BSP Armstorng Murder: “வேதனையாக இருக்கிறது” ஆம்ஸ்ட்ராங் உடலை பார்த்தபின் மாயாவதி உருக்கம்! - Tamil News | | TV9 Tamil

BSP Armstorng Murder: “வேதனையாக இருக்கிறது” ஆம்ஸ்ட்ராங் உடலை பார்த்தபின் மாயாவதி உருக்கம்!

சென்னை பெரம்பூரில் ஆம்ஸ்ட்ராக் உடல் அஞ்சலிக்காக மாநகராட்சி பள்ளி மைதானத்தில் வைக்கப்பட்டுள்ளது. ஆம்ஸ்ட்ராங் உடலுக்கு அஞ்சலி செலுத்துவதற்காக பகுஜன் சமாஜ் கட்சியின் தேசிய தலைவரும், உத்தர பிரதேச மாநில முன்னாள் முதலமைச்சருமான மாயாவதி இன்று காலை 9.30 மணியளவில் உத்தர பிரதேசத்தில் இருந்து தனி விமானம் மூலம் சென்னை வந்தார். மாயாவதி வருகையையொட்டி சென்னையில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

BSP Armstorng Murder: வேதனையாக இருக்கிறது ஆம்ஸ்ட்ராங் உடலை பார்த்தபின் மாயாவதி உருக்கம்!

மாயாவதி

Updated On: 

07 Jul 2024 11:55 AM

மாயாவதி நேரில் அஞ்சலி: சென்னை பெரம்பூரில் ஆம்ஸ்ட்ராக் உடல் அஞ்சலிக்காக மாநகராட்சி பள்ளி மைதானத்தில் வைக்கப்பட்டுள்ளது. ஆம்ஸ்ட்ராங் உடலுக்கு அஞ்சலி செலுத்துவதற்காக பகுஜன் சமாஜ் கட்சியின் தேசிய தலைவரும், உத்தர பிரதேச மாநில முன்னாள் முதலமைச்சருமான மாயாவதி இன்று காலை 9.30 மணியளவில் உத்தர பிரதேசத்தில் இருந்து தனி விமானம் மூலம் சென்னை வந்தார். மாயாவதி வருகையையொட்டி சென்னையில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. சென்னை விமான நிலையத்தில் இருந்து கார் மூலம் பெரம்பூருக்கு சென்ற அவர், மாநகராட்சி பள்ளியில் வைக்கப்பட்டுள்ள ஆம்ஸ்ட்ராங் உடலுக்கு கண்ணீர் மல்க அஞ்சலி செலுத்தினார். பின்பு, ஆம்ஸ்ட்ராங்கின் மனைவி, மகளை சந்தித்து ஆறுதல் கூறினார்.

Also Read: ஆம்ஸ்ட்ராங் உடல் இன்று நல்லடக்கம்.. பலத்த போலீஸ் பாதுகாப்பு!

“சிபிஐ வசம் ஒப்படைக்க வேண்டும்”

இதனை தொடர்ந்து அங்கு பேசிய மாயாவதி, “மிகுந்த அர்ப்பணிப்புடன் தமிழ்நாட்டில் பகுஜன் சமாஜ் கட்சியை வளர்த்தவர் ஆம்ஸ்ட்ராங். புத்தர் காட்டிய மனிதாபிமான வழியில் பயணித்தவர். அவரது மரணம் தமிழ்நாட்டில் உள்ள தலித்துகளுக்கு ஒரு பேரிழப்பு. ஆம்ஸ்ட்ராங் மறைவு செய்து கேட்டு மிகுந்த வேதனை அடைந்தேன். தமிழ்நாட்டில் சட்டம் ஒழுங்கு சரியில்லை. உண்மையான குற்றவாளிகள் இன்னும் கைது செய்யப்படவில்லை. இந்த வழக்கு விசாரணையை தமிழக அரசு சிபிஐ வசம் ஒப்படைக்க வேண்டும். மாநில அரசு சட்டம் ஒழுங்கை உறுதிப்படுத்த வேண்டும். விளிம்புநிலையில் இருப்பவர்கள் பாதுகாப்பாக உணர வேண்டும்.

இது ஒரு தலித் தலைவரின் கொலையைப் பற்றியது அல்ல. ஒட்டுமொத்த தலித் சமூகமும் அச்சுறுத்தலில் உள்ளது. பல தலித் தலைவர்கள் தங்கள் உயிரைப் பற்றி பயப்படுகிறார்கள். கட்சி தொண்டர்கள் அமைதியான முறையில் தங்களது கோரிக்கைகளை முன்வைக்க வேண்டும். ஆனால் அதே நேரத்தில், சட்ட வரம்புகளுக்குள் இருக்க வேண்டும்.


இந்த வழக்கில் அரசு தீவிரமாக இருந்திருந்தால் குற்றம் சாட்டப்பட்டவர்கள் கைது செய்யப்பட்டிருக்கலாம். ஆனால், உண்மை குற்றவாளிகளை கண்டுபிடிக்கவில்லை. உண்மை குற்றவாளிகளை கண்டுபிடிக்க தமிழக அரசுக்கு பகுஜன் சமாஜ் கட்சி அழுத்தம் கொடுக்கும். இந்த வழக்கில் தமிழக அரசு தீவிர நடவடிக்கை எடுத்து எங்களுக்கு நியாயம் அளிக்க வேண்டும். ஆம்ஸ்ட்ராங் குடும்பத்திற்கு தமிழக அரசு பாதுகாப்பு அளிக்க வேண்டும்” என்று தெரிவித்துள்ளார்.

Also Read: 3 குற்றவியல் சட்டங்கள் – ”நாட்டை சர்வாதிகார தன்மை நோக்கி நகர்த்தும்” – அமைச்சர் துரைமுருகன்..

நட்ஸ் சாப்பிடுவதால் உடலுக்கு கிடைக்கும் நன்மைகள்!
தாமரை விதை எனப்படும் மக்கானாவில் இப்படி ஒரு விஷயம் இருக்கா?
மோட்டோ போன்களுக்கு அதிரடி தள்ளுபடி வழங்கும் பிளிப்கார்ட்!