வந்தே பாரத் ரயிலில் வழங்கிய உணவில் கிடந்த வண்டு.. கடுப்பான பயணிகள்!

Vande Bharat Train : வந்தே பாரத் ரயிலில் பயணிகளுக்கு வழங்கப்பட்ட உணவில் வண்டுகள் கிடந்தது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. நெல்லையில் இருந்து சென்னைக்கு புறப்பட்ட வந்தே பாரத் ரயிலில் இன்று வழங்கிய உணவில் வண்டுகள் கிடந்ததாக பயணிகள் புகார் அளித்துள்ளனர். இது சம்பந்தமான காட்சிகளும் சமூக வலைதளத்தில் வேகமாக பரவி வருகிறது.

வந்தே பாரத் ரயிலில் வழங்கிய உணவில் கிடந்த வண்டு.. கடுப்பான பயணிகள்!

வந்தே பாரத் ரயில்

Updated On: 

16 Nov 2024 13:38 PM

வந்தே பாரத் ரயிலில் பயணிகளுக்கு வழங்கப்பட்ட உணவில் வண்டுகள் கிடந்தது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. நெல்லையில் இருந்து சென்னைக்கு புறப்பட்ட வந்தே பாரத் ரயிலில் இன்று வழங்கிய உணவில் வண்டுகள் கிடந்ததாக பயணிகள் புகார் அளித்துள்ளனர். இது சம்பந்தமான காட்சிகளும் சமூக வலைதளத்தில் வேகமாக பரவி வருகிறது. இந்தியாவில் ரயில் போக்குவரத்து என்பது மிகவும் முக்கியமானதாக பார்க்கப்படுகிறது. இதனால் இந்திய ரயில்வே துறையை நவீனப்படுத்தும் முயற்சியில் மத்திய அரசு பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது. இதற்காக பல்வேறு புதிய ரயில்களை உற்பத்தி செய்து வருகிறது.

வந்தே பாரத் ரயிலில் வழங்கிய உணவில் வண்டு

மேலும், பல்வேறு ரயில்களை நவீனப்படுத்தியும் வருகிறது. அதில் ஒன்று தான் வந்தே பாரத் ரயில். இந்த ரயிலில் கட்டணம் அதிகமாக இருந்தாலும், விரைவாக பயணம் செய்ய முடியும் என்பதால் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. இந்த வந்தே பாரத் ரயில் பல்வேறு வழித்தடங்களில் இயக்கப்பட்டு வருகிறது.

குறிப்பாக தமிழ்நாட்டில் ஐந்துக்கும் மேற்பட்ட வழித்தடங்களில் இயக்கப்பட்டு வருகிறது. அதாவது, சென்னை – நெல்லை, பெங்களூரு – சென்னை, சென்னை – கோவை, நெல்லை – சென்னை, சென்னை – விஜயவாடா, கோவை – பெங்களூரு உள்ளிட்ட வழித்தடங்களில் இயக்கப்பட்டு வருகிறது.

Also Read : அமரன் திரைப்படத்திற்கு எதிர்ப்பு.. நெல்லை திரையரங்கில் பெட்ரோல் குண்டு வீச்சு..

குறிப்பாக, இதில் சென்னை – நெல்லை வந்தே பாரத் ரயிலில் தினமும் எண்ணற்ற பயணிகள் பயணம் செய்து வருகின்றனர். இந்த சென்னை – நெல்லை வந்தே பாரத் ரயில் சேவை கடந்த ஆண்டு தொடங்கியது.

பயணிகளுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்ட அதிகாரிகள்

இந்த ரயில் நெல்லையில் இருந்து காலை 6 மணிக்கு புறப்பட்டு மதியம் 1.50 மணிக்கு சென்னை வந்தடையும். மறுமார்க்கத்தில் எழும்பூரில் இருந்து பிற்பகல் 2.50 மணிக்கு புறப்பட்டு, அதே நோள் இரவு 10.40 மணிக்கு நெல்லை சென்றடைகிறது.

இதனால் மக்கள் மத்தியில் நெல்லை – சென்னை வந்தே பாரத் நல்ல வரவேற்பை பெற்றது. வாரத்தில் செவ்வாய்கிழமை தவிர்த்து மற்ற அனைத்து நாட்களில் நெல்லை – சென்னை வந்தே பாரத் ரயில் இயக்கப்பட்டு வருகிறது.

இந்த ரயில் எந்த அளவுக்கு வரவேற்பு பெற்றாலும், அதே நேரத்தில் பல்வேறு புகார்களும் குவிந்து வருகிறது. குறிப்பாக, வந்தே பாரத் ரயிலில் வழங்கப்படும் உணவுகள் குறித்து பல்வேறு புகார்கள் எழுந்து வருகிறது.

அந்த வகையில் இன்று நெல்லை – சென்னை வந்தே பாரத் ரயிலில் வழங்கப்பட்ட உணவில் வண்டுகள் கிடந்ததாக புகார்கள் எழுந்தது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இன்று காலை 6 மணிக்கு நெல்லையில் இருந்து சென்னைக்கு புறப்பட்ட வந்தே பாரத் ரயிலில் பயணிகளுக்கு காலை உணவு வழங்கப்பட்டது.

கொந்தளிக்கும் பயணிகள்

அதில் சாம்பாரில் வண்டுகள் கிடந்ததாக பயணிகள் புகார் அளித்தனர். இதனால் பயணிகள், ரயில்வே அதிகாரிகளுடன் வாக்குவாதம் ஏற்பட்டது. சாம்பாரில் கிடந்த சீரக மாசாலா தான் எனக் கூறி ரயில்வே அதிகாரிகள் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.

மேலும், பயணிகள் அதில் கிடந்தது வண்டுகள் தான் என்று புகார் கூறினர். இந்த சம்பந்தமான வீடியோவும் சமூக வலைதளத்தில் வேகமாக பரவி வருகிறது. இதனால் பயணிகள் தரமான உணவு வழங்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளனர்.

Also Read : 3 மாதம் கடன் செலுத்தாததால் ஆத்திரம்.. வீட்டில் அத்துமீறிய நிதி நிறுவன ஊழியர்கள்.. நடந்தது என்ன?

அண்மையில் கூட நடிகர் பார்த்திபன் வந்தே பாரத்  ரயிலில் தரமற்ற உணவு வழங்கப்படுவதாக புகார் அளித்தார். கோவையில் இருந்து சென்னை சென்ற வந்தே பாரத் ரயிலில் இரவு உணவில் சிக்கன் மோசமாக இருந்ததாகவும், உணவுக்காக காசை வாங்கிக் கொண்டு இப்படி தரமற்ற உணவை கொடுப்பது தவறானது என்று கூறியிருந்தார்.

இதற்கு பதிலளித்த சேலம் ரயில்வே அதிகாரிகள் சம்பந்தப்பட்ட உணவு ஒப்பந்ததாரருக்கு அபராதம் விதித்தனர். இப்படி வந்தே பாரத் ரயிலில் தரமற்ற உணவு வழங்குவதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பயணிகள் தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றனர்.

மயோனைஸ் சாப்பிட்டால் இவ்வளவு பிரச்னையா?
மழைக்காலத்தில் சளி பிடிக்காமல் இருக்க இதை பண்ணுங்க
தோல்வியில் இருந்து எளிதாக மீள்வது எப்படி?
நடிகை ஷ்ரத்தா ஸ்ரீநாத் நடிப்பில் பார்க்க வேண்டிய படங்கள்!