நீதிபதி உத்தரவுக்கு இடைக்கால தடை விதித்தது.

இந்நிலையில், படத்தின் காப்புரிமை தயாரிப்பாளரிடம் இருப்பதாகவும், தயாரிப்பாளர்களிடம் செய்து கொண்ட ஒப்பந்தத்தின் அடிப்படையில் பாடல்களை பயன்படுத்த தங்களுக்கு அதிகாரம் இருப்பதாகவும் கூறி, பாடல்களை பயன்படுத்த விதிக்கப்பட்ட இடைக்கால தடையை நீக்க வேண்டும் என்று எக்கோ நிறுவனத்தின் சார்பில் மனுதாக்கல் செய்யப்பட்டது.

இந்த மனு, நீதிபதிகள் ஆர்.சுப்பிரமணியன் மற்றும் ஆர்.சக்திவேல் அமர்வில் இன்று விசாரணைக்கு வந்தபோது, இந்த வழக்கை விசாரிப்பதில் இருந்து விலகுவதாக நீதிபதி ஆர்.சுப்ரமணியன் தெரிவித்தார்.

இதையடுத்து, வழக்கை வேறு அமர்வில் பட்டியலிடும் வகையில் தலைமை நீதிபதியின் ஒப்புதலை பெற பதிவுத்துறைக்கு நீதிபதிகள் உத்தரவிட்டுள்ளனர்.

Latest News