Coimbatore Crime: அதிர்ந்த கோவை.. ஹோட்டல் அறையில் சடலமாக கிடந்த இளம்பெண்.. சிக்கிய காதலன்! - Tamil News | Boyfriend kills woman in hotel room in Coimbatore tamil news | TV9 Tamil

Coimbatore Crime: அதிர்ந்த கோவை.. ஹோட்டல் அறையில் சடலமாக கிடந்த இளம்பெண்.. சிக்கிய காதலன்!

Published: 

17 Sep 2024 15:42 PM

கோவை மாவட்டத்தில் ஹோட்டல் அறையில் இளம்பெண் கொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சந்தேகத்தால் இளம்பெண்ணை அவரது காதலன் அடித்தே கொலை செய்திருப்பது விசாரணையில் தெரியவந்துள்ளது. இதனை அடுத்து, போலீசார் அவரை கைது செய்து சிறையில் அடைத்தனர்.

Coimbatore Crime: அதிர்ந்த கோவை.. ஹோட்டல் அறையில் சடலமாக கிடந்த இளம்பெண்..  சிக்கிய காதலன்!

மாதிரிப்படம் (Photo Credit: Getty)

Follow Us On

கோவை மாவட்டத்தில் ஹோட்டல் அறையில் இளம்பெண் கொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சந்தேகத்தால் இளம்பெண்ணை அவரது காதலன் அடித்தே கொலை செய்திருப்பது விசாரணையில் தெரியவந்துள்ளது. இதனை அடுத்து, போலீசார் அவரை கைது செய்து சிறையில் அடைத்தனர். கோவை மாவட்டம் கள்ளபாளையம் பகுதியைச் சேர்ந்தவர் கீதா. இவர் அவிநாசி சாலையில் உள்ள ஒரு மகளிர் விடுதியில் தங்கி இருந்தார். இவர் ஜிம் ஒன்றில் பயிற்சியாக வேலை பார்த்து வந்தார். இவருக்கு சின்னியம்பாளையம் பகுதியைச் சேர்ந்த சரவணன் என்பவரை காதலித்து வந்துள்ளார். இவர்களது காதலுக்கு அவர்களது வீட்டில் கடும் எதிர்ப்பு இருந்ததாக கூறப்படுகிறது. இதனால் இவர்கள் இருவரும் வீட்டிற்கு தெரியாமல் திருமணம் செய்ய முடிவு செய்தனர். அதன்படி, இருவரும் அண்மையில் திருமணம் செய்துக் கொண்டார். ஆனால், திருமணம் பதிவு எதுவும் இவர்கள் மேற்கொள்ளவில்லை.

ஹோட்டல் அறையில் சடலமாக கிடந்த இளம்பெண்:

திருமணம் செய்தபிறகும் இவர்களது காதலை வீட்டில் ஏற்றுகொள்ளவில்லை. இதனால் இவர்கள் இருவரும் வெளியே சந்தித்து பேசி வந்துள்ளனர். மேலும் ஹோட்டல் அறையிலும் தங்கி உள்ளனர். இதற்கிடையில், பெண் கீதாவுக்கும், சரவணனுக்கும் அடிக்கடி சண்டை ஏற்பட்டு வந்துள்ளதாக தெரிகிறது. கீதா மீது சந்தேகப்பட்டு அடிக்கடி சரவணன் சண்டை போட்டுள்ளதாக கூறப்படுகிறது. இந்த நிலையில், சம்பவத்தன்று இருவரும் கோவையில் ஒரு ஹோட்டலில் அறை எடுத்து தங்கி உள்ளனர்.

Also Read: புரட்டாசி தொடங்கிடுச்சு.. மழை எப்போது தெரியுமா? வானிலை மையம் சொன்ன தகவல்!

அப்போது, இவர்கள் இருவருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டிருக்கிறது. கீதா மீது சந்தேகம் அடைந்த சரவணன், அவரை தகாத வார்த்தைகளால் பேசியதாக தெரிகிறது. இதனால் இவர்கள் இருவருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டிருக்கிறது. வாக்குவாதம் நீடித்த நிலையில், ஒரு கட்டத்தில் ஆத்திரம் அடைந்த சரவணன், கீதாவின் முகத்தில் குத்திவிட்டு, தலையை பிடித்து சுவற்றி மோதி கொடுமைப்படுத்தியுள்ளார்.

இதில் கீதாவுக்கு பலத்த காயம் ஏற்பட்டு ரத்த வெள்ளத்தில் கிடந்துள்ளார். சம்பவத்தன்று இரவில் இந்த சம்பவம் நடந்துள்ளது. மறுநாள் அதிகாலை அறைக்குள் இருந்து பதற்றமாக வந்த சரவணன், விடுதியை காலி செய்துவிட்டு வேகமாக சென்றுள்ளார். இதனால் அவரது நடத்தையில் சந்தேகம் அடைந்த ஹோட்டல் ஊழியர்கள் அவர் தங்கி இருந்த அறைக்கு சென்று பார்த்துள்ளனர். அங்கு இளம்பெண் ரத்த வெள்ளத்தில் சடலமாக கிடந்தது பார்த்து அதிர்ச்சி அடைந்தனர். இதனை அடுத்து, உடனே பீளமேடு போலீசாருக்கு தகவல் கொடுத்தனர்.

சிக்கிய காதலன்:

அதன்படி, சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் இளம்பெண்ணின் சடலத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். இந்த சம்பவம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர். ஹோட்டல் அறையில் இருந்த சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்தனர். அதில் சரவணனை அடையாளம் கண்டு தீவிரமாக தேடினர். அவரை சின்னியம்பாளையம் பகுதியில் அவரை போலீசார் பிடித்து கைது செய்தனர்.

அவரிடம் நடத்திய விசாரணையில், இளம்பெண் கீதாவை கொலை செய்ததை ஒப்புக் கொண்டார். இதனை அடுத்து, போலீசார் அவரை கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். சந்தேகத்தால் இளம்பெண்ணை அவரது காதலன் ஹோட்டல் அறையில் கொடூரமாக கொலை செய்த சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Also Read: சென்னை மெட்ரோ ரயில் சேவையில் மாற்றம்.. டைமிங் நோட் பண்ணிக்கோங்க பயணிகளே!

பெண்கள், குழந்தைகளுக்கு எதிராக நாளுக்கு நாள் வன்முறை சம்பவங்கள் அதிகரித்து வருகிறது. குறிப்பாக பெண்களுக்கு எதிராக நடக்கும கொலை சம்பவங்கள் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தி வருகிறது. இதனை தடுக்க மத்திய, மாநில அரசுகள் தொடர்ந்து நடவடிக்கை எடுத்து வந்தாலும் நின்ற பாடில்லை. தொடர்ந்து குற்றச்செயல்கள் அதிகரித்த வண்ணமே உள்ளது. குறிப்பாக, பாதிக்கப்படும் பெண்களுக்கு தெரிந்த நபர்களே தான் வன்முறை சம்பவங்களில் ஈடுபடுவதகா ஐ.நா. தெரிவித்துள்ளது. இதனால், கொலை, வன்முறைகள் தடுக்க  மத்திய, மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்களும், சமூக ஆர்வலர்களும் கோரிக்கை விடுத்து வருகின்றனர்.

யூரிக் அமிலம் அதிகமாக இருந்தால் இந்த பருப்பு வகைகளை தவிர்க்க வேண்டும்..
வெயில் காலத்தில் அன்னாசி பழம் சாப்பிடலாமா?
ஒரே ஒரு சதம்.. பல்வேறு சாதனைகளை குவித்த அஸ்வின்!
பக்கவாதத்தை தடுக்கும் நூக்கல்.. இதில் இவ்வளவு நன்மை பண்புகளா..?
Exit mobile version