Bank Holidays: ஆகஸ்ட் மாதம் வங்கி செல்கிறீர்களா? 13 நாட்கள் விடுமுறை.. நோட் பண்ணிக்கோங்க.. - Tamil News | bank holidays august month 2024 13 days holiday all over india know more | TV9 Tamil

Bank Holidays: ஆகஸ்ட் மாதம் வங்கி செல்கிறீர்களா? 13 நாட்கள் விடுமுறை.. நோட் பண்ணிக்கோங்க..

விடுமுறை நாட்களில் வங்கிகள் மூடப்பட்டிருந்தாலும், வாடிக்கையாளர்கள் நெட் பேங்கிங், ஏடிஎம்கள், மொபைல் பயன்பாடுகள் மற்றும் வங்கி இணையதளங்கள் வழியாக தங்களது வங்கிச் சேவைகளை அணுக முடியும். 13 நாட்கள் வங்கிகள் செயல்படாது என்பதால் கீழேயுள்ள முழு வங்கி விடுமுறைப் பட்டியலைச் சரிபார்த்த பின்னர் வாடிக்கையாளர்கள் தங்கள் வங்கிப் பணிகளை ஆகஸ்ட் மாதத்தில் எந்தத் தேதியில் முடிக்க வேண்டும் என முன்கூட்டியே திட்டமிட்டுக்கொள்ளலாம்.

Bank Holidays: ஆகஸ்ட் மாதம் வங்கி செல்கிறீர்களா? 13 நாட்கள் விடுமுறை.. நோட் பண்ணிக்கோங்க..

கோப்பு புகைப்படம்

Updated On: 

31 Jul 2024 13:35 PM

வங்கி விடுமுறை: இந்திய ரிசர்வ் வங்கி (RBI) வெளியிட்ட 2024 வங்கி விடுமுறை காலண்டரின்படி, இந்தியா முழுவதும் உள்ள வங்கிகள் ஆகஸ்ட் மாத்ததில் 13 நாட்கள் விடுமுறைகளைக் கடைப்பிடிக்கும். இந்த விடுமுறைகள் பிராந்திய விடுமுறைகள், மாநில அளவிலான விடுமுறைகள் மற்றும் வழக்கமான இரண்டாவது மற்றும் நான்காவது சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளை உள்ளடக்கியுள்ளது. இந்த குறிப்பிட்ட நாட்களில் வங்கிகள் மூடப்பட்டிருந்தாலும், வாடிக்கையாளர்கள் நெட் பேங்கிங், ஏடிஎம்கள், மொபைல் பயன்பாடுகள் மற்றும் வங்கி இணையதளங்கள் வழியாக தங்களது வங்கிச் சேவைகளை அணுக முடியும். 13 நாட்கள் வங்கிகள் செயல்படாது என்பதால் கீழேயுள்ள முழு வங்கி விடுமுறைப் பட்டியலைச் சரிபார்த்த பின்னர் வாடிக்கையாளர்கள் தங்கள் வங்கிப் பணிகளை ஆகஸ்ட் மாதத்தில் எந்தத் தேதியில் முடிக்க வேண்டும் என முன்கூட்டியே திட்டமிட்டுக்கொள்ளலாம். இந்தப் பட்டியல் மத்திய ரிசர்வ் வங்கியால் வெளியிடப்பட்டுள்ளது.

மேலும் படிக்க: திடீரென உடல் எடை குறைகிறதா..? அப்போ! இந்த நோய்களின் அறிகுறியாக இருக்கலாம்..!

ஆகஸ்ட் மாதத்தில் வங்கி விடுமுறை நாட்கள்:

  • ஆகஸ்ட் 4 ஆம் தேதி – ஞாயிற்றுகிழமை
  • ஆக்ஸ்ட் 7 ஆம் தேதி – Haryali Teej (ஹரியானா)
  • ஆகஸ்ட் 8 ஆம் தேதி – Tendong Lho Rum Faat (சிக்கிம் மாநிலம்)
  • ஆகஸ்ட் 10 ஆம் தேதி – இரண்டாவது சனிக்கிழமை
  • ஆகஸ்ட் 13 ஆம் தேதி – Patriots Day (மணிப்பூர்)
  • ஆகஸ்ட் 11 ஆம் தேதி – ஞாயிற்றுகிழமை
  • ஆகஸ்ட் 15 ஆம் தேதி – சுதந்திர தினம்
  • ஆகஸ்ட் 16 ஆம் தேதி – De Jure Transfer Day (புதுச்சேரி)
  • ஆகஸ்ட் 18 ஆம் தேதி – ஞாயிற்றுகிழமை
  • ஆகஸ்ட் 19 ஆம் தேதி – ரக்‌ஷா பந்தன் (உத்திராகண்ட், மத்திய பிரதேசம், ஹரியானா, குஜராத், சண்டிகர், ராஜஸ்தான், உத்திர பிரதேசம் சத்தீஸ்கர், ஒடிசா)
  • ஆகஸ்ட் 24 ஆம் தேதி – 4வது சனிக்கிழமை
  • ஆகஸ்ட் 25 ஆம் தேதி – ஞாயிற்றுகிழமை
  • ஆகஸ்ட் 26 ஆம் தேதி – கிருஷ்ண ஜெயந்தி (அந்தமான் மற்றும் நிக்கோபார் தீவுகள், பஞ்சாப், ஜார்கண்ட், ஜம்மு மற்றும் காஷ்மீர், மத்திய பிரதேசம், டெல்லி, ராஜஸ்தான், பீகார், ஹரியானா, ஹிமாச்சல பிரதேசம், தெலுங்கானா, உத்தரபிரதேசம், டாமன் மற்றும் டையூ, நாகாலாந்து, சண்டிகர், தமிழ்நாடு, உத்தரகாண்ட், ஒடிசா, சிக்கிம், குஜராத் , சத்தீஸ்கர், மேகாலயா, ஆந்திரா, திரிபுரா, தாத்ரா மற்றும் நகர் ஹவேலி, ஜார்கண்ட், மணிப்பூர், திரிபுரா)

1881 ஆம் ஆண்டின் மாநில அரசு, மத்திய அரசு மற்றும் யூனியன் பிரதேசங்கள் சட்டத்தின் கீழ் வங்கி விடுமுறைகள் பட்டியலிடப்பட்டுள்ளன. இந்திய ரிசர்வ் வங்கி (RBI), முழு ஆண்டுக்கான வங்கி விடுமுறை காலெண்டரை வெளியிடுகிறது, மேலும் இந்த காலெண்டரை இந்தியா முழுவதும் உள்ள அனைத்து வங்கிகளும் பின்பற்றுகின்றன என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் படிக்க:  ‘ராயன்’ விமர்சனம்.. படம் எப்படி இருக்கு? ரசிகர்கள் சொல்லும் டிவிட்டர் ரிவியூ!

உங்கள் பயணங்களை சிறப்பான மாற்ற சில டிப்ஸ்!
கீரை ஃப்ரெஷாக இருக்க சில டிப்ஸ்
காலையில் எழுந்தவுடன் செல்போன் பார்ப்பதால் இவ்வளவு பிரச்னையா?
46 ரன்களுக்கு ஆல் அவுட்.. மோசமான சாதனை படைத்த இந்திய அணி..!