Amstrong Murder Case: ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் குற்றப்பத்திரிக்கை தாக்கல்.. ஏ1,ஏ2, ஏ3 குற்றவாளிகள் யார்?

சுமார் 20 ஆண்டுகளாக அந்த கட்சியின் பொறுப்பில் இருந்து வருகிறார். இந்த நிலையில், ஜூலை 5 ஆம் தேதி இரவு பெரம்பூரில் தனது வீட்டின் அருகே நின்றுக்கொண்டிருந்த நிலையில், உணவு டெலிவரி செய்பவர்களை போல இரண்டு இருசக்கர வாகனத்தில் வந்த மர்ம கும்பல் அவரை அரிவாளால் சரமாரிய வெட்டியது. இதில் படுகாயமடைந்த ஆம்ஸ்ட்ராங், மீட்டுகப்பட்டு கிரீம்ஸ் சாலையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்ட நிலையில், சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இந்த சம்பவம் தொடர்பாக பிரபல ரவுடிகளான நாகேந்திரன், பொன்னை பாலு உட்பட 28 நபர்களை போலீசார் கைது செய்தனர்.

Amstrong Murder Case: ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் குற்றப்பத்திரிக்கை தாக்கல்.. ஏ1,ஏ2, ஏ3 குற்றவாளிகள் யார்?

கோப்பு புகைப்படம்

Published: 

03 Oct 2024 11:36 AM

பகுஜன் சமாஜ் கட்சியின் மாநிலத் தலைவர் ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் போலீசார் குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்துள்ளனர். இதில் ஏ1 குற்றவாளியாக நாகேந்திரன், ஏ2 குற்றாளியாக சம்போ செந்தில், ஏ3 குற்றவாளியாக அஸ்வத்தாமன் சேர்க்கப்பட்டுள்ளனர். சென்னை பெரம்பூர் பகுதியைச் சேர்ந்தவர் ஆம்ஸ்ட்ராங் (52). இவர் பகுஜன் சமாஜ் கட்சியின் மாநிலத் தலைவராக இருந்தார். சுமார் 20 ஆண்டுகளாக அந்த கட்சியின் பொறுப்பில் இருந்து வருகிறார். இந்த நிலையில், ஜூலை 5 ஆம் தேதி இரவு பெரம்பூரில் தனது வீட்டின் அருகே நின்றுக்கொண்டிருந்த நிலையில், உணவு டெலிவரி செய்பவர்களை போல இரண்டு இருசக்கர வாகனத்தில் வந்த மர்ம கும்பல் அவரை அரிவாளால் சரமாரிய வெட்டியது.

இதில் படுகாயமடைந்த ஆம்ஸ்ட்ராங், மீட்டுகப்பட்டு கிரீம்ஸ் சாலையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்ட நிலையில், சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இந்த சம்பவம் தொடர்பாக பிரபல ரவுடிகளான நாகேந்திரன், பொன்னை பாலு உட்பட 28 நபர்களை போலீசார் கைது செய்தனர்.

மேலும் படிக்க: மத்திய பெய்ரூட்டில் இஸ்ரேல் தாக்குதல்.. பணவீக்கம் குறித்து முற்றுபுள்ளி வைத்த அமெரிக்கா..

ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் பிரபல ரவுடியான திருவேங்கடம் ஜூலை மாதம் என்கவுண்டரில் கொலை செய்யப்பட்டார். ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட 11 பேரில் இவரும் ஒருவர். கொலை நடந்த இடத்திற்கு 11 பேரையும் அழைத்து சென்று போலீசார் விசாரணை மேற்கொள்ள முயற்சித்த போது போலீசாரால் சுட்டுக்கொலை செய்யப்பட்டார்.

இந்த நிலையில் ஆம்ஸ்ட்ராங்கை கொல்ல ஸ்கெட்ச் போட்டுக் கொடுத்ததாக மறைந்த ரவுடி ஆற்காடு சுரேஷின் நண்பரான ரவுடி சீசிங் ராஜாவை சென்னை தனிப்படை போலீசார் தீவிரமாக தேடி வந்தனர். ஆந்திர மாநிலம் கட்டப்பாவில் வைத்து ரவுடி சீசிங் ராஜாவை தனிப்படை போலீசார் குண்டுகட்டாக கைது செய்து சென்னைக்கு அழைத்து வந்தனர். இந்த நிலையில் கைது செய்யப்பட்ட சீசிங் ராஜாவை சென்னை தனிப்படை போலீசார் விசாரணை மேற்கொண்டு வந்தனர்.

மேலும் படிக்க: மாநாட்டிற்கு தயாராகும் த.வெ.க.. பந்தல் கால் நடும் விழாவில் விஜய் பங்கேற்பு?

இந்நிலையில் நீலாங்கரை அக்கறை அருகே உள்ள பக்கிங்காம் கால்வாயில் ஆயுதங்கள் பதுக்கி வைத்திருப்பதாக சிசிங் ராஜா தெரிவித்ததின் பெயரில், அதை பறிமுதல் செய்வதற்காக வேளச்சேரி காவல் ஆய்வாளர் விமல் தலைமையிலான போலீசார் சென்றனர். அப்போது அவர் பதுக்கி வைத்திருந்த துப்பாக்கியால் போலீசாரை சுட முயற்சித்தார். பாதுகாப்பு கருதி போலீசார் அவரை என்கவுண்டரில் சுட்டு கொலை செய்தனர்.

ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் 2 பிரபல ரவுடிகள் என்கவுண்டரில் கொலை செய்யப்பட்ட விவகாரம் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கு தொடர்பாக காவல் துறையினர் நடவடிக்கை எடுத்து வருகிறது. தற்போது வரை 28 பேரை போலீசார் கைது செய்துள்ளனர். அதில் 25 பேர் மீது குண்டர் சட்டம் போடப்பட்டுள்ளது.

மேலும் படிக்க: மது மற்றும் போதைப்பொருள் ஒழிப்பிற்கான கையெழுத்து இயக்கம்.. விசிக மாநாட்டில் 12 தீர்மானங்கள் நிறைவேற்றம்..

இந்நிலையில் ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் செம்பிய போலீசார் குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்துள்ளனர். 5000 பக்கங்கள் கொண்ட குற்றப்பத்திரிக்கை சென்னை எழும்பூர் குற்றவியல் நீதிமன்றத்தில் செம்பியல் போலீசார் தாக்கல் செய்துள்ளனர். அதில் ஏ1, ஏ2, ஏ3 குற்றவாளிகளின் பெயர் சேர்க்கப்பட்டுள்ளது.

ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் ஏ1 குற்றவாளியாக நாகேந்திரன், ஏ2 குற்றாளியாக சம்போ செந்தில், ஏ3 குற்றவாளியாக அஸ்வத்தாமன் சேர்க்கப்பட்டுள்ளனர். ஆம்ஸ்ட்ராங் கொலைக்கு சிறையில் இருந்து திட்டம் தீட்டிய நாகேந்திரன் முதல் குற்றவாளியாக சேர்க்கப்பட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

பப்பாளி விதையில் கொட்டிக்கிடக்கும் நன்மைகள்
தினமும் ஒரு ஸ்பூன் தேங்காய் எண்ணெய் குடித்தால் என்னாகும்?
இரத்த சோகை உள்ளவர்கள் எடுத்துக்கொள்ள வேண்டிய உணவுகள்..!
காலையில் 10 நிமிடங்கள் ஓடுவதால் கிடைக்கும் நன்மைகள்..!