BSP Armstrong Murder: தமிழகத்தை அதிரவிட்ட ஆம்ஸ்ட்ராங் கொலை.. சரணடைந்த 8 பேர்! - Tamil News | | TV9 Tamil

BSP Armstrong Murder: தமிழகத்தை அதிரவிட்ட ஆம்ஸ்ட்ராங் கொலை.. சரணடைந்த 8 பேர்!

பகுஜன் சமாஜ் மாநிலத் தலைவர் ஆம்ஸ்ட்ராங் சென்னையில் வெட்டி படுகொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை கிளப்பியுள்ளது. இந்த நிலையில், ஆம்ஸ்ட்ராங்கை கொலை செய்ததாக 8 பேர் காவல்நிலையத்தில் சரண் அடைந்துள்ளனர். சென்னை அண்ணா நகர் காவல் நிலையத்தில் சரண் அடைந்துள்ள 8 பேரிடம் தீவிர விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. இதுகுறித்து பேசிய கூடுதல் ஆணையர் அஸ்ரா கார்க், "தற்போது 8 பேரையும் கைது செய்துள்ளோம். விசாரணை மேற்கொண்டு கொலை குறித்த முழுமையான காரணம் தெரியவரும்” என்றார்.

BSP Armstrong Murder: தமிழகத்தை அதிரவிட்ட ஆம்ஸ்ட்ராங் கொலை.. சரணடைந்த 8 பேர்!

ஆம்ஸ்ட்ராங்

Updated On: 

06 Jul 2024 08:06 AM

சரணடைந்த 8 பேர்: பகுஜன் சமாஜ் மாநிலத் தலைவர் ஆம்ஸ்ட்ராங் சென்னையில் வெட்டி படுகொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை கிளப்பியுள்ளது.. தமிழ்நாடு பகுஜன் சமாஜ் மாநில தலைவராக பதவி வகித்து வந்தவர் ஆம்ஸ்ட்ராங். இந்நிலையில் நேற்று இரவு சென்னை, பெரம்பூரில் தனது வீட்டின் அருகே நின்றுக்கொண்டிருந்த நிலையில், உணவு டெலிவரி செய்பவர்களை போல இரண்டு இருசக்கர வாகனத்தில் வந்த மர்ம கும்பல் அவரை அரிவாளால் சரமாரிய வெட்டியது. இதில் படுகாயமடைந்த ஆம்ஸ்ட்ராங், மீட்டுகப்பட்டு கிரீம்ஸ் சாலையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்ட நிலையில், சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இந்த கொலை சம்பவம் தொடர்பாக 6 தனிப்படைகள் அமைத்து தேடி வருகின்றனர். இந்த நிலையில், ஆம்ஸ்ட்ராங்கை கொலை செய்ததாக 8 பேர் காவல்நிலையத்தில் சரண் அடைந்துள்ளனர்.

சென்னை அண்ணா நகர் காவல் நிலையத்தில் சரண் அடைந்துள்ள 8 பேரிடம் தீவிர விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. இதுகுறித்து பேசிய கூடுதல் ஆணையர் அஸ்ரா கார்க், “தற்போது 8 பேரையும் கைது செய்துள்ளோம். விசாரணை மேற்கொண்டு கொலை குறித்த முழுமையான காரணம் தெரியவரும். 10 தனிப்படைகளை அமைத்து நாங்கள் விசாரித்து வருகிறோம். கொலையில் சில கூரிய ஆயுதங்கள் பயன்படுத்தப்பட்டுள்ளன. பிரேத பரிசோதனைக்கு பிறகு முழு தகவல் கிடைக்கும்” என்றார்.

Also Read: பகுஜன் சமாஜ் கட்சியின் மாநிலத் தலைவர் ஆம்ஸ்ட்ராங் வெட்டிக்கொலை.. சென்னையில் பகீர் சம்பவம்

என்ன நடந்தது?

52 வயதான ஆம்ட்ஸ்ராங் பெரம்பூர் வேணுகோபால் சாம் தெருவில் வசித்து வந்தார். அப்போது வீட்டிற் வெளியே நின்று கொண்டிருந்தபோது இருசக்கர வாகனத்தில் வந்த 6 பேர் கொண்ட மர்ம கும்பல் அவர் மீது சரமாரியாக அரிவாளால் வெட்டி தாக்குதல் நடத்தியுள்ளது. இதில் படுகாயம் அடைந்த அம்ஸ்ட்ராக் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில், சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். உயிரிழந்த ஆம்ஸ்ட்ராங்கின் உடல் பிரேத பரிசோதனைக்காக சென்னை ராயப்பேட்டை அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டது. தகவல் அறிந்த பகுஜன் சமாஜ் கட்சி உறுப்பினர்கள் மற்றும் அவரது உறவினர்கள் மருத்துவமனையில் குவிந்துள்ளனர். மேலும் குற்றவாளிகளை விரைந்து கைது செய்து உரிய தண்டனை வழங்க வேண்டும் என கூறி அவரது ஆதரவாளர்கள் சாலை மறியலில் ஈடுப்பட்டனர்.

குவியும் கண்டனங்கள்:

எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி தனது எக்ஸ் தளத்தில் பதிவிட்டிருப்பதாவது, “பகுஜன் சமாஜ் கட்சியின் தமிழ்நாடு மாநிலத் தலைவர்  ஆம்ஸ்ட்ராங் சென்னை பெரம்பூர் பகுதியில் மர்ம நபர்களால் வெட்டிப் படுகொலை செய்யப்பட்டார் என்ற செய்திகேட்டு மிகுந்த அதிர்ச்சியும் துயருமுற்றேன். ஒரு தேசிய கட்சியின் மாநிலத் தலைவர் பொறுப்பில் உள்ளவர் படுகொலை செய்யப்படுகிறார் எனில், இதற்கு மேல் இந்த விடியா திமுக ஆட்சியில் சட்டம் ஒழுங்கை என்னவென்று சொல்லி விமர்சிப்பது? கொலை செய்வதற்கான தைரியம் குற்றவாளிகளுக்கு எப்படி வருகிறது? ஆர்ம்ஸ்ட்ராங் அவர்களின் படுகொலையில் தொடர்புள்ள அனைவரையும் கைதுசெய்து கடும் சட்ட நடவடிக்கை எடுப்பதுடன், அன்னாரது இறுதி ஊர்வலம் எவ்வித இடையூறுமின்றி அமைதியான முறையில் நடைபெற்று அவரது உடல் நல்லடக்கம் செய்யப்படுவதை உறுதிசெய்யுமாறு முதல்வர் ஸ்டாலின் அவர்களை வலியுறுத்துகிறேன்” என்றார்.

தொடர்ந்து, பாஜக தலைவர் மாநில தலைவர் கூறுகையில், “நம் சமூகத்தில் வன்மறைக்கும் மிருகத்தனத்துக்கு இடமில்லை. ஆனால், கடந்த 3 ஆண்டு கால திமுக ஆட்சியில் தமிழகத்தில் அதுவே வழக்கமாகி விட்டது. தமிழகத்தின் சட்டம் ஒழுங்கை சீர்குலைத்துவிட்டு மாநிலத்தின் முதல்வராகக் தொடரும் தார்மீக உரிமை தனக்கு இருக்கிறதா என்று ஸ்டாலின் அவர்கள் தன்னையே கேட்டுக் கொள்ள வேண்டும்” என எக்ஸ் தளத்தில் குறிப்பிட்டுள்ளார்.

Also Read: நண்பன் ஆம்ஸ்ட்ராங் கொலை.. மருத்துவமனையில் கதறி அழுத இயக்குநர் பா.ரஞ்சித்!

 

நட்ஸ் சாப்பிடுவதால் உடலுக்கு கிடைக்கும் நன்மைகள்!
தாமரை விதை எனப்படும் மக்கானாவில் இப்படி ஒரு விஷயம் இருக்கா?
மோட்டோ போன்களுக்கு அதிரடி தள்ளுபடி வழங்கும் பிளிப்கார்ட்!