5
Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வெப் ஸ்டோரீஸ்வணிகம்விளையாட்டுகல்விடெக்னாலஜி

BSP Armstrong Murder: ஆம்ஸ்ட்ராங் உடல் இன்று நல்லடக்கம்.. பலத்த போலீஸ் பாதுகாப்பு!

ஆம்ஸ்ட்ராங்கின் உடல் இன்று நல்லடக்கம் செய்யப்படுகிறது. அவரது உடலை பெரம்பூரில் உள்ள பகுஜன் சமாஜ்வாதி கட்சி அலுவலகத்தில் அடக்கம் செய்ய குடும்பத்தினர் தரப்பில் கோரிக்கை வைக்கப்பட்ட நிலையில், சென்னை மாநகராட்சி அனுமதி கொடுக்கவில்லை. இதனை அடுத்து, ஆம்ஸ்ட்ராங் குடும்பத்தினர் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு அளித்தனர். இந்த மனு இன்று அவசர வழக்காக இன்று விசாரிக்கப்படுகிறது. உயர்நீதிமன்ற கொடுக்கப்போகும் தீர்ப்பில் தான் ஆம்ஸ்ட்ராங் உடல் எங்கு நல்லடக்கம் செய்யப்படும் என்பது தெரியவரும்.

BSP Armstrong Murder: ஆம்ஸ்ட்ராங் உடல் இன்று  நல்லடக்கம்.. பலத்த போலீஸ் பாதுகாப்பு!
ஆம்ஸ்ட்ராங்
umabarkavi-k
Umabarkavi K | Updated On: 07 Jul 2024 08:57 AM

ஆம்ஸ்ட்ராங் உடலுக்கு இன்று நல்லடக்கம்: சென்னை பெரம்பூர் பகுதியைச் சேர்ந்தவர் ஆம்ஸ்ட்ராங் (52). இவர் பகுஜன் சமாஜ் கட்சியின் மாநிலத் தலைவராக இருந்தார். சுமார் 20 ஆண்டுகளாக அந்த கட்சியின் பொறுப்பில் இருந்து வருகிறார். இந்த நிலையில், நேற்றுமுன்தினம் இரவு பெரம்பூரில் தனது வீட்டின் அருகே நின்றுக்கொண்டிருந்த நிலையில், உணவு டெலிவரி செய்பவர்களை போல இரண்டு இருசக்கர வாகனத்தில் வந்த மர்ம கும்பல் அவரை அரிவாளால் சரமாரிய வெட்டியது. இதில் படுகாயமடைந்த ஆம்ஸ்ட்ராங், மீட்டுகப்பட்டு கிரீம்ஸ் சாலையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்ட நிலையில், சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். தொடர்ந்து, அவரது உடல் ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டு பிரேத பரிசோதனை செய்யப்பட்டது.

அதன் பிறகு அயனாவரத்தில் உள்ள அவரது வீட்டிற்கு கொண்டு செல்லப்பட்டு இறுதி சடகுகுள் செய்யப்பட்டன. தற்போது பொதுமக்கள் அஞ்சலிக்காக பெரம்பூரில் ஆம்ஸ்ட்ராங்கின் உடல் வைக்கப்பட்டுள்ளது. ஏரளாமான மக்கள் ஆம்ஸ்ட்ராங் உடலுக்கு அஞ்சலி செலுத்தி வருகின்றனர். பகுஜன் சமாஜ் கட்சியின் தேசிய தலைவர் மாயாவதி இன்று நேரில் வந்து அஞ்சலி செலுத்த உள்ளார். இதனை அடுத்து அப்பகுதி முழுவதும் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

இதனை தொடர்ந்து, ஆம்ஸ்ட்ராங்கின் உடல் இன்று நல்லடக்கம் செய்யப்படுகிறது. அவரது உடலை பெரம்பூரில் உள்ள பகுஜன் சமாஜ்வாதி கட்சி அலுவலகத்தில் அடக்கம் செய்ய குடும்பத்தினர் தரப்பில் கோரிக்கை வைக்கப்பட்ட நிலையில், சென்னை மாநகராட்சி அனுமதி கொடுக்கவில்லை. இதனை அடுத்து, ஆம்ஸ்ட்ராங் குடும்பத்தினர் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு அளித்தனர். இந்த மனு இன்று அவசர வழக்காக இன்று விசாரிக்கப்படுகிறது. உயர்நீதிமன்ற கொடுக்கப்போகும் தீர்ப்பில் தான் ஆம்ஸ்ட்ராங் உடல் எங்கு நல்லடக்கம் செய்யப்படும் என்பது தெரியவரும்.

Also Read: கள்ளச்சாராயம் குடித்து உயிரிழந்தவர்களுக்கு எப்படி ரூ.10 லட்சம் தர முடியும் ? அரசு விளக்கம் அளிக்க உயர்நீதிமன்றம் உத்தரவு..

11 பேர் கைது:

ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கு தொடர்பாக 11 பேரை போலீசார் கைது செய்தனர். கைதான 11 பேரையும் 15 நாட்கள் நீதிமன்ற காவலில் சிறையில் அடைக்க எழும்பூர் நீதிமன்ற பொறுப்பு நீதிபதி பரமசிவம் உத்தரவிட்டார். இவர்கள் அளித்த வாக்குமூலத்தின்படி, புளியந்தோப்பைச் சேர்ந்த ஆற்காடு சுரேஷுக்கும் ஆம்ஸ்ட்ராங்குக்கும் இடையே பல ஆண்டுகளாக முன்விரோதம் இருந்து வந்தது. ஆம்ஸ்ட்ராங்கின் நெருங்கிய நண்பரான தென்னரசு கடந்த 2015ஆம் ஆண்டு ஆற்காடு சுரேஷ் தரப்பால் வெட்டிக் கொலை செய்யப்பட்டார்.

இந்த வழக்கில் ஆற்காடு சுரேஷின் சகோதரர் பொன்னை பாலு முக்கிய எதிரியாக சேர்க்கப்பட்டிருந்தார். இந்த சூழலில், எழும்பூர் நீதிமன்றத்தில் வழக்கு விசாரணைக்காக வந்த ஆற்காடு சுரேஷ் கடந்த ஆண்டு வெட்டிக் கொலை செய்யப்பட்டார். அதேவேளையில் ஆம்ஸ்ட்ராங்கின் கூட்டாளி ஒற்றைக் கண் ஜெயபால் கைதானார். ஆற்காடு சுரேஷ் கொலை வழக்கின் சாட்சியான மாதவன் சில மாதங்களுக்கு முன் வெட்டிக் கொலை செய்யப்பட்டார். இந்த நிலையில் தான் ஆம்ஸ்ட்ராங் வெட்டிக் கொலை செய்யப்பட்டதாக தெரிவிக்கப்பட்டது.

மேலும், ஆம்ஸ்ட்ராங் எனது அண்ணனை கொலை செய்தது மட்டுமில்லாமல் என்னையும் தொடர்ந்து மிரட்டி வந்தார். இதனால் ஏற்பட்ட பயத்தில் மனைவி என்னைவிட்டு பிரிந்து சென்றுவிட்டார். ஆம்ஸ்ட்ராங் தரப்பு என்னை கொலை செய்வதற்கு முன்பும், எனது அண்ணன் கொலைக்கு பழி தீர்க்கவும் அவரை செய்தேன் என வாக்குமூலம் அளித்துள்ளனர்.

Also Read: 3 குற்றவியல் சட்டங்கள் – ”நாட்டை சர்வாதிகார தன்மை நோக்கி நகர்த்தும்” – அமைச்சர் துரைமுருகன்..

Latest News