வெளிநாடு சென்ற அண்ணாமலை.. என்ட்ரி கொடுத்த எச்.ராஜா… முக்கிய பொறுப்பை வழங்கிய மேலிடம்!
தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை வெளிநாடு சென்றுள்ள நிலையில் கட்சி பணிகளை கவனிக்க அக்கட்சியின் தேசிய தலைமை 6 பேர் கொண்ட ஒருங்கிணைப்பு குழுவை அமைத்துள்ளது. இக்குழுவில் பாஜகவின் மூத்த தலைவரும், தேசிய செயற்குழு உறுப்பினருமான எச்.ராஜா ஒருங்கிணைப்பாளராக நியமிக்கப்பட்டுள்ளார்.
குழு அமைத்த பாஜக மேலிடம்: தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை வெளிநாடு சென்றுள்ள நிலையில் கட்சி பணிகளை கவனிக்க அக்கட்சியின் தேசிய தலைமை 6 பேர் கொண்ட ஒருங்கிணைப்பு குழுவை அமைத்துள்ளது. பாஜக மாநில தலைவர் அண்ணாமலை கடந்த 28ஆம் தேதி லண்டன் சென்றுள்ளார். இந்த நிலையில், அவருக்கு பதிலாக புதிய தலைவர் நியமிக்கப்படுமா என்ற பல கேள்விகள் இருந்த நிலையில், அண்ணாமலையே தொடர்வார் என்று தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து, அண்ணாமலை பணிகளை கவனிக்க எச்.ராஜா தலைமையில் குழு ஒன்று அமைக்கப்பட்டுள்ளது. பாஜகவின் மூத்த தலைவரும், தேசிய செயற்குழு உறுப்பினருமான எச்.ராஜா ஒருங்கிணைப்பாளராக நியமிக்கப்பட்டுள்ளார். உறுப்பினராக பாஜக துணை தலைவர் சக்கரவர்த்தி, துணைத் தலைவர் கனக சபாபதி, மாநில பொதுச் செயலாளர் முருகானந்தம், பொதுச் செயலாளர் ராம சீனிவாசன், மாநில பொருளாளர் எஸ்.ஆர். சேகர் ஆகியோர் நியமிக்கப்பட்டிருக்கின்றனர்.
Also Read: தமிழகத்திற்கு இன்று கனமழை எச்சரிக்கை… எந்தெந்த மாவட்டங்கள் தெரியுமா? வானிலை மையம் அலர்ட்!
இவர்கள் கட்சியின் செயல்பாடுகளை நிர்வாக ரீதியாக கவனிப்பார்கள் என்று கூறப்படுகிறது. இந்த குழு மாநில உயர்நிலைக் குழுவோடு கலந்து ஆலோசித்து கட்சி சார்ந்த முடிவுகளை எடுக்கும். குழுவில் உள்ள ஒவ்வொரு உறுப்பினர்களும் மாநில தலைவர் மற்றும் ஒருங்கிணைப்பாளர் எடுக்கும் முடிவுகளுக்கு ஏற்ப ஒன்று அல்லது இரண்டு மண்டலங்களை கவனித்துக் கொள்ள வேண்டும் என்று பாஜக தலைமை தெரிவித்துள்ளது.
Organisational Appointment, Coordination Committee..
Our State President, Shri.K.Annamalai, will be attending an educational training programme in UK for 3 months (September, October, November). As per the direction of Hon’ble National President Shri Jagat Prakash Nadda, in… pic.twitter.com/pjuDKL6Fp7
— BJP Tamilnadu (@BJP4TamilNadu) August 30, 2024
வெளிநாடு சென்ற அண்ணாமலை:
ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகத்தில் மூன்று மாத உயர்படிப்பை படிப்பதற்காக லண்டன் சென்றுள்ளார் அண்ணாமலை. 3 மாதங்கள் லண்டனில் தங்கி இருந்து அங்குள்ள ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகத்தில் சர்வதேச அரசியல் குறித்து அண்ணாமலை படிக்க உள்ளார். அவரின் இந்த படிப்பு வரும் செப்டம்பர் மாதம் 2ஆம் தேதி தொடங்குகிறது. இந்த படிப்பிற்காக பல்வேறு நாடுகளை சேர்ந்த 40 பேர் தேர்வு செய்யப்பட்டுள்ளதில், இந்தியாவில் இருந்து தேர்வு செய்யப்பட்டுள்ள 12 பேரில் அண்ணாமலையும் ஒருவர். இவர் அங்கு தங்கிப் படிப்பதற்கான மொத்த செலவையும் ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகமே ஏற்றுள்ளது. இதனால், அவர் 3 மாதம் அங்கேயே தங்கி இருப்பார்.
அண்ணாமலை லண்டன் சென்றிருப்பதால், தமிழக பாஜகவில் மாநில தலைவர் மாற்றப்படுவரா என்ற கேள்வி எழுந்தது. ஆனால், அண்ணாமலையை மாற்றாமல் அவர் லண்டனில் இருந்தபடியே கட்சி பணிகளை கவனிக்க உள்ளார். மேலும், ” நான் வெளிநாடு சென்றாலும் தமிழக அரசின் நடவடிக்கைகளை உற்று கவனிப்பேன். ஆளுங்கட்சிக்கு எதிரான சண்டை தொடரும். வெளிநாடு சென்றாலும் எனது இதயம் தமிழகத்தில் தான் இருக்கும்.
Also Read: டி.என்.பி.எஸ்.சி முறைகேடு வழக்கு.. 6 மாதம் கெடு விதித்த சென்னை உயர்நீதிமன்றம்..
ஆளுங்கட்சி செய்யும் தவறுகளை தொடர்ந்து கேள்வி கேட்பேன். எங்களது கருத்துக்கள் தொடர்ந்து அறிக்கை வாயிலாக வந்து கொண்டே இருக்கும்” என்று அண்ணாமலை கூறியிருந்தார். இந்த சூழலில் தான் கட்சி பணிகளை கவனிக்க அக்கட்சியின் தேசிய தலைமை 6 பேர் கொண்ட ஒருங்கிணைப்பு குழுவை அமைத்துள்ளது.