தமிழிசையை சங்கு ஊதி வரவேற்ற பாஜ தொண்டர்கள் – கோடம்பாக்கம் பகுதியில் பிரச்சாரம்
கோடம்பாக்கம் பகுதியில் வாக்கு சேகரிக்க வந்த தமிழிசை சவுந்தரராஜனை சங்கு ஊதி பாஜ தொடண்டர்கள் வரவேற்றனர். தென் சென்னை மக்களவை தொகுதியில் பாஜ சார்பில் போட்டியிடும் தமிழிசை சவுந்தரராஜன் தி.நகர் சட்டமன்ற தொகுதியில் வேனில் வீதி வீதியாக சென்று வாக்கு சேகரித்தார். கோடம்பாக்கம் பகுதியில் வாக்கு சேகரிக்க வந்த தமிழிசையை பாஜவினர் சங்கு ஊதி வரவேற்றனர். வடை சுட்டு வாக்கு சேகரித்தார், அதனை தொடர்ந்து நேற்று கோடம்பாக்கம் பகுதியில் உள்ள உணவகத்தில் இட்லி, வடை சாப்பிட்டு வாக்குகள் […]
கோடம்பாக்கம் பகுதியில் வாக்கு சேகரிக்க வந்த தமிழிசை சவுந்தரராஜனை சங்கு ஊதி பாஜ தொடண்டர்கள் வரவேற்றனர்.
தென் சென்னை மக்களவை தொகுதியில் பாஜ சார்பில் போட்டியிடும் தமிழிசை சவுந்தரராஜன் தி.நகர் சட்டமன்ற தொகுதியில் வேனில் வீதி வீதியாக சென்று வாக்கு சேகரித்தார். கோடம்பாக்கம் பகுதியில் வாக்கு சேகரிக்க வந்த தமிழிசையை பாஜவினர் சங்கு ஊதி வரவேற்றனர். வடை சுட்டு வாக்கு சேகரித்தார், அதனை தொடர்ந்து நேற்று கோடம்பாக்கம் பகுதியில் உள்ள உணவகத்தில் இட்லி, வடை சாப்பிட்டு வாக்குகள் சேகரித்தார்.
பின்னர் தமிழிசை அளித்த பேட்டி:
நான் மக்களுக்கு நல்லது செய்வேன், அழைக்கும் போது ஓடிவந்து நிற்பேன் என்கிற நம்பிக்கை மக்களுக்கு உள்ளது. மக்கள் பணியில் சாதிக்க முடியும் என்கிற எண்ணத்தை மக்கள் அளித்துள்ளனர். மக்கள் நம்பிக்கையோடு எனக்கு வாக்களிப்பார்கள். மக்களவை உறுப்பினராக எப்படி இருக்க வேண்டும் என்பதற்கு உதாரணமாக இருப்பேன்.
தேர்தல் பத்திரம் கணக்கில் உள்ளதால் அதனை ஊழலாக கருத முடியாது. பாஜ மட்டும் தேர்தல் பத்திரம் பெறவில்லை. அனைத்துக் கட்சிகளும் பெற்றுள்ளன. ஆனால், பாஜ மீது மட்டும் குற்றச்சாட்டு. எப்போதும் தெருவில் மக்களோடு மக்களாகத்தான் இருப்பேன்.
பானையை உடைத்து கூறுவேன், பாஜவிற்கும் சின்னம் ஒதுக்கீடு செய்வதற்கும் எந்த தொடர்பும் இல்லை. திமுகவுக்கும் அதிமுகவுக்கும் போட்டி என கூறிக் கொண்டுள்ளார்கள். ஆனால் சத்தமே இல்லாமல் ஒரு தேசியக் கட்சி வளர்ந்து வருகிறது. 1967ம் ஆண்டு தமிழகத்தில் மாநிலக் கட்சிக்கு எப்படி ஒரு புரட்சி ஏற்பட்டதோ அதுபோல தற்போது அமைதியான புரட்சி ஏற்பட்டுள்ளது. தேர்தல் முடிவுக்குப் பின்னர் தேசியக் கட்சியின் வளர்ச்சியை திமுக, அதிமுக ஆகிய இரு கட்சிகளும் தெரிந்து கொள்ளும்.
இவ்வாறு அவர் கூறினார்.