5
Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வெப் ஸ்டோரீஸ்வணிகம்விளையாட்டுகல்விடெக்னாலஜி

Tirunelveli: கல்லூரி வகுப்பறையில் இரத்தக்கறை.. பதறிப்போன நெல்லை மாணவிகள்!

கல்லூரி வளாகத்தின் பின்பகுதியில் கடைசியாக உள்ள கட்டிடத்தில் இளங்கலை வணிகவியல் பாடப்பிரிவு செயல்பட்டு வருகிறது. இதில் இரண்டாம் ஆண்டுக்கான வகுப்பறையில் இரத்த துளிகள் மற்றும் சுவர்களில் இரத்தக்கறை இருந்துள்ளது.இதனை நேற்று முன்தினம் இரவு காவலாளி பார்த்து கல்லூரி முதல்வருக்கு தகவல் தெரிவித்துள்ளார்.

Tirunelveli: கல்லூரி வகுப்பறையில் இரத்தக்கறை.. பதறிப்போன நெல்லை மாணவிகள்!
கோப்பு புகைப்படம்
petchi-avudaiappan
Petchi Avudaiappan | Updated On: 18 Nov 2024 11:13 AM

திருநெல்வேலியில் செயல்படும் அரசு மகளிர் கல்லூரியின் வகுப்பறையில் இரத்தக்கறை கண்டறியப்பட்ட் சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. திருநெல்வேலி மாவட்டத்தில் பழைய பேட்டை பகுதியில் ராணி அண்ணா அரசு மகளிர் கலைக் கல்லூரி செயல்பட்டு வருகிறது. இக்கல்லூரியில் சுற்றுவட்டாரத்தைச் சேர்ந்த சுமார் 4,500  மாணவிகள் பயின்று வருகின்றனர். கல்லூரியின் உள்ளே மாணவியர்களுக்கான விடுதியும் செயல்பட்டு வருகிறது. இப்படியான நிலையில் கல்லூரி வளாகத்தின் பின்பகுதியில் கடைசியாக உள்ள கட்டிடத்தில் இளங்கலை வணிகவியல் பாடப்பிரிவு செயல்பட்டு வருகிறது. இதில் இரண்டாம் ஆண்டுக்கான வகுப்பறையில் இரத்த துளிகள் மற்றும் சுவர்களில் இரத்தக்கறை இருந்துள்ளது.இதனை நேற்று முன்தினம் இரவு காவலாளி பார்த்து கல்லூரி முதல்வருக்கு தகவல் தெரிவித்துள்ளார். இதன்பின்னர் வழக்கம்போல இன்று காலை கல்லூரிக்கு வந்த மாணவிகளும், முதல்வரிடம் சென்று இரத்தக்கறை குறித்து புகார் தெரிவித்துள்ளனர்.

இதனிடையே இந்த சம்பவம் தொடர்பாக பேட்டை போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. சம்பவ இடத்திற்கு விரைந்த வந்த காவல்துறையினர் கல்லூரி வகுப்பறை, வளாகம் மற்றும் சுற்றுப்புற பகுதியில் ஆய்வு மேற்கொண்டனர்.பின்னர் தடய அறிவியல் நிபுணர்களை வரவழைத்து சம்பவ இடத்தில் சிதறிக்கிடந்த மற்றும் சுவர்களில் இருந்த இரத்த மாதிரிகள், மற்றும் கைரேகை, கால் தடங்கள் உள்ளிட்ட மாதிரிகளை சேகரித்துக் கொண்டனர்.

இந்த ரத்தக்கறைகளின் மாதிரிகள் தடய அறிவியல் பரிசோதனைக்காக மதுரைக்கு அனுப்பி வைக்கப்பட உள்ளதாகவும், சம்பவம் தொடர்பாக தொடர் விசாரணை நடைபெற்று வருவதாகவும் போலீசார் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக தற்போது வரை எந்த தகவலும் வெளியாகவில்லை.ஏற்கனவே கல்லூரி வளாகத்தில் கடந்த சில வாரங்களாகவே கட்டுமான பணி நடந்து வருகிறது.

அந்த பணிகளில் ஈடுபட்டுள்ள தொழிலாளர்களிடமும் இந்த சம்பவம் தொடர்பாக விசாரணை மேற்கொள்ளப்பட்டது. பின்னர் அவர்களிடம் கைரேகை உள்ளிட்ட அடையாளங்கள் பெறப்பட்டது. அதுமட்டுமல்லாமல் கல்லூரி வளாகத்தில் உள்ள சிசிடிவி கேமரா காட்சிகளையும் போலீசார் ஆய்வு செய்தனர்.

ராணி அண்ணா கல்லூரியின் பின்புறம் காட்டுப்பகுதி உள்ளது. இதனால் சுவர் ஏறி யாரும் உள்ளே வந்தார்களா?. சம்பந்தப்பட்ட இரத்தக்கறை மனிதர்களுடையதா அல்லது விலங்குகளுடையதா என்பது தொடர்பாகவும் விசாரணை நடைபெற்று வருகிறது. இந்நிலையில் தற்போது கல்லூரி முழுவதும் இரத்தக்கரைகள் படிந்து கிடக்கும் வீடியோ காட்சிகள் வெளியாகி இணையத்தில் வைரலாகியுள்ளது.

இது பல கேள்விகளை எழுப்பியுள்ளது.  குறிப்பாக சம்பந்தப்பட்ட வகுப்பறையில் உள்ள ஒரு பெஞ்சிற்கு கீழே இரத்த கரைகள் அதிக அளவில் உள்ளது. அதனை பேப்பரால் துடைத்து அங்குள்ள குப்பைக்கூடையில்  போடப்பட்டுள்ளது. அதுமட்டுமின்றி அங்குள்ள ஸ்விட்ச் போர்டுகளிலும் இரத்த கரைகள் படிந்துள்ளது. இப்படியாக பார்க்கும் பொழுது விலங்களுடைய இரத்தம் இல்லை என்பது தெரிய வருகிறது. மனிதர்களுடையதாக இருக்கக்கூடும் என்றும், அப்படியென்றால் அங்கு நடந்தது என்ன என்பது குறித்து வெளிப்படையான விசாரணை நடத்த வேண்டும் என பலரும் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Latest News