TVK Maanaadu: மாநாட்டுக்கு ரெடியாகும் த.வெ.க.. அதிகாலையிலேயே நடந்த பூமி பூஜை.. கலந்து கொண்ட ஆனந்த்! - Tamil News | Bhumi Pooja was held today for Tamilaga vettri kazhagam conference vikravandi bussy anand vijay | TV9 Tamil

TVK Maanaadu: மாநாட்டுக்கு ரெடியாகும் த.வெ.க.. அதிகாலையிலேயே நடந்த பூமி பூஜை.. கலந்து கொண்ட ஆனந்த்!

Updated On: 

04 Oct 2024 07:44 AM

த.வெ.க மாநாடு: தமிழக வெற்றிக் கழக முதல் மாநாட்டிற்கான பந்தக்கால் நடும் விழா மற்றும் பூமி பூஜை இன்று அதிகாலையிலேயே நடந்தது. இன்று காலை 4.30 மணிக்கு பிரம்ம முகூர்தத்தில் பந்தக்கால் நடும் விழா நடைபெற்றது. கணபதி பூஜை நடத்தப்பட்டு, பந்தல் காலுக்கு மஞ்சள், சந்தனம், பட்டுத்துணி அணிவிக்கப்பட்டு சிறப்பு வழிபாடு நடத்தப்பட்டது. மேலும், தமிழகத்தின் முக்கிய கோயில்களில் இருந்து புனித நீர் எடுத்து செல்லப்பட்டு பூமி பூஜையும் நடத்தப்பட்டது.

TVK Maanaadu: மாநாட்டுக்கு ரெடியாகும் த.வெ.க.. அதிகாலையிலேயே நடந்த பூமி பூஜை..  கலந்து கொண்ட ஆனந்த்!

த.வெ.க மாநாட்டிற்கான பூமி பூஜை

Follow Us On

தமிழக வெற்றிக் கழகத்தின் மாநாடு வரும் அக்டோபர் 27ஆம் தேதி நடைபெறும் என அக்கட்சியின் தலைவர் விஜய் அதிகாரப்பூர்வமாக அறிவித்தார். விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டி அருகே வி சாலை கிராமத்தில் அக்டோபர் 27ஆம் தேதி மாலை 4 மணிக்கு மாநாடு தொடங்க உள்ளது. மாநாட்டிற்கு இன்றும் சில நாட்களே உள்ள நிலையில், அதற்கான ஏற்பாடுகள் தீவிரமாக நடந்து வருகிறது. இந்த நிலையில், மாநாட்டிற்கான பந்தக்கால் நடும் விழா மற்றும் பூமி பூஜை இன்று அதிகாலையிலேயே நடந்தது. இன்று காலை 4.30 மணிக்கு பிரம்ம முகூர்தத்தில் பந்தக்கால் நடும் விழா நடைபெற்றது. கணபதி பூஜை நடத்தப்பட்டு, பந்தல் காலுக்கு மஞ்சள், சந்தனம், பட்டுத்துணி அணிவிக்கப்பட்டு சிறப்பு வழிபாடு நடத்தப்பட்டது.

அதிகாலையிலேயே நடந்த பூமி பூஜை:

தொடர்ந்து, பந்தல் கால் ஊன்றப்பட்டது. மேலும், தமிழகத்தின் முக்கிய கோயில்களில் இருந்து புனித நீர் எடுத்து செல்லப்பட்டு பூமி பூஜையும் நடத்தப்பட்டது. இந்த பூஜையில் விஜய் கலந்து கொள்ளாத நிலையில், அக்கட்சியின் பொதுச் செயலாளர் புஸ்ஸி ஆனந்த் உள்ளிட்ட கட்சி நிர்வாகிகள் பலரும் கலந்து கொண்டனர்.

தமிழ் சினிமாவில் பிரபல நடிகராக இருந்து தற்போது அரசியல் தலைவராக அவதாரம் எடுத்திருக்கிறார் விஜய். கடந்த பிப்ரவரி 2ஆம் தேதி தமிழக வெற்றிக் கழகம் என்ற கட்சியை தொடங்கினார். வரும் 2026 சட்டமன்றத் தேர்தலை குறித்து வைத்து தமிழக வெற்றிக் கழகம் என்கிற கட்சியைத் தொடங்கி இருக்கிறார்.

Also Read: நா.த.க., நிர்வாகிகள் விலகல்.. எந்த பிரச்னையும் இல்லை என கூலாக சொன்ன சீமான்!

அரசியல் கட்சி தொடங்கிய பிறகு சமூக பிரச்னைகளுக்கு தொடர்ந்து குரல் கொடுத்து வருகிறார். மேலும், 2026 ஆம் ஆண்டு சட்டமன்றத் தேர்தலை கருத்தில் கொண்டு தனது ஒவ்வொரு நகர்வையும் எடுத்து வருகிறார். அந்த வகையில் அண்மையில் கட்சி கொடியை அறிமுகப்படுத்தியது மிகப்பெரிய அளவில் விமர்சனங்களை பெற்றது.

வரும் 27ஆம் தேதி த.வெ.க மாநாடு:

அண்மையில் கூட அண்ணா பிறந்தநாளுக்கு வாழ்த்து, பெரியார் பிறந்தநாளுக்கு அவரது சிலைக்கு மரியாதை செலுத்தியது திராவிட சித்தாந்தத்தை கையில் எடுப்பதை உறுதிப்படுத்தி உள்ளார். இதன் மூலம், விஜய் என்ன மாதிரியான அரசியலை நோக்கி பயணிக்கப்போகிறார் என்பதை தெளிவுப்படுத்தியுள்ளார். அடுத்த கட்டமாக  அக்டோபர் மாதம் விஜய் நடத்தும் மாநாடு பெரும் எதிர்பார்ப்பை கிளப்பியுள்ளது.

மாநாட்டிற்கு இன்றும் சில நாட்களே உள்ள நிலையில், அதற்கான ஏற்பாடுகளை மேற்கொள்ள கட்சியின் தலைவர் விஜய் நிர்வாகிகளுக்கு உத்தரவிட்டுள்ளார். மாநாடு நடத்துவதற்கான பணிகளை கட்சியின் பொதுச் செயலாளர் புஸ்ஸி ஆனந்த் மேற்கொண்டு வருகிறார். மாநாடு தொடர்பான ஏற்பாடுகளை செய்ய பொறுப்பாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.

அதன்படி, கட்சியின் பொதுச் செயலாளர் புஸ்ஸி ஆனந்த் தலைமையில் சுமார் 30 குழுக்கள் அமைக்கப்பட்டு உள்ளதாக தெரிகிறது. இதில் ஒவ்வொரு குழுவிலும் 12 பேர் வரை இடம்பெற உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இப்படி மாநாட்டுக்கான ஏற்பாடுகளை தவெக கட்சியினர் மும்முரமாக செய்து வருகின்றனர்.

மும்முரமாக நடைபெறும் பணிகள்:

மாநாடு நடத்துவதற்கு விழுப்புரம் மாவட்ட காவல்துறையும் அனுமதி அளித்துள்ளது. அதோடு, பல்வேறு நிபந்தனைகளும் விதிக்கப்பட்டுள்ளது. அதாவது, 33 நிபந்தனைகளில் அதில் 17 நிபந்தனைகளை கட்டாயம் பின்பற்ற வேண்டும் என்று விழுப்புரம் காவல்துறை உத்தரவிட்டுள்ளது.

மாநாடு நடைபெறும் நாளில் போக்குவரத்திற்கு இடையூறு ஏற்படுத்தக் கூடாது, பார்க்கிங் வசதி, பாதுகாப்பு, குடிநீர் வசதி, ஆம்புலன்ஸ் உள்ளிட்ட வசதிகள் இருக்க வேண்டும் போன்ற நிபந்தனைகள் விதிக்கப்பட்டுள்ளது. மேலும், மாநாட்டிற்கு குழந்தைகளுக்கு அனுமதி அளிக்கக் கூடாது என்றும் கர்ப்பிணிகள், மாற்றுத்திறனாளிகளுக்கு தனி இடம் ஒதுக்கப்பட வேண்டும் என்று காவல்துறை நிபந்தனை விதித்துள்ளது.

Also Read: ரயிலின் படியில் அமர்ந்த இளைஞர்.. நொடிப்பொழுதில் பறிபோன உயிர்

மாநாட்டிற்கு அனுமதி அளித்திருப்பதை விஜய் கட்சியினருக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த மாநாட்டில் சுமார் 50,000 பேர் கலந்து கொள்வார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த நிலையில், இன்று பூமி பூஜை நடத்திய நிலையில், நாளையில் இருந்து மாநாடு பந்தல், பார்க்கிங், சமையல் கூடம், நுழைவாயில் என பல்வேறு பணிகள் நடைபெற இருக்கும்.

டிஆர்பியில் டாப் 10 இடம் பிடித்த சீரியல்கள் லிஸ்ட்!
தளபதி 69 பட நடிகை தான் இந்த சிறுமி...
உலகில் இயற்கையாகவே வண்ணங்களால் நிறைந்த இடங்கள்!
காலை உணவை தவிர்ப்பதால் ஏற்படும் சிக்கல்கள்...
Exit mobile version