5
Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வெப் ஸ்டோரீஸ்வணிகம்விளையாட்டுகல்விடெக்னாலஜி

TVK Party: விஜய்க்கு சொல்லி புரிய வைப்பேன்.. அரசியல் பேச்சை விமர்சித்த தமிழிசை!

TVK First Conference: விஜய் என்ன நினைக்கிறாரோ, அதனையெல்லாம் பிரதமர் மோடி ஏற்கனவே செய்து விட்டார். இதை நான் விஜய்யிடம் எடுத்துச் சொல்வேன். தம்பி நீங்க சாதி, இன, மொழி பாகுபாடு இருப்பதாக சொன்னீர்கள். அதெல்லாம் கிடையாது. பிரிவினைவாதம் நாங்கள் பேசவில்லை. சப்கா சாத் சப்கா விகாஸ் என சொல்வது போல அனைவருக்கும் எல்லாம் என நீங்கள் சொல்வதைத் தான் நாங்கள் செய்கிறோம். இதைச் சொல்லி விஜய்க்கு நான் புரிய வைப்பேன்.

TVK Party: விஜய்க்கு சொல்லி புரிய வைப்பேன்.. அரசியல் பேச்சை விமர்சித்த தமிழிசை!
கோப்பு புகைப்படம்
petchi-avudaiappantv9-com
Petchi Avudaiappan | Published: 28 Oct 2024 08:00 AM

தமிழக வெற்றிக் கழகம்: தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டியில் மிகப்பெரிய அளவில் நடைபெற்று முடிந்துள்ளது. நேற்றைய தினம் தமிழக அரசியலில் மிகப்பெரிய எழுச்சியை ஏற்படுத்திய அந்த மாநாடு தொடர்பான பேச்சு இந்திய அளவில் இருந்தது. தமிழக வெற்றிக் கழக கட்சியின் தலைவர் விஜய் பேசிய முதல் அரசியல் மேடைப் பேச்சில் அனல் தெறித்ததாக தொண்டர்கள் உற்சாகமடைந்தனர். அவர் தன்னுடைய பேச்சில் மறைமுகமான பாஜகவை கொள்கை எதிரி என்றும், திமுகவை அரசியல் எதிரி என்றும் குறிப்பிட்டார். இதற்கு பாஜக, திமுக சார்பில் கடும் விமர்சனங்கள் முன்வைக்கப்பட்டுள்ளது.

விஜய்க்கு பாராட்டு 

இப்படியான நிலையில் தமிழக பாஜகவின் முன்னணி தலைவரான தமிழிசை சௌந்தரராஜன் தனது கருத்தை தெரிவித்துள்ளார். அதில், “முதலில் தம்பி விஜய்க்கு எனது வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன். ஒரு புதிய கட்சி உதயமாகி இருக்கிறது. உதயாவிற்கு (உதயநிதி ஸ்டாலின்) எதிராக உதயமாகி இருக்கும் அந்த கட்சிக்கு வாழ்த்துகள் தெரிவித்துக் கொள்கிறேன். இதில் பாராட்டத்தக்க விஷயம் என்னவென்று பார்த்தால், முதலில் நல்ல கூட்டம் கூடியது. எந்த நிலையிலும் வரம்பு மீறாத முறையான தொண்டர்கள் இருந்தனர்.

ஆனால் மாநாட்டு பந்தலில் தண்ணீர் மட்டும் கொஞ்சம் அதிகமாக வைத்திருந்து இருக்கலாம். 2,3 பேர் உயிரிழந்து இருப்பது மனதுக்கு வருத்தமாக இருக்கிறது. அதேசமயம் எல்லா சுதந்திர போராட்ட வீரர்களுக்கும் அஞ்சலி செலுத்தியது, தன்னுடைய பெற்றோரிடம் ஆசி வாங்கியது, ஒரு நல்ல சொற்பொழிவை ஆற்றியது, பனை மரத்தை மாநில மரமாகவும், பதநீரை மாநில பானமாகவும், முழுமையான மதுவிலக்கு ஆகியவைப் பற்றி சொன்னதும், ஊழலை ஒழிக்கிறேன் என கூறியது அனைத்தையும் நான் ஆரோக்கியமான ஒன்றாக பார்க்கிறேன். அதனால் விஜய்யை பாராட்டுகிறேன்.

Also Read: TVK first conference: தமிழக வெற்றிக் கழக மாநாடு.. தொகுத்து வழங்கிய பெண் யார் தெரியுமா?

விஜய்க்கு சொல்லி புரிய வைப்பேன்

அதேநேரம் விஜய் தனது பேச்சில் பாஜகவை தனது கொள்கை எதிரி என மறைமுகமாக சொன்னதாக பலரும் கூறினார்கள். நாங்கள் பிரிவினைவாதத்தை பற்றி பேசவில்லை. வளர்ச்சி திட்டத்தை தான் கொடுக்கிறோம். விஜய் எதையெல்லாம் என்னுடைய கனவு என சொல்கிறாரோ அதையெல்லாம் பாரத பிரதமர் மோடி நிறைவேற்றி வருகிறார். எல்லாருக்கும் இல்லம் தோறும் நல்ல குடிநீர் (ஜல்சக்தி இயக்கம்), வயதானவர்களுக்கு பாதுகாப்பு கொடுக்க வேண்டும் என சொன்னார், அதற்காக பிரதமர் ஆயுஷ்மான் பாரத் என்ற திட்டத்தை 70 வயதுக்கு மேற்பட்டவர்களுக்காக அறிமுகப்படுத்தியிருக்கிறார்.

பசியிலிருந்து மக்களை மீட்க வேண்டும் என விஜய் சொல்கிறார். 85 கோடி மக்களை மீட்க கரீப் கல்யாண் அன்ன யோஜனா திட்டம் கொரோனா காலத்தில் அறிமுகம் செய்யப்பட்டு இன்று வரை செயல்பட்டு வருகிறது. இதன்மூலம் வறுமைக் கோட்டுக்கு கீழே உள்ள 25 கோடி மக்களை மேலே கொண்டு வந்திருக்கிறோம் என வரலாறு சொல்கிறது.

ஆக, விஜய் என்ன நினைக்கிறாரோ, அதனையெல்லாம் பிரதமர் மோடி ஏற்கனவே செய்து விட்டார். இதை நான் விஜய்யிடம் எடுத்துச் சொல்வேன். தம்பி நீங்க சாதி, இன, மொழி பாகுபாடு இருப்பதாக சொன்னீர்கள். அதெல்லாம் கிடையாது. பிரிவினைவாதம் நாங்கள் பேசவில்லை. சப்கா சாத் சப்கா விகாஸ் என சொல்வது போல அனைவருக்கும் எல்லாம் என நீங்கள் சொல்வதைத் தான் நாங்கள் செய்கிறோம். இதைச் சொல்லி விஜய்க்கு நான் புரிய வைப்பேன். 27 லட்சம் சிறுபான்மை மக்கள் மட்டுமே உறுப்பினர்களாக பாஜகவில் சேர்ந்திருக்கிறார்கள்.

Also Read: Tirupati: திருப்பதியில் பாதயாத்திரை செல்லும் பக்தர்களுக்கு புதிய கட்டுப்பாடு!

திமுக எதிர்ப்பு

இதன்மூலம் நாங்கள் சிறுபான்மையின மக்களுக்கு எதிரானவர்கள் அல்ல என புரிய வைப்பேன். அதேசமயம் நான் உறுதியாக நம்புவது என்னவென்றால், அவர் அரசியல் எதிரி என குறிப்பிட்டது திமுகவை தான். அவர்களை பாசிசம் என சொல்லும் நீங்கள் பாயாசமா?, பிரிவினை வாதம் கூட நேரடியாக தெரிகிறது. ஊழல் எல்லா இடங்களிலும் ஒளிந்திருக்கிறது. குடும்ப ஆட்சி தமிழ்நாட்டை சீரழித்துக் கொண்டிருக்கிறது. திராவிட மாடல் என ஏமாற்றிக் கொண்டிருக்கிறார்கள் என விஜய் சொன்னார். இதன்மூலம் திமுக எதிர்க்க வலிமையான கட்சி வந்து விட்டதைப் பார்க்கிறேன்.

பாஜக எதிர்ப்பை நான் விஜய்யிடம் சொல்லி புரிய வைக்க முடியும். ஆனால் திமுக எதிர்ப்பை இதே வீரியத்துடன் இருக்க வேண்டும். ஆளுநர் கொள்கை எதிர்ப்பு, இருமொழிக்கொள்கை ஆகியவற்றை நான் விமர்சனம் செய்கிறேன் என தமிழிசை சௌந்தரராஜன் தெரிவித்துள்ளார்.

Latest News